Saturday, 26 September 2009

விண்டோஸ் ஏழு மற்றும் விஸ்டாவில் ரிப்பேர் டிஸ்க் உருவாக்குவது..,

நமது கணினியின் வன் தட்டில் இயங்குதளம் உள்ள பார்டிஷனை ஒரு இமேஜாக சிடி அல்லது டிவிடிகளில்  எடுத்து வைத்துக் கொண்டால், எப்பொழுதாவது உங்கள் கணினி திடிரென கிராஷ் ஆகும்பொழுது, அந்த இமேஜை ரீஸ்டோர் செய்வதன் மூலமாக நமது கணினியை இயங்குதளம் மற்றும் உங்கள் கோப்புகள், ட்ரைவர்கள் ஆகிய அனைத்தையும்,  பழைய இயங்கும் நிலைக்கே கொண்டு வர இயலும். இதற்கு Ghost, True image போன்ற மேன்ப்ருட்கள் இருந்தாலும், விண்டோஸ் ஏழு மற்றும் விஸ்டாவில் அதனுள் இணைந்த பேக்கப் கருவிகள்  மூலமாக எளிதாகவும், பாதுகாப்பாகவும் செய்ய இயலும். 

உங்கள் கணினி நல்ல முறையில் இயங்கும் நிலையில் உள்ள பொழுது பேக்கப் எடுப்பது நல்லது.

விண்டோஸ் ஏழில் இமேஜ் உருவாக்குவது எப்படி?
Start இற்கு சென்று Getting Started -> Back up your files க்ளிக் செய்யவும்.



அடுத்து  இடதுபுறமுள்ள Create a system image  என்ற  hyperlink ஐ கிளிக் செய்யவும். 



இமேஜை எங்கு சேமிக்க  வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும், இதை நீங்கள் ஒரு  external drive அல்லது DVD அல்லது ஏதாவது நெட்வொர்க் பகுதியில் சேமித்துக் கொள்ளலாம்.


அடுத்து வரும் Confirmation திரையில் இமேஜ் கோப்பின் அளவை பார்த்து, அதற்கு தகுந்தாற் போல Back சென்று வேறு ட்ரைவை தேர்வு செய்யலாம்.

 இப்பொழுது வரும் ப்ராக்ரஸ் மீட்டரில், எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை பார்க்கலாம். (external ட்ரைவில் 15GB அளவுள்ள கோப்பு 20 நிமிடங்கள் வரை எடுக்கலாம்)


இந்த பணி முடிந்தவுடன் create a system repair disc என்ற டயலாக் பாக்ஸில் 'Yes' கிளிக் செய்து, அடுத்த திரையில் சரியான பாதுகாப்பான லொகேஷனை கொடுக்கவும்.



இப்படி உருவாக்கப்படும் Recovery disc ஐ உபயோகித்து, (எப்பொழுதாவது கணினி கிராஷ் ஆகும் பொழுது,)  பூட் செய்து System Recovery Options வசதியின் மூலமாக கணினியை எளிதாக, பழைய இயங்கும் நிலைக்கு கொண்டுவர இயலும்.


 விஸ்டா உபயோகிப்பவர்களுக்கு:-


விஸ்டா Ultimate, Business, மற்றும் Enterprise  பதிப்புகளில் இமேஜை உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் Vista Home மற்றும் Home Premium  பதிப்புகளில் இந்த வசதி தரப்படவில்லை.

விஸ்டாவிலும் இதே மேலே சொன்ன முறையை பின்பற்றலாம். Backup and Restore Center க்கு செல்ல Search Bar ல் backup என டைப் செய்து  பின்னர் Backup and Restore Center என்பதை கிளிக் செய்யவும்.


பிறகு வரும் திரையில் Back up computer என்ற பொத்தானை கிளிக் செய்து Wizard ஐ தொடரவும்.





.


10 comments:

  1. அருமை... தமிழில் இது போன்று அழகாக தொழில் நுட்பம் எழுதுபவர்கள் குறைவு. நீங்க கலக்குறீங்க. தொடருங்கள்

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்26 September 2009 at 3:01 am

    நன்றி வேல்!

    ReplyDelete
  3. பொன்மலர்26 September 2009 at 3:22 am

    nice article. you r going well. keep it up.

    ReplyDelete
  4. வானம்பாடிகள்26 September 2009 at 3:43 am

    நன்றி தலைவா.

    ReplyDelete
  5. நித்தியானந்தம்26 September 2009 at 5:12 am

    Nice one surya "Prevention is Better than Cure"very usefull info.....

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்26 September 2009 at 5:35 am

    நன்றி நித்தியானந்தம்

    ReplyDelete
  7. சூர்யா ௧ண்ணன்26 September 2009 at 5:35 am

    நன்றி தலைவா!

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்26 September 2009 at 5:35 am

    நன்றி பொன்மலர்!

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல் நன்றி சூர்யாகண்ணன்.இந்த இடுகைக்கு சம்பந்தம் இல்லா கேள்வி..Feedburner RSS Feed ல் நம்முடைய சந்தாதாரர் கணக்கு காட்ட நமது RSS feed ஐ Feedburner க்கு ரூட் செய்தால் தமிழ் மணத்தில் இணைப்பதில் பிரச்சனை வருகிறது மற்றும் நமது பெயர் தமிழ்மணத்தில் தெரிவதில்லை..இதன் காரணமாக readers count தெரிந்து கொள்ள முடிவதில்லை.. ஆனால் நீங்கள் இதை செய்து உள்ளீர்கள்..எப்படி என்று கூற முடியுமா?

    ReplyDelete
  10. Why You did not come for windows 7 meeting ar cbe?

    ReplyDelete