.
நம்மில் பலர் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2003 பதிப்பையே இன்னமும் பயன் படுத்தி வருகிறோம். இதனால் சில சமயங்களில் நமது பார்வைக்காக வரும் வோர்ட் (DOCX) அல்லது எக்ஸ்செல் (XLSX) கோப்புகள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பதிப்பில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இது போன்ற சமயங்களில் Office 2007 கோப்புகளை Office 2003 -இல் திறக்க இயலாமல் நிறைய பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதனை மனதில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் File Format Converter (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) என்ற கருவியை இலவசமாக அறிமுகப்படுத்தி நெடு நாட்களாகிவிட்டாலும். இது குறித்த சந்தேகம் எழுப்பிய வாசகரின் வேண்டுகோளுக்குப் பிறகுதான் இது குறித்த பதிவு எழுதும் எண்ணம் தோன்றியது.
இந்த கருவியை மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதனை நமது கணினியில் பதிந்து கொள்வது மிகவும் எளிதான காரியமாகும்.
இன்ஸ்டால் செய்து முடிந்த பிறகு வரும் வசனத் திரையில் OK பொத்தானை அழுத்தவும்.
இந்த கருவியை ஒருமுறை நமது கணினியில் பதிந்து கொண்டால், பிறகு மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 -இல் உருவாக்கப்பட்ட எந்த ஒரு கோப்பையும் வழக்கம் போல மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2003 -இல் திறக்கவும், மாற்றி அமைக்கவும் முடியும்.
பண்ணிட்டேன் சார்.நல்ல உபயோகமுள்ள தகவல்.உங்கள் ப்ளாக்கின் புது முகப்பு பக்கமும் நல்லாத்தான் இருக்கு.நன்றி
ReplyDeleteநன்றி நண்பா
ReplyDeleteநன்றி ஞானசேகரன்!
ReplyDeleteநன்றி இளமுருகன்!
ReplyDeleteவழக்கம் போலவே நல்ல ஒரு பகிர்வு சூர்யா ௧ண்ணன் :-).
ReplyDeleteஎளிமையா சொல்றீங்கநன்றிங்க.
ReplyDelete