Thursday, 17 December 2009

விண்டோஸ் விஸ்டாவில் UAC (User Account Control) ஐ நமது வசதிக்கேற்ப மாற்றியமைக்க

நமது கணினியில் விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7  இயங்குதளத்தை உபயோகித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது கான்பிகரேஷன் ஐ மாற்றியமைக்க முற்படும் பொழுதோ அல்லது புதிய மென்பொருளை நிறுவும் பொழுதோ, UAC என்கிற User Account Control எச்சரிக்கை திரை தோன்றி எரிச்சலூட்டும்.



 இது நமது கணினிக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்றாக இருந்தாலும், சிலருக்கு இது தொல்லை தருவதாக இருப்பதால் இதை நமது வசதிக்கு ஏற்ப எப்படி மாற்றியமைப்பது என்று பார்க்கலாம்.


விண்டோஸ் விஸ்டாவில் UAC ஐ கணினியிலிருந்து முடமாக்க 

முதலில் Control Panel சென்று சர்ச் பாக்ஸில் UAC என டைப் செய்து என்டர் கொடுக்கவும். இப்பொழுது வலது புற பேனில் User Accounts என்பதற்கு கீழாக “Turn User Account Control (UAC) on or off” என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து வரும் திரையில் “Use User Account Control (UAC)” என்ற Check Box ஐ Uncheck செய்து பின் OK கொடுங்கள். பிறகு உங்கள் கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும். இந்த முறையில் உங்கள் கணினியில் இனி UAC திரை வராது.



விண்டோஸ் ஏழில்  UAC வசதியை மாற்றியமைக்க 


Control Panel லில்  உள்ள சர்ச் பாரில் UAC என டைப் செய்து என்டர் கொடுக்கவும். இனி வரும் Change User Account Control Settings லிங்கில் கிளிக் செய்யுங்கள்.


அடுத்து வரும் திரையில் ஸ்லைடரை மேலும் கீழுமாக மாற்றியமைப்பதன் மூலமாக இந்த UAC வசதியை நமது தேவைக்கேற்ப மாற்றி அமைக்கலாம்.


முற்றிலுமாக ஸ்லைடரை கீழிறக்கி விட்டால் UAC முற்றிலுமாக disable ஆகிவிடும்.


கடந்த மார்ச் 2008 இல் துவங்கிய எனது இந்த ப்ளாக் இப்பொழுது ஒரு லட்சம் ஹிட்ஸ்களை தொடவிருக்கிறது. எனது பதிவுகளுக்கு ஆதரவளித்த தமிலிஷ், யூத்ஃபுல் விகடன், தமிழ்10 , திரட்டி, தட்ஸ்தமிழ், தமிழ் வெளி, Tamilars, உலவு, நியூஸ் பானை ஆகிய தளங்களுக்கும், பதிவுலகில் நானும் ஒரு பதிவர்தான் என சொல்லும் அளவுக்கு எனக்கு ஆதரவளித்து, ஊக்குவித்த சக பதிவுலக தோழர்களுக்கும், இனிய வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 

அன்புடன்
சூர்யா கண்ணன்

.       



8 comments:

  1. வானம்பாடிகள்17 December 2009 at 11:44 am

    நன்றி தலைவா.

    ReplyDelete
  2. ஸ்ரீ.கிருஷ்ணா17 December 2009 at 11:52 am

    பயனுள்ள தகவல் . கலக்குங்க தல ....

    ReplyDelete
  3. ஆ.ஞானசேகரன்17 December 2009 at 8:20 pm

    பயனுள்ள தகவலுக்கு மீண்டும் நன்றி நண்பா

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்18 December 2009 at 5:46 am

    //வானம்பாடிகள் said... நன்றி தலைவா.//நன்றி தலைவா!

    ReplyDelete
  5. சூர்யா ௧ண்ணன்18 December 2009 at 5:48 am

    // ஆ.ஞானசேகரன் said... பயனுள்ள தகவலுக்கு மீண்டும் நன்றி நண்பா //நன்றி ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்18 December 2009 at 5:48 am

    //ஸ்ரீ.கிருஷ்ணா said... பயனுள்ள தகவல் . கலக்குங்க தல ....//நன்றி தல

    ReplyDelete
  7. யவனராணி19 December 2009 at 10:11 pm

    இன்னும் பல லட்சம் ஹிட்களை உங்க ப்ளாக் பெறும் சூர்யா சார் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. பிரவின்குமார்20 December 2009 at 7:53 am

    பயனுள்ள தகவல் நன்றி..!இன்னும் பல லட்சம் ஹிட்களை உங்க ப்ளாக் பெறும் சூர்யா ௧ண்ணன் தலைவாவாழ்த்துக்கள்.

    ReplyDelete