Thursday, 21 January 2010

உங்கள் Hotmail கணக்கை Gmail லில் உபயோகிக்க

உங்கள் Hotmail கணக்கை Gmail லில் உபயோகிக்க முடியுமா?

முடியும்!
ஜிமெயிலிலிருந்து  உங்கள் ஹாட்மெயில் கணக்கில் உள்ள மின்னஞ்சல்களை படிக்கவும், அதேசமயம் ஜிமெயிலில் இருந்த படியே ஹாட் மெயில் கணக்கில் மின்னஞ்சல்களை அனுப்பவும் முடியும்! எப்படி என்பதைப் பார்க்கலாம்.

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேல்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள். இங்கு Accounts and Import என்ற பகுதிக்கு செல்லுங்கள்.

 

இந்த பக்கத்தில் கீழே உள்ள  Check mail using POP3:  என்பதற்கு நேராக உள்ள Add POP3 email account என்ற பொத்தானை அழுத்துங்கள்.


அடுத்து திறக்கும்  Add a mail account you own என்ற விண்டோவில் Email address என்ற டெக்ஸ்ட் பாக்ஸில் உங்களுடைய ஹாட்மெயில் விலாசத்தை கொடுத்து Next Step பொத்தானை அழுத்துங்கள்.

அடுத்தப் பக்கத்தில் உங்களுடைய windows Live கணக்கினுடைய பயனர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து, கீழே உள்ள settings அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப் படுத்தி (குறிப்பாக நீங்கள் ஜிமெயிலில் படித்த ஹாட்மெயில் மின்னஞ்சலை, ஹாட் மெயிலில் விட்டு வைக்க வேண்டுமா? என்பதற்கு "Leave a copy of retrieved messages on the server"    என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.) பிறகு Add Account பொத்தானை அழுத்துங்கள். 

    POP Server: pop3.live.com
    Port: 995
    Always use a secure connection (SSL) when retrieving mail
அடுத்த திரையில் Yes, I want to be able to send mail as… என்பதை தேர்வு செய்து Next Step க்ளிக் செய்யுங்கள்.

இறுதியாக ஜிமெயிலிருந்து உங்கள் ஹாட் மெயில் கணக்கிற்கு ஒரு வெரிபிகேஷன் மெயில் வரும் அதனை டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்து Verify பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான்.. இனி உங்கள் ஹாட்மெயில் கணக்கிலுள்ள மின்னஞ்சல்களை ஜிமெயிலில் பார்க்கலாம். அதோடு மட்டுமல்லாமல். ஜிமெயில் Compose திரையில் From க்கு நேராக உள்ள ட்ராப் டவுன் லிஸ்டில் ஹாட்மெயில் கணக்கை தேர்வு செய்து, ஜிமெயிலில் இருந்தபடியே, ஹாட்மெயிலில் மின்னஞ்சல்  செய்யலாம்.



.

17 comments:

  1. பிரவின்குமார்21 January 2010 at 4:50 am

    பகிர்வுக்கு நன்றி!மிகவும் பயனுள்ள பதிவு!தெளிவான விளக்கம்! பாராட்டுகள்!

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்21 January 2010 at 5:03 am

    நன்றி பிரவின்!

    ReplyDelete
  3. நட்புடன் ஜமால்21 January 2010 at 5:39 am

    ரொம்ப எளிமையா சொல்லியிருக்கீங்கநன்றி நண்பரே!

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்21 January 2010 at 5:41 am

    நன்றி ஜமால்

    ReplyDelete
  5. ۞உழவன்۞21 January 2010 at 6:02 am

    பயனுள்ள பதிவு நன்றி நண்பரேஒரு பெரிய சுமை -கேக்காமலே உதவி செய்தீர் நன்றிகள் பல

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்21 January 2010 at 6:05 am

    // ۞உழவன்۞ said... பயனுள்ள பதிவு நன்றி நண்பரே ஒரு பெரிய சுமை -கேக்காமலே உதவி செய்தீர் நன்றிகள் பல//வருகைக்கு நன்றி திரு. விமல் குமாரசாமி!

    ReplyDelete
  7. ஆ.ஞானசேகரன்21 January 2010 at 5:51 pm

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  8. இளமுருகன்21 January 2010 at 6:41 pm

    நிறைய உங்களிடமிருந்து கற்றுகொண்டிருகிறேன்.தொடர்ந்து எழுதி உதவி செய்யுங்கள்.நன்றி சார்.

    ReplyDelete
  9. நாம் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா இருந்தாலும், சில நேரங்களில் பிறர் சொல்லும் போதுதான் மிகவும் எளிமையான விஷயங்கள் கூட விளங்குகின்றன. நன்றி சூர்யா கண்ணன் அவர்களே. என் tab தாவல்களை உங்கள் பதிவு நிச்சயம் குறைத்திருக்கிறது. KUDOS....!!!

    ReplyDelete
  10. wow...what a coincidence!!!!i was simply hunting through in the internet how to do this, and exactly just then,,, you've posted this..thank you very much for this valuable information.best of luck.

    ReplyDelete
  11. சூர்யா ௧ண்ணன்22 January 2010 at 3:16 am

    நன்றி இளமுருகன்!

    ReplyDelete
  12. சூர்யா ௧ண்ணன்22 January 2010 at 3:16 am

    நன்றி ஞானசேகரன்!..,

    ReplyDelete
  13. சூர்யா ௧ண்ணன்22 January 2010 at 3:17 am

    Thank you "chosenone!"..,

    ReplyDelete
  14. சூர்யா ௧ண்ணன்22 January 2010 at 3:17 am

    நன்றி கிரி! ..,

    ReplyDelete
  15. சிங்கக்குட்டி22 January 2010 at 11:05 pm

    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  16. அடடா நல்ல பதிவு .எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் .பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. http://nirujan-latest.blogspot.com/2010/01/hotmail-gmail.html

    ReplyDelete