நாம் உருவாக்கும் பவர்பாயின்ட் கோப்புகளை ஃப்ளாஷ் கோப்புகளாக மாற்றி நமது வலைப் பக்கங்களில் உபயோகிக்க அல்லது நண்பர்கள் எவருக்காவது அனுப்ப ஏதாவது வழி இருக்கிறதா என பதிவுலக நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.
இதோ அவருக்கும் மற்றும் உங்களுக்காக, பவர் பாயின்ட் கோப்புகளை ஃப்ளாஷ் கோப்புகளாக எளிதாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்.. iSpring Free (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இதனை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்வது மிகவும் எளிதான விஷயமாகும்.
இந்த மென் பொருள் பவர் பாயிண்டில் ஒரு Add-on ஐப் போன்று செயலாற்றுகிறது. இதை நமது கணினியில் பதிந்து கொண்ட பிறகு, பவர்பாயின்டை திறந்தால் அதில், புதிய மெனு உருவாகியிருப்பதைப் பார்க்கலாம்.
இனி நாம் உருவாக்கிய பவர்பாயின்ட் ஸ்லைடு ஷோ கோப்பை திறந்து கொண்டு மேலே மெனுபாரில் உள்ள Publish என்ற பொத்தானை அழுத்தினால் திறக்கும் விண்டோவில் புதிதாக உருவாக்கப் போகும் SWF ஃப்ளாஷ் கோப்பின் பெயர் மற்றும் நமக்கு தேவையான மாற்றங்களை செய்து பப்ளிஷ் பொத்தானை அழுத்தினால் போதுமானது.
நமது பவர் பாயின்ட் கோப்பில் உள்ள ஸ்லைடுகளின் எண்ணிக்கை மற்றும் அதிலுள்ள படங்களின் அளவுகளைப் பொருத்து ஃப்ளாஷ் கோப்பு உருவாக்கப்படும் நேரம் மாறுபடும்.
அவ்வளவுதான்!.. உங்களுக்கான ஃப்ளாஷ் கோப்பு தயார்!..
romba useful tool. thanks surya.
ReplyDeleteநன்றி கண்ணன்
ReplyDeleteநன்றாக உள்ளது இந்த பதிவு உங்களிடம் தொலினுப்பத்தைப்பற்றி சந்தேகம் கேட்கலாமா அப்படியன்றால் மின்னஞ்சல் முகவரி தரவும்
ReplyDeleteஇப்போதைக்கு எனக்கு தேவையில்லையென்றாலும்நோட் பன்னிக்கிட்டேன் நண்பரேதொடர்க தங்கள் பணி.
ReplyDeleteபயனுள்ள தகவல் நண்பரே..தெளிவாகச் சொன்னீர்கள்..
ReplyDeleteநண்பரே, என்னுடைய ஹர்ட் டிஸ்க் வைரஸ் காரணமாக பார்மெட் செய்தபோது சிஸ்டத்தில் இருந்த சில முக்கிய பைல்களும் பார்மட் ஆகிவிட்டது அதனை திருப்பி கொண்டுவர ஏதேனும் சாப்ட்வேர் இருக்கிறதா?
ReplyDelete