Wednesday, 23 December 2009

மெனு டூல்பாரை ஒரு சிறிய பட்டனில் பொதிய

நம்மில் சிலர் மடி கணினி உபயோகித்துக் கொண்டிருப்போம், இன்னும் சிலர் மினி லேப்டாப் உபயோகிக்கிறோம். இவற்றின் திரை சிறிதாக இருப்பதால், வலைப் பக்கங்களை திறக்கும் பொழுது, உலவியில் உள்ள மெனு பார் திரையின் ஒரு குறிப்பிட்ட அளவை எடுத்துக் கொள்கிறது. மேலும் உலவியில் உள்ள டூல்பார் மெனுவை அடிக்கடி நாம் உபயோகிப்பதில்லை.

நெருப்புநரி உலவியில் இந்த டூல்பார் மெனுவை முற்றிலுமாக நீக்காமல் அவை அனைத்தையும் ஒரு சிறிய பட்டனில் பொதிந்து, தேவையான பொழுது அந்த பட்டனை கிளிக் செய்து மெனு வசதிகளை பெற Compact Menu 2 என்ற நீட்சி தரப்பட்டுள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

கீழே உள்ள படம் நீட்சியை பதிவதற்கு முன்,



அடுத்து வரும் நீட்சியை பதிவதற்கான உறுதி படுத்தும் டயலாக் பாக்ஸில் Yes பொத்தானை கிளிக் செய்து நீட்சியை பதிந்து கொள்ளுங்கள்.


Compact Menu 2 நீட்சியை பதிந்த பிறகு நெருப்புநரியின் Toolbar menu நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஒரு சிறிய பட்டன் தோன்றியிருப்பதை பார்க்கலாம்.


இனி அந்த பட்டனை கிளிக் செய்தால் டூல்பார் மெனு திறக்கும்.






.

11 comments:

  1. வானம்பாடிகள்23 December 2009 at 6:41 am

    superb boss. ty

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்23 December 2009 at 8:09 pm

    நன்றி தலைவா!

    ReplyDelete
  3. முனைவர்.இரா.குணசீலன்23 December 2009 at 9:38 pm

    விளக்கமான் இடுகை நண்பரே..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  5. சூர்யா ௧ண்ணன்24 December 2009 at 1:24 am

    நன்றி முனைவர்.இரா.குணசீலன்!

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்24 December 2009 at 1:26 am

    நன்றி திரு. வேலன்!

    ReplyDelete
  7. very useful...Thank you...

    ReplyDelete
  8. பிரவின்குமார்24 December 2009 at 3:58 am

    பயனுள்ள தகவல் நன்றி..!இன்னும் பல லட்சம் ஹிட்களை உங்க ப்ளாக் பெறும் சூர்யா ௧ண்ணன் தலைவாவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சூர்யா ௧ண்ணன்24 December 2009 at 4:53 am

    வாழ்த்துக்கு மிக்க நன்றி பிரவீன் குமார்!

    ReplyDelete
  10. சூர்யா ௧ண்ணன்24 December 2009 at 4:53 am

    நன்றி மோகன்!

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல். நன்றி!!

    ReplyDelete