Tuesday, 11 August 2009

MS Outlook -ல் இமெயில் மற்றும் தொடர்புகளை Backup எடுப்பது எப்படி?

MS Outlook ஐ பொறுத்தமட்டில் உங்களுடைய இமெயில் மற்றும் தொடர்பு விவரங்கள் அனைத்தும் Personal Folders File என்ற அமைப்பில் .pst என்ற நீட்சியுடன் உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும்.

உங்கள் ஹார்ட் டிஸ்கை ஃபார்மேட் செய்வதாக இருந்தாலோ, அல்லது, ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு உங்களுடைய MS Outlook -ல் உள்ள மெயில் மற்றும் தொடர்புகளை பதிவதாக இருந்தாலோ இந்த ஒரு கோப்பை காப்பி செய்வதன் மூலம் எளிதாக செய்ய முடியும். இந்த .pst நீட்சியுள்ள கோப்பை எப்படி பேக்கப் எடுப்பது என்று பார்ப்போம்.

முதலாவதாக, நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் MS Outlook, MS Exchange, Windows Messaging போன்றவற்றை மூடிவிடுங்கள்.

Control Panel க்கு சென்று Classic View வில் தான் உள்ளதா? என உறுதிப்படுத்தி, இல்லையெனில் இடது புற பேனில் Classic View என்பதனை சொடுக்கி Control Panel ஐ Classic View விற்கு மாற்றி விடுங்கள்.



இதில் Mail ஐ திறந்து, 'Show Profiles' என்பதை கிளிக் செய்யுங்கள். இவற்றில் உங்களுக்கு தேவையான Profile ஐ தேர்வு செய்து Properties என்ற பொத்தானை அழுத்தவும். இனி வரும் டயலாக் பாக்ஸில் 'Data Files' என்பதை கிளிக் செய்து 'Name' இற்கு கீழாக உள்ள Personal Folders Service ஐ தேர்ந்தெடுக்கவும்.



(ஒரு வேளை ஒன்றுக்கு மேற்பட்ட Personal Folders Service கள் உங்கள் Profile -ல் இருந்தால், ஒவ்வொரு .pst file ஐயும் தனித்தனியாக காப்பி எடுக்க வேண்டும்.)



இந்த டயலாக் பாக்ஸில் உள்ள Settings என்ற பொத்தானை கிளிக் செய்து, இதில் File Name என்பதற்கு நேராக குறிப்பிடப்பட்டிருக்கும் .pst file இன் இருப்பிடத்தை குறித்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக, 'C:\Documents and Settings\......\Local Settings\Application Data\Microsoft\Outlook\Outlook.pst')


பிறகு, My Computer அல்லது Windows Explorer உபயோகித்து மேலே குறிப்பிட்ட ஃபோல்டருக்கு சென்று அந்த ஃபைலை பென் ட்ரைவிலோ அல்லது வேறு ஏதாவது மீடியாவிலோ காப்பி செய்து கொண்டு பயனடையலாம்.


How to Backup Outlook email & Address Book.


8 comments:

  1. வானம்பாடிகள்11 August 2009 at 3:31 am

    மிக அவசியமான தகவல் சூர்யா? எங்க ஆள காணோம்?

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்11 August 2009 at 3:36 am

    நன்றி தலைவா! பணிச்சுமை கொஞ்சம் அதிகம், அதனால்தான்..,

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி நன்றிதமிழ்

    ReplyDelete
  4. யூர்கன் க்ருகியர்11 August 2009 at 5:44 am

    ஒரே pst file, 2GBக்கு மேல் இருந்தால் Corrupt ஆக வாய்ப்புக்கள் அதிகம்.அதனால் 2gbக்கு மிகாமல் பார்த்துகொள்ளவும்.அப்படி இருப்பின் ஒரு pst பைலில் இருந்து இன்னொன்றுக்கு தேவையான மின் மடல்களை மாற்றி சேமித்து கொள்ளவும்.ஏதோ... எனக்கு ஏற்பட்ட அனுபவம் ...நம்புங்க சார் !

    ReplyDelete
  5. சூர்யா ௧ண்ணன்11 August 2009 at 5:58 am

    நன்றி தமிழ்!

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்11 August 2009 at 6:07 am

    நன்றி யூர்கன் க்ருகியர்!சரியான தகவல்..pst file இன் அளவை சிறிதாக்க 'Settings' -ல் Compact Now என்ற வசதி உண்டு.

    ReplyDelete
  7. shirdi.saidasan@gmail.com11 August 2009 at 10:09 am

    you look superb in photo

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்11 August 2009 at 8:53 pm

    நன்றி shirdi.saidasan

    ReplyDelete