ஃபேஸ்புக்கில் எப்பொழுதெல்லாம் நீங்கள் லாகின் செய்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உங்களுக்காகவே காத்திருந்தது போல, Hi, How are you என நீங்கள் விரும்பாத நண்பர் சாட்டில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறாரா?
இது போன்ற ஒரு சில தொல்லைதரும் நண்பர்களுக்கு மட்டும் நீங்கள் offline -இல் இருப்பது போன்று தோன்றவைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
முதலில் உங்கள் Facebook கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள். பிறகு இடதுபுற பேனில் உள்ள Friends லிங்கை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது திறக்கும் Create List வசனப் பெட்டியில் ஏதாவது பெயரை கொடுங்கள். (Offline Friends)
Offline Friends என்ற பெயரில் ஒரு புதிய லிஸ்ட் உருவாகியிருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தொல்லைதரும் நண்பர்களை இணைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது Facebook chat ஐ திறந்து கொள்ளுங்கள்.
இங்கு Offline Friends லிஸ்டிற்கு நேராக உள்ள சிறிய பச்சை பொத்தானை க்ளிக் செய்து Offline மோடிற்கு மாறிக்கொள்ளலாம்.
இனி இவர்களின் தொல்லை உங்களுக்கு இருக்காது.
.
பகிர்விற்கு நன்றி கண்ணன்.
ReplyDeleteவாங்க சூர்யா
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeletenice idea but instead we can directly tell him, busy pls dont disturb.
ReplyDeleteஅருமை.......
ReplyDeleteமிக எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் அளவில் எழுதுகிறீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.