Thursday, 30 July 2009

உபுண்டு Grub Bootloader ஐ மறுபடியும் நிறுவ

உங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குதளங்களில், விண்டோஸ் செயலிழந்தால், விண்டோசை மறுபடியும் இன்ஸ்டால் செய்வோம்.

இப்படி இன்ஸ்டால் செய்யும்பொழுது உபுண்டு வின் Grub BootLoader காணாமல் போய்விடும். இதனால் உபுண்டுவை இயக்க முடியாமல் போய் விடும்.

உபுண்டுவை மறுபடியும் இன்ஸ்டால் செய்யாமல், கிரப் பூட் லோடரை மறுபடியும் நிறுவ என்ன செய்யலாம்?

உபுண்டு லைவ் சிடியில் உங்கள் கணினியை பூட் செய்திடுங்கள்.



உபுண்டு பூட் ஆன பிறகு, Terminal க்கு சென்று,
sudo grub
என்ற கட்டளையை கொடுத்து என்டர் கொடுங்கள். இது grub prompt இற்கு கொண்டு செல்லும்.
>
இந்த பிராம்ப்டில் கீழ்கண்ட மூன்று கட்டளைகளை கொடுக்கவும்.

( (hd0,0) என்பது உங்கள் கணினியின் முதல் டிரைவின் முதல் பார்டீஷனை குறிக்கிறது. உங்கள் கணினியின் அமைப்பிற்கு ஏற்ப இது மாறுபடும்)

> root (hd0,0)

> setup (hd0)

> exit

சிடியை வெளியே எடுத்து விட்டு கணினியை ரீஸ்டார்ட் செய்து விட்டால் போதுமானது.

Grub Boot Loader திரும்ப கிடைத்துவிடும்.







3 comments:

  1. பயனுள்ள தகவல்.....உபுண்டு ஏனோ பலர் உபயோகிக்க மறுக்கிறார்கள்....

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்31 July 2009 at 7:06 am

    வாங்க coolzkarthi!உபயோகிக்க துவக்கத்தில் ஒரு தயக்கம் மட்டுமே!

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய நண்பர்கள் தினவாழ்த்துக்கள்!!

    ReplyDelete