கணினியில் நாம் பார்க்கும், உபயோகிக்கும் வீடியோ கோப்புகள் பல வடிவிலானவை, உதாரணமாக AVI, WMV, MPEG, FLASH போன்றவைகள். இது போன்ற மேலும் பலத்தரப்பட்ட வீடியோ வடிவுகளை கணினியில் நாம் கண்டு களிக்கினறோம். இவற்றை நமது வீட்டிலுள்ள DVD ப்ளேயரில் காண முடியுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் DVD ப்ளேயர்கள் ஒரு சில வீடியோ வகைகளை மட்டுமே இயக்கக் கூடியதாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது போன்ற கோப்புகளை DVD ப்ளேயரில் இயங்கும் படியாக மாற்றுவதற்கு ஒரு சுதந்திர இலவச மென்பொருள் DVD Flick (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இதனை கணினியில் பதிந்து கொள்வது எளிதானது. இதில் டைட்டில் கொடுப்பது மற்றும் வீடியோ கிளிப்புகளை இணைப்பது எளிதானதுதான்.
AVI, WMV, FLV போன்ற வீடியோ கோப்புகளை நீங்கள் Explorer இல் Browse செய்தோ அல்லது ப்ராஜக்ட் விண்டோவில் ட்ராக் அன்ட் ட்ராப் மூலமாகவோ இணைக்க முடியும்.
இதன் ப்ராஜக்ட் திரை பகுதியில் நீங்கள் இணைத்த வீடியோ கோப்புகளை வரிசை மாற்றுவது, டைட்டில் மாற்றுவது போன்றவற்றோடு, விருப்பத்திற்கேற்ப மெனு வடிவை அமைக்கலாம்.
இதனுடைய Burning பகுதி மற்ற DVD Burning மென் பொருட்களில் தரப்பட்டுள்ள வசதிகளை உள்ளடக்கியுள்ளது. Burn பட்டனை க்ளிக் செய்தவுடன் வீடியோ கோப்புகள் என்கோடிங் ஆக துவங்கிவிடும். இதற்கு சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு போரடிக்காமல் இருக்க இந்த திரையில் உள்ள Entertain me பொத்தானை க்ளிக் செய்து Tetris விளையாட்டை விளையாடலாம்.
அவ்வளவுதான். இனி இந்த DVD ஐ உங்கள் வீட்டு DVD player இல் பயன் படுத்தலாம். இதற்காக பணம் கொடுத்து மென்பொருட்களை வாங்குவதை விட இந்த சுதந்திர இலவச மென் பொருளை பயன் படுத்தி பயன் பெறுங்கள்.
.
அருமையான உபயோகமான பதிவுங்க சூர்யா சார்... நன்றி!
ReplyDeleteநன்றி யவனராணி!..,
ReplyDeleteநன்றி தல, Resolution தானாகவே Adjust ஆகுமா?
ReplyDeleteநன்றி சங்கர்! ஓரளவுக்கு ஆகும் .. முயற்சித்துப் பாருங்கள்..
ReplyDeletesuper
ReplyDeleteநன்றி தலைவா!
ReplyDeleteஇப்ப வர்ற நிறைய டிவிடி பிளேயர் avi files ப்ளே பண்ணுது. அதுனால டேட்டாவா, பதிவு பண்ணுனாலே பார்க்க முடியுது.
ReplyDeleteஉண்மைதாங்க! ஆனால் FLVநன்றி பின்னோக்கி!
ReplyDeleteமிக்க நன்றிங்கோஎன்கிட்ட நிறைய AVI Filesஆ இருக்கு
ReplyDeletethanks surya
ReplyDeleteநன்றிங்க தேனம்மை!..
ReplyDeleteநன்றி ஜமால்!
ReplyDeleteஅருமையான உபயோகமான பதிவுThanks...
ReplyDeleteஅருமையான உபயோகமான பதிவுThanks...
ReplyDeleteநன்றி அருமையான பதிவு சூர்யா கண்ணன் சார்,என்னுடைய விட்டில் சோனி பழைய மாடல் டி.வி.டி பிளேயர் உள்ளது.. இதில் divx format கிடையாது.. இதில் படம் பார்க்க நிரோவில் எழுதும் போது அதிக நேரமாகிறது (dvd for 3 to 4 hr and cd for 1 hr).. இந்த dvd flick யில் எழுத எவ்வளவு நேரமாகும்.. இதை என்னுடைய பிளேயரில் பார்க்க முடியுமா?
ReplyDeleteமிக்க நன்றி தலைவா. என்னிடம் நிறைய AVI வீடியோ இருக்கு. மிக்க நன்றி....
ReplyDelete