Wednesday, 30 September 2009

விண்டோஸ் ஏழில் பலூன் அறிவிப்புகளை நீக்க..,

விண்டோஸ் ஏழில் டாஸ்க் பாரில் உள்ள நோட்டிபிகேஷன் பகுதியில், அடிக்கடி வருகின்ற நமக்கு தேவையற்ற பலூன் அறிவிப்புகளை நீக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.



 இதற்கு நாம் Local Group Policy Editor க்கு செல்ல வேண்டும்.   Search Box -ல் gpedit.msc என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.



இப்பொழுது திறக்கும் Local Group Policy Editor விண்டோவில், இடது புற பேனில்,
User Configuration -> Administrative Templates -> Start Menu and Taskbar ஐ கிளிக் செய்யவும்.



இனி இடதுபுறமுள்ள Settings ஐ கிளிக் செய்து, ஸ்க்ரோல் செய்து "Turn off all balloon notifications" என்பதை இரட்டை கிளிக் செய்யவும். இனி வரும் திரையில் Enabled என்பதை தேர்வு செய்து Apply கொடுத்து OK கிளிக் செய்யவும். 


அவ்வளவுதான்.

ஒருவேளை டாஸ்க் பாரில் உள்ள அறிவிப்பு பகுதியில் எதுவுமே வேண்டாம் என நீங்கள் முடிவு செய்தால், இதில் உள்ள "Hide the notification area" என்பதை இரட்டை கிளிக் செய்து, அடுத்து வரும் திரையில் Enabled என்பதை தேர்வு செய்து Apply கொடுத்து OK கிளிக் செய்யவும். 






.

5 comments:

  1. நீண்ட நாட்களுக்கு பிறகு...

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்30 September 2009 at 7:01 am

    நன்றி பெரோஸ்

    ReplyDelete
  3. நான் இன்னும் 7க்கு மாறவில்லை. இருந்தாலும் அட்வான்ஸ்டு நன்றி!

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்1 October 2009 at 4:12 am

    நன்றி திரு. செல்வகுமார்!

    ReplyDelete
  5. pls see this link http://sashiga.blogspot.com/2009/10/blog-post.html

    ReplyDelete