நீங்கள் ஜிமெயிலில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பவரானால் இது உங்களுக்குத்தான்.
ஒவ்வொருமுறையும் உலவியை திறந்து ஜிமெயில் சென்று பயனர் பெயரும், கடவு சொல்லும் கொடுத்து களைத்து போகாமல் இருக்க இந்த ஜிமெயில் நோட்டிஃபயர் மென்பொருள் பெரிதும் உதவியாக உள்ளது.
இந்த மென்பொருள் இணையத் தொடர்பில் இருக்கும் பொழுது உங்களுக்கு ஏதாவது மின்னஞ்சல் வந்தால் அறிவிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை இந்த மென்பொருள் கையாளவல்லது என்பது இதனுடைய முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று.
கீழே உள்ள சுட்டியை சொடுக்கி தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியபிறகு, வரும் திரையில் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அடுத்த திரையில் உங்கள் மின்னஞ்சல் முகவரியும், கடவு சொல்லையும் கொடுங்கள்.
(உங்கள் ஜிமெயில் கணக்கில் IMAP என்பது enable செய்யப் பட்டிருக்க வேண்டும். இதற்கு என்ன செய்வது இங்கே கிளிக் செய்து இந்த இடுகையில் நான் சொன்னவற்றை பின்பற்றவும்)
இதில் உங்களுடைய ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகளை கொடுக்கலாம்.
இனி இது அமைதியாக உங்கள் டாஸ்க்பாரில் அமர்ந்து கொண்டு, அதன் வேலையை செய்யும்.
இந்த ஐகானை வலது கிளிக் செய்து உங்களுக்கு வந்த மின்னஞ்சலை பார்க்கலாம்.
இதிலுள்ள Preferences ஐ கிளிக் செய்தால் இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.
இனி என்ன?
நோட்டிஃபயர் போடு ஜிமெயிலில் விளையாடு..,
.
மிக மிக உபயோகமான தகவல்
ReplyDeleteநன்றி திரு. செல்வகுமார்!
ReplyDeleteஇந்த மென்பொருளின் நம்பகத்தன்மைக்கு என்ன உத்தரவாதம்? ஒருவேளை இது எமது கடவுச்சொல் உட்பட மின்னஞ்சல் தகவல்களைப் பிறருக்கு கடத்தினால்?இது நம்பகரமானதா?
ReplyDeleteவருகைக்கு நன்றி! என்.கே.அஷோக்பரன்.அந்த வலைத்தளத்தில் உள்ள FAQ லிங்கில் சென்று பாருங்கள்.
ReplyDeleteநன்றி சூர்யா -navanee
ReplyDeleteநல்ல பகிர்வு, மிக்க நன்றி நண்பா
ReplyDeleteநன்றி திரு. ஞானசேகரன்.
ReplyDeleteநன்றி Navanee
ReplyDeleteThank you Surya
ReplyDelete