Saturday, 21 August 2010

கூகிள் க்ரோம்:- படங்களை கையாள ஒரு பயனுள்ள நீட்சி

நாம் இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது, Flickr போன்ற தளங்களில் காணும் புகைப்படங்களை முழுத்திரையில் மற்றும், ஸ்லைட் ஷோ வடிவில் காண கூகிள் க்ரோம் உலாவிக்கான ஒரு எளிய  நீட்சி SlideShow. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). 

இந்த தளத்தில் உள்ள Install பட்டனை க்ளிக் செய்து உங்கள் க்ரோம் உலாவியில் எளிதாக பதிந்து கொள்ளலாம். 


அட்ரஸ் பாரின் வலது புறம் இந்த நீட்சி பதிந்து விட்டதற்கான குறிப்பு தோன்றும். இந்த நீட்சியின் பட்டன் அல்லது லிங்க் எதுவும் உங்கள் உலாவியில் தோன்றாது.

ஆனால் இந்த SlideShow நீட்சி எந்தெந்த தளங்களில் வேலை செய்யுமோ, அந்தந்த தளங்கள் திறக்கப்படும் பொழுது, தானாகவே இது வேலை செய்ய ஆரம்பிக்கும். உங்களுக்கு தேவையான பதத்தை க்ளிக் செய்த பிறகு, அந்த குறிப்பிடட்ட படம் மட்டும் பெரிதாக திரையில் தோன்றும், பிற படங்கள் கீழே சிறிதாக SlideShow போல தோற்றமளிக்கும். 


இந்த நீட்சி Flickr போன்ற புகைப்பட தளங்களை விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நீட்சி என்பதில் ஐயமில்லை.
.

6 comments:

  1. ஆமாம் சூர்யா. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி.

    அப்புறம் ஆபீஸ் கிளாசிக் மெனு கொடுத்தமைக்கு ஒரு நன்றி :-)

    ReplyDelete
  3. அனைவருக்கும் பயன்படக்கூடியது. விளக்கங்கள் அருமை நண்பா

    ReplyDelete
  4. மிக நல்ல பதிவு!

    ReplyDelete
  5. Extension installation failure,could not create directory for unzipping என்றே தகவல் கிடைக்கிறது.நீட்சிகள் எதுவும் தரவிறக்கினாலும் உபயோகிக்கமுடியவில்லை.ஏதேனும் தீர்வு தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

    தங்களின் சேவைக்கு நன்றிகளும்... வாழ்த்துக்களும்...

    ReplyDelete