Windows XP -ல் மை கம்ப்யூட்டரில் USB ட்ரைவை காணவில்லையா? My Computer -ல் USB Drive அல்லது External Drive, Memory Card ஐ காண்பிக்க வில்லை எனில், உங்கள் இயங்குதளம் உங்கள் ட்ரைவ் லெட்டரை, ஏற்கனவே உபயோகத்தில் உள்ள ட்ரைவ் லெட்டரை கொண்டு மாற்றியிருந்தால் இப்படி நிகழ வாய்ப்பு இருக்கிறது.
மறுபடியும் தேவையான ட்ரைவ் லெட்டரைக் கொண்டு ரீ நேம் செய்வதன் மூலமாக இதனை சரி செய்யலாம்.
My Computer -ல் வலது கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யுங்கள்.
Computer Management திரையில் Disk Mangement என்பதை தேர்வு செய்யுங்கள்.
இப்பொழுது திரையில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து ட்ரைவ்களையும் அதனுடைய Healthy status ஐயும் காணலாம்.
இதில் உள்ள SONY என்ற USB Drive இன் ட்ரைவ் லெட்டரை மாற்ற, அந்த லிஸ்டில் உள்ள அந்த குறிப்பிட்ட ட்ரைவில் வலது கிளிக் செய்து Context Menu வில் “Change Drive Letters and Paths…” என்பதை கிளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் டயலாக் பாக்ஸில் Change பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இனி ட்ராப் டவுன் லிஸ்டில் இருந்து தேவையான ட்ரைவ் லெட்டரை தேர்வு செய்யுங்கள்.
பிறகு வரும் கன்பர்மேஷன் திரையில் Yes கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.
.
நன்றி தலைவா
ReplyDeleteவிளக்கமான இடுகை நண்பரே..பயனுள்ளதாக இருந்தது.
ReplyDeleteநன்றி இரா.குணசீலன்
ReplyDeleteநன்றி தலைவா!
ReplyDeleteபயனுள்ள தகவல். நன்றி சார்
ReplyDeleteநன்றாக இருந்தது நண்பரே....வாழ்க வளமுடன்,வேலன்.
ReplyDeleteநன்றி திரு. வேலன்.
ReplyDeleteநன்றி விஜய்!
ReplyDeleteThanks for u r post. i have the same problem. i tried but in my usb change name options not come when right click, help option only coming. pl tell me a solution
ReplyDeletethanks for u r post. i am also have the same problem. but when i tried i cant able to rename my usb. in right click option change rename option not coming , help option only coming. pl tell me a solution
ReplyDelete