விண்டோஸ் 7 -இல் ஸ்டார்ட் மெனுவில் உள்ள பவர் பட்டன் வழக்கமாக Shutdown ஆப்ஷனிலும், விஸ்டாவில் Sleep ஆப்ஷனிலும் இருக்கும். இதனை விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் நமது தேவைக்கு ஏற்றவாறு எப்படி மாற்றியமைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
விண்டோஸ் 7 :-
விண்டோஸ் ஏழில் இந்த பணி மிகவும் எளிதானது. Start Button -இல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள். இனி திறக்கும் Taskbar and Start menu Properties விண்டோவில் Start Menu டேபிற்குச் சென்று Power button action என்பதற்கு நேராகவுள்ள drop-down லிஸ்டில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இனி Apply & OK கொடுத்தால் போதுமானது.
விண்டோஸ் விஸ்டா:-
விஸ்டாவில் கொஞ்சம் சுற்று,
Control Panel சென்று Power Options -> Change Plan Settings -> Change Advanced Power Settings க்ளிக் செய்தால் திறக்கும் Power Options விண்டோவில் Advanced Settings டேபில் “Power buttons and lid” என்பதை க்ளிக் செய்யவும்.
இதில் Power button Action என்பது உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் வேர் பவர் பட்டனை குறிக்கிறது. இதில் நீங்கள் மாறுதல் செய்தால், ஸ்டார்ட் மெனுவிற்குச் சென்று ஷட் டவுன் செய்யவேண்டும் என்பதில்லை, CPU வில் உள்ள பவர் பட்டனை ஒரு முறை அழுத்தினால் போதுமானது.
Start menu power button என்பது ஸ்டார்ட் மெனுவில் உள்ள பவர் பட்டனை குறிக்கிறது. இதில் உங்களுக்கு தேவையான Sleep, Hibernate or Shut Down போன்ற வசதிகளை மாற்றி Apply & OK கொடுக்கவும்.
.
நல்ல பயனுள்ள தகவல் . வாழ்த்துக்கள் நண்பரே !!!!
ReplyDelete