Tuesday, 26 January 2010

PDF கோப்புகளை Word கோப்புகளாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்

நாம் மின்னஞ்சல் மற்றும் வலைத்தளங்களில் இருந்து எடுக்கும் PDF கோப்புகளை மாற்றியமைக்கவோ அல்லது அதில் உள்ள ஏதாவது டெக்ஸ்ட் / படங்களை நீக்கவோ நமக்கு Adobe Exchange / Acrobat Professional போன்ற மென்பொருட்கள் தேவைப்படும்.

ஆனால் இலவசமாக கிடைக்கும் Free PDF to Word Doc Converter என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)



இந்த இலவச மென்பொருளை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்வது மிகவும் எளிதானது. இதனை கணினியில் பதிந்து கொண்ட பிறகு, நாம் வேர்டு டாக்குமென்டாக மாற்ற விரும்பும் PDF கோப்பையும், கன்வெர்ட் செய்த பிறகு அதை எங்கு சேமிக்க வேண்டும் என்பதையும் தேர்வு செய்திட வேண்டும்.


 
பிறகு இதன் திரையிலுள்ள General Options என்ற பகுதியில் நமக்கு தேவையான மாற்றங்களை செய்துகொள்ள வேண்டும்.



(இந்த மென் பொருள் டெக்ஸ்ட் மட்டுமின்றி PDF கோப்பிலுள்ள படங்கள், வடிவங்கள் ஆகியவற்றை சிறிதும் மாற்றமின்றி விரைவாக Editable Word document ஆக மாற்றித்தருகிறது. )

தேவையான மாற்றங்களை செய்த பிறகு Convert to Word Document என்ற பொத்தானை அழுத்தினால் போதுமானது.




உங்களுக்குத் தேவையான மாற்றங்கள் செய்யக் கூடிய வகையிலான வேர்டு கோப்பு தயார்.
தமிழ் கோப்புகளும் மாற்ற முடிகிறது என்பது இதனுடைய சிறப்பம்சம். 




 
.


14 comments:

  1. முனைவர்.இரா.குணசீலன்26 January 2010 at 7:18 am

    பயனுள்ள பகிர்வு நண்பரே..இந்த மென்பொருளை நான் முன்பே பயன்படுத்தி வருகிறேன் மிகவும் பயனுள்ளதாகவுள்ளது.

    ReplyDelete
  2. யவனராணி26 January 2010 at 8:28 am

    நன்றி சூர்யா சார்...சில ப்ராஜெக்ட் ஒர்க்கின் போது கொஞ்சம் வேலை எளிமையாகும்.

    ReplyDelete
  3. நட்புடன் ஜமால்26 January 2010 at 5:50 pm

    ரொம்ப எளிமையாக இருக்கேநன்றி.----------------அந்த வேர்ட் பைலில் தட்டச்சிருப்பது :P

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்26 January 2010 at 8:40 pm

    நன்றி ஜமால்

    ReplyDelete
  5. சூர்யா ௧ண்ணன்26 January 2010 at 8:40 pm

    நன்றி யவன ராணி!

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்26 January 2010 at 8:40 pm

    நன்றி குணசீலன்!

    ReplyDelete
  7. இந்த மென் பொருள் காசு கேட்கிறதே?

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்26 January 2010 at 10:51 pm

    //makku plasthri said...இந்த மென் பொருள் காசு கேட்கிறதே?//வாழ் நாள் உபயோகத்திற்கு மட்டுமே காசு கேட்கிறது.. மற்றபடி.. அதன் தளத்திற்கு சென்று, அதில் கேட்கப்படும் கணித கேள்விக்கு பதில் அளித்தால் போதுமானது..இருந்தாலும்.. உங்களுடைய குறையை தீர்க்க.. கீழே உள்ள சுட்டியை காப்பி செய்து உங்கள் உலவியின் அட்ரஸ் பாரில் டைப் செய்து அங்கிருந்து மற்றொரு (காசு கேட்காத மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.http://rs225.rapidshare.com/files/126929397/PDF2Wordv3.rar

    ReplyDelete
  9. வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!!27 January 2010 at 6:40 am

    அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் இந்த பதிவு . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete
  10. பிரியமுடன் பிரபு27 January 2010 at 7:37 am

    நன்றி

    ReplyDelete
  11. இதைதான் தேடிட்டு இருந்தேன் நன்றி அண்ணே ...

    ReplyDelete
  12. தொடர்ந்து பதிவுகளை வழங்கும் சூரியாகண்ணன் அவர்களே! நன்றி

    ReplyDelete
  13. இளமுருகன்28 January 2010 at 4:12 pm

    நன்றி சார்

    ReplyDelete
  14. தொடர்ந்து பதிவுகளை வழங்கும் சூரியாகண்ணன் அவர்களே! நன்றி

    ReplyDelete