பலரும் YouTube வீடியோக்களை தங்களது கணினியில் தரவிறக்கி பார்ப்பதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். இப்படி YouTube வீடியோக்களை தரவிறக்க பல மென்பொருட்கள் மற்றும் வலைப்பக்கங்கள் இருந்தாலும், YouTube Downloader HD என்ற இலவச மென்பொருள் கருவி, நல்ல தரமானதாகவும், விரைவாக தரவிறக்கம் செய்யும்படியாகவும், பிற வீடியோ வடிவிற்கு மாற்றும் வசதியோடும் உள்ளது.
(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இதனை நிறுவும் பொழுது இறுதி திரையில் தேவையான வசதியை மட்டும் தேர்வு செய்து Finish பொத்தானை அழுத்துங்கள்.
இனி இந்த கருவியில் தேவையான தரத்தை (FLV video 240p / Medium quality/HQ 360p/HD 1080p) Download என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பிறகு, YouTube தளத்தில் உங்களுக்கு தேவையான வீடியோ உள்ள பக்கத்திற்கு செல்லுங்கள்.
அந்த பக்கத்தின் URL ஐ அட்ரஸ் பாரிலிருந்து காப்பி செய்து கொண்டு, இந்த YouTube Downloder HD மென்பொருள் கருவியில் உள்ள Video URL என்பதற்கு நேராக பேஸ்ட் செய்து விடுங்கள்.
உங்கள் வன்தட்டில் எந்த ஃபோல்டரில் சேமிக்க வேண்டும் என்பதை Save to பகுதிக்கு நேராக கொடுத்து Download பொத்தானை அழுத்துங்கள்.
ஒருவேளை நீங்கள் தேர்வு செய்திருந்த quality யில் அந்த குறிப்பிட்ட வீடியோ இல்லையெனில், அதற்கடுத்த குறைந்த quality யில் முயற்சி செய்யட்டுமா? என்ற வசனப்பெட்டி தோன்றும், இதில் Yes பொத்தானை அழுத்துங்கள்.
அட்டகாசமான வேகத்தில் வீடியோ தரவிறக்கப்படுவதை பார்க்கலாம்.
இதன் வேகமும் தரமும், பிற கருவிகளை விட அருமையாக உள்ளது.
பிற AVI, MP4 போன்ற வடிவங்களில் மாற்றி சேமிக்கவும் இதில் வசதி உள்ளது.
அருமை சார்,
ReplyDeleteஏற்கனவே வேறு மென்பொருளைப் பயன்படுத்துகிறேன் இருந்தாலும், YouTube Downloader HD என்ற மென்பொருள் நல்ல தரமானதாகவும், விரைவாக தரவிறக்கம் செய்யும்படியாகவும், பிற வீடியோ வடிவிற்கு மாற்றும் வசதியோடும் பயன்படுத்திப் பார்க்கிறேன்
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
அருமை சார்,
ReplyDeleteஏற்கனவே வேறு மென்பொருளைப் பயன்படுத்துகிறேன் இருந்தாலும், YouTube Downloader HD என்ற மென்பொருள் நல்ல தரமானதாகவும், விரைவாக தரவிறக்கம் செய்யும்படியாகவும், பிற வீடியோ வடிவிற்கு மாற்றும் வசதியோடும் பயன்படுத்திப் பார்க்கிறேன்
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
அருமையான தகவல். பகிர்வுக்கு நன்றி சகோ.
ReplyDeleteநண்பருக்கு வணக்கம்.
ReplyDeleteஉங்கள் மின் அஞ்சல் முகவரி இதில் இல்லாத காரணத்தால் இந்த தகவல் உங்கள் பார்வைக்கு.
வலைதளத்தில் யூ டியூப் போன்ற ஒளி ஒலி காட்சிகளை பதிவேற்றுவதில் எனக்கு இன்னும் சற்று குழப்பமாகவே உள்ளது. ஆயத்த ஆடை காணோளியை தனியாக குறுந்தகட்டில் மாற்றி எப்படியோ ஏற்றி விட்டேன். பெரிதான சிரமம் இல்லை.
மற்ற யூ டியூப் ல் உள்ள நான் ரசித்த காட்சிகளை எப்படி சேமித்து பதிவேற்றுவது என்று தெரியவில்லை. குறிப்பிட்ட குறிசொல் கொடுத்து யூ டியூப் கொடுத்த வழிமுறைகளின் படி செயல்பட்டாலும் அப்லோடு ஆக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.
எனக்கு இந்த தொழில் நுட்ப சமாச்சாரம் என்றாலே அலர்ஜியாக இருக்கிறது. மரமண்டைக்கு ஏறமாட்டேன் என்கிறது.
அமெரிக்காவால் தடுக்கப்பட்டு வெளியில் அதிகம் புழக்கம் இல்லாத உலக யுத்தகங்கள் குறித்த குறுந்தகடு நண்பர் ஒருவரிடம் உள்ளது.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய மின் அஞ்சலுக்கு வரமுடியுமா?
http://deviyar-illam.blogspot.com
texlords@gmail.com
ReplyDelete.enaku mikavum thevaayaana thakaval !!
ReplyDelete.thanks AnnA !