Saturday, 21 August 2010

இணைய வீடியோக்களை முழுத்திரையில் கண்டுகளிக்க

நம்மில் பலர் இணையத்தில் யூ ட்யுப் போன்ற தளங்களில் உள்ள வீடியோக்களை வழக்கமாக Google Chrome, Firefox, IE போன்ற இணைய உலாவியில்தான் பார்த்து வருகிறோம். இதில் நமக்கு சிறிய அளவில்தான் படங்களை காண முடிகிறது.

இதோ சுதந்திர இலவச மென்பொருளான VLC மீடியா ப்ளேயரில் இது போன்ற வீடியோக்களை முழுத் திரையில் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் தேவையான வலைப்பக்கத்திற்கு சென்று, நீங்கள் விரும்பும் வீடியோவிற்கான URL ஐ காப்பி செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக http://www.youtube.com/watch?v=mhRIs_XhM3U&feature=fvsr . இப்பொழுது VLC Media Player ஐ திறந்து கொண்டு, Media Menu வில் சென்று 


Open Network Stream வசதியை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் Open Media வசன்ப்பெட்டியில் Network டேபில், Please enter a network URL என்பதற்கு கீழாக உள்ள பெட்டியில் நீங்கள் காப்பி செய்த URL ஐ பேஸ்ட் செய்து கீழே உள்ள Play பொத்தானை சொடுக்குங்கள்.


ஓரிரு வினாடிகளுக்கு மேலே உள்ளது போன்ற திரை தோன்றி மறைந்த பிறகு, உங்கள் அபிமான வீடியோ VLC Player -ல் ஓடத்துவங்கும், இப்பொழுது வீடியோ திரையில் வழக்கம்போல இரட்டை க்ளிக் செய்து முழுத்திரையில் காண முடியும்.

 

.

13 comments:

  1. நன்றி தலைவா:)

    ReplyDelete
  2. now most of the stream players comes with a full screen option. However this will be of great help for those without this option

    ReplyDelete
  3. ஆஹா!
    ஆஹா!!
    ஆஹா!!!

    ReplyDelete
  4. youtube இல் இந்த வசதி இருக்கிறது மற்றும் HD வீடியோ பாத்து கொள்ளலாம்
    நல்ல பதிவு :)

    ReplyDelete
  5. In you Tube there is a full screen option, what is the difference between this and VLC, maybe better clarity?

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றிகள்

    ReplyDelete
  7. you tube இலேயே இந்த ஆப்ஷன் உள்ளதல்லவா...? இருந்தாலும் இதுவும் புதிய தகவல்தான்...

    ReplyDelete
  8. அட இது தெரியாம போச்சே....

    அருமை சார்... பயனுள்ள தகவல்
    தொடர்ந்து இன்னும் எதிர்பார்ப்புகளுடன்...

    உங்கள் மாணவன்...

    ReplyDelete
  9. நன்றி சூர்யா.
    இது போல் www.tamilwire.com இணையத்தில் உள்ள movie க்களை
    தரவிறக்க ஏதேனும் வழி இருக்கிறதா? unplug பயன் படுத்தி பார்த்தேன்.
    செயல்படவில்லை.

    ReplyDelete