நம்மில் பெரும்பாலும் அனைவரும் Facebook கணக்கை வைத்திருக்கிறோம். நாம் இணையத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது, Facebook இல் Chat செய்ய வேண்டியிருந்தால் ஒவ்வொரு முறையும், Facebook உள்ள டேபிற்கு அல்லது விண்டோவிற்கு சென்று Chat செய்யவேண்டியுள்ளது.
இவ்வாறு அன்றி, நமது நெருப்புநரி (Firefox) உலாவியில், சைடு பாரில் Facebook ஐ லோடு செய்து, இணைய பக்கங்களிலும், Facebook இலும் ஒரே சமயத்தில் பணி புரிய என்ன செய்யலாம்? என்பதை பார்க்கலாம்.
நெருப்புநரி உலாவியை திறந்து கொள்ளுங்கள். மேலே உள்ள மெனுவில் Bookmarks menu ஐ க்ளிக் செய்து, Organize Bookmarks ஐ க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது திறக்கும் Library விண்டோவில், Organize menu ஐ க்ளிக் செய்து New Bookmark க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது திறக்கும் New Bookmark வசனப்பெட்டியில், Name க்கு நேராக Facebook Chat (அல்லது ஏதோ ஒன்று) கொடுக்கவும். Location க்கு நேராக உள்ள பெட்டியில் http://www.facebook.com/presence/popout.php என்ற URL ஐ கொடுத்து கீழே உள்ள Load this bookmark in the sidebar ஐ தேர்வு செய்து, ADD பொத்தானை அழுத்தவும்.
இனி நெருப்புநரி உலாவியில் View menu ஐ திறந்து, Sidebar மற்றும் Bookmarks ஐ க்ளிக் செய்யவும்.
இப்பொழுது இடது புற சைடுபாரில் Facebook chat எங்குள்ளது என கண்டு, அதனை க்ளிக் செய்யவும்.
அவ்வளவுதான். இனி இணையத்தில் பிற வலைப்பக்கங்களில் உலாவியபடியே, Facebook chat செய்து கொள்ளலாம்.
.
மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
ReplyDeleteதெளிவான படங்களின் அருமையான விளக்கமான பயனுள்ள பதிவு சார். பகிர்வுக்கு நன்றி சூர்யா சார்.
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு...நன்றி சார்
ReplyDeleteuseful one
ReplyDeleteplease tell me for Chorme
மிகவும் பயனுள்ள விரிவான தகவல்! நன்றி சார்!
ReplyDelete