Tuesday, 6 October 2009

நெருப்புநரி உலவியில் யூ ட்யூப் வீடியோக்களை சினிமா வடிவில் பார்க்க..,

யூ ட்யூப் பிரியரா நீங்கள்?. வீடியோக்களை உலவிகளில் சிறிய அளவிலும், பேக்க்ரவுண்டில் வலைப்பக்க எழுத்துக்களும், விளம்பரங்களுமாக பார்த்து போரடித்து விட்டதா? எந்த இடையூறுகளும் இல்லாது, வீடியோவை மட்டும் சினிமா போல பார்க்க விருப்பமா?

இதோ நெருப்புநரி உலவிக்கான Youtube Cinema Extension ..,

வழக்கமாக யூ ட்யூப் வீடியோ உலவியில் இப்படி இருக்கும்.





மேலே உள்ள சுட்டியை சொடுக்கி நெருப்பு நரி நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள். பிறகு Options -ல் சென்று உங்கள் தேவைக்கேற்ற மாறுதல்களை செய்து கொள்ளுங்கள்.




யூ ட்யூப் தளத்தில் மெளசை  வலது கிளிக் செய்தால் இறுதியில் புதிதாக இரண்டு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கும்.





யூ ட்யூப் தளத்தில் எந்த வீடியோவை சினிமா ஸ்டைலில் பார்க்க வேண்டுமோ அந்த வலைப் பக்கத்தில் மெளசை வலது கிளிக் செய்து 'Play in Cinema' என்பதை கிளிக் செய்யவும்.




இப்பொழுது வீடியோவானது மற்றொரு டேபில் ஏறக்குறைய முழுத் திரையில் திறக்கும். இன்னும் சில மாறுதல்களை  செய்வதன் மூலம், வீடியோவை இன்னும் தெளிவாக்கலாம். திரையின் வலது மேல் புற மூலையில் நிறங்களை தேர்ந்தெடுத்து பேக்கிரவுண்ட் நிறத்தை மாற்றலாம். வலது கீழ்ப்புற மூலையில் தரப்பட்டுள்ள வசதிகளை உபயோகித்து வீடியோ திரையின் அளவை மாற்றலாம்.




இந்த நீட்சியை நிறுவி வீடியோவை தெளிவாக பார்த்து ரசியுங்கள்.


.

9 comments:

  1. வானம்பாடிகள்6 October 2009 at 5:49 am

    Thank you surya

    ReplyDelete
  2. SUREஷ் (பழனியிலிருந்து)6 October 2009 at 8:57 am

    நன்றி தல

    ReplyDelete
  3. நித்தியானந்தம்6 October 2009 at 9:28 am

    Nice one Surya...keep posting such type of nice articles.....

    ReplyDelete
  4. ஆ.ஞானசேகரன்6 October 2009 at 9:42 am

    நன்றி நண்பா

    ReplyDelete
  5. முனைவர்.இரா.குணசீலன்6 October 2009 at 9:41 pm

    பயனுள்ள தகவல் நண்பரே..

    ReplyDelete
  6. பின்னோக்கி6 October 2009 at 11:21 pm

    தகவலுக்கு நன்றிங்க..இங்க சென்னையில நெட் ஸ்பீட் இன்னமும் பெரிய அளவுல முன்னேறல...யூ டியூப் பாக்குறது..கஷ்டமா இருக்கு

    ReplyDelete
  7. சூப்பரோ சூப்பர் சூர்யா கண்ணாநன்றி

    ReplyDelete
  8. super i'll try thankshttp://susricreations.blogspot.com

    ReplyDelete
  9. looks like u r more inclined 2 firefox alone.. tech tips on google chrome too will b useful...u r doing a gr8 job.interesting blog. தமிழில் படிக்க ஆனந்தமாக உள்ளது!

    ReplyDelete