Monday, 28 September 2009

வேர்டு டாக்குமெண்ட் ரெகவெரி

நாம் மைக்ரோசாப்ட் வேர்டில் ஏதாவது டாக்குமெண்டை பல பக்கங்கள் டைப் செய்து விட்டு சில சமயங்களில் சேமிக்காமலேயே வேர்டு-ஐ மூடி விடுவோம். பிறகு அந்த டாக்குமெண்ட் மறுபடி வேண்டுமே என்ன செய்வது என திண்டாடி, வேறு வழியில்லாமல், மறுபடி உக்கார்ந்து டைப் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

இப்படி சேமிக்காமல் விட்ட கோப்புகளை மறுபடி பெறுவது எப்படி?

வேர்டை திறந்து கொள்ளுங்கள். Tools மெனுவிற்கு சென்று, Options ஐ கிளிக் செய்யுங்கள். இதில் File Locations என்ற டேபை கிளிக் செய்யுங்கள். இங்கு AutoRecover files என்பதற்கு நேராக blank ஆக இருந்தால், உங்கள் டாக்குமெண்டை ரெகவர் செய்ய இயலாது. அல்லாமல், Location தரப்பட்டிருந்தால் அந்த குறிப்பிட்ட லோகேஷனுக்குச் (விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில்)  சென்று, டாகுமெண்டை திறந்துவிடலாம்.  



 



 AutoRecovery ஐ enable செய்து வைப்பது எப்பொழுதுமே பாதுகாப்பானதாகும். இதை எப்படி செய்வது.

Tools மெனுவிற்குச் சென்று Options சென்று Save என்ற டேபில் உள்ள  'Save AutoRecover info every:' என்பதை தேவு செய்து, பின் அதற்கான நேரத்தையும் (உதாரணமாக 5 நிமிடங்கள்) கொடுத்து, File Locations டேபிற்குச் சென்று AutoRecover Files ஐ கிளிக் செய்து, "Modify..."  -ல் அதற்கான லோகேஷனையும் கொடுத்துவிட்டால் போதும்.







.

3 comments:

  1. வானம்பாடிகள்28 September 2009 at 5:13 am

    ரொம்ப தேங்க்ஸ். நான் அடிக்கடி மாட்டுவேன் இப்படி.

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்28 September 2009 at 5:19 am

    நன்றி தலைவா!

    ReplyDelete
  3. நல்ல பதிவு , முயற்சிக்கு நன்றி

    ReplyDelete