Windows Media Player -ல் நாம் MP3 பாடல்களை திறக்கையில், முழுத் திரையில் Windows Media Player திறப்பதை கவனித்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும், பாடல்களை கேட்பதற்கு முழுத் திரை தேவையில்லை என்பதால், பயனர்கள் பலரும் Mini Player தோற்றத்தையே விரும்புகிறார்கள்.
ஒவ்வொருமுறையும் மினி ப்ளேயர் மோடிற்கு மாற்றுவதை விட, ஒரு குறிப்பிட்ட கோப்பு வடிவிற்கு மட்டும் (உதாரணமாக MP3) அல்லது ஒரு குறிப்பிட்ட ட்ரைவிலிருந்து திறக்கப்படும் கோப்புகளுக்கு மட்டும் (உதாரணமாக CD/DVD) நிரந்தரமாக மினி ப்ளேயர் மோடை Windows Media Player -ல் உருவாக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
Windows Media Player ஐ திறந்து கொண்டு Options பக்கத்திற்கு செல்லுங்கள். இங்கு Player டேபில் “Start the mini Player for file names that contain this text” என்ற டெக்ஸ்ட் பாக்ஸ் இருப்பதை கவனிக்கலாம்.
உங்களுக்கு அனைத்து எம்பி3 கோப்புகளும் மினி ப்ளேயரில் திறக்க வேண்டுமெனில் இந்த டெக்ஸ்ட் பாக்ஸில் .mp3 என டைப் செய்யவும்.
குறிப்பிட்ட ட்ரைவிலிருந்து திறக்கப்படும் கோப்புகள் மட்டும் மினி ப்ளேயரில் திறக்க வேண்டுமெனில் அந்த ட்ரைவ் லெட்டரை மட்டிலும் கொடுத்தால் போதுமானது.
இனி Apply செய்தால் போதும், இதற்கு பின்னர் திறக்கப் படும் கோப்புகள் உங்கள் விருப்பப் படி மினி ப்ளேயரில் திறக்கும்.
.
நல்ல தகவல் நண்பரே..
ReplyDeleteநன்றி இரா.குணசீலன்
ReplyDelete