Tuesday, 31 March 2009

Windows Media Player -ல் Screenshot எடுக்க..,



உங்கள் கணினி திரையில் தோன்றும் அனைத்தையும் ஸ்கிரீன் ஷாட் (Screenshot) எடுப்பது மிகவும் எளிது..

Print Scrn Key ஐ அழுத்தி பின் Paint போன்ற இமேஜ் எடிட்டரில் பேஸ்ட் செய்தால் போதும்.

ஆனால், விண்டோஸ் மீடியா பிளேயரில் (Windows Media Player) ஏதாவது வீடியோவை பிளே செய்து ஒரு குறிப்பிட்ட ஸ்டில் மட்டும் எடுக்க மேற்சொன்ன வழியில் முயற்சித்துப் பார்த்தால் படம் வரவேண்டிய இடத்தில் கருப்பு ஸ்கிரீன் மட்டுமே வரும்.

இதை எப்படி செய்ய முடியும்?

எளிதான வழி.
Capture - ஐ support செய்யும் பிளேயரை (VLC Player போன்றவை) உபயோகப்படுத்தலாம். 'Video > Capture to capture a video frame ' -ல் கிளிக் செய்தால் போதும்.

இல்லை அதுவெல்லாம் முடியாது.., விண்டோஸ் மீடியா பிளேயரில்தான் Screenshot எடுக்க வேண்டும் என்று அடம் பிடித்தால் இதோ ஒரு வழி..,

Windows Media Player - > Tools -> Options -> Performance -> Advanced சென்று அதில் ‘Use Overlays‘ என்பதை 'Un check ' செய்து OK கொடுத்து விடுங்கள்.





இப்பொழுது 'Print Scrn ' கீ முறையில் முயற்சித்துப் பாருங்கள்.

என்ன வெற்றி தானே?


Sunday, 29 March 2009

Windows XP-ல் Shut Down நேரத்தை குறைக்க..,



நாம் ShutDown கொடுத்தபிறகு சர்விஸஸ்களையும், திறந்திருக்கும் புரொகிராம்களையும் மூடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், என்பதை விண்டொஸில் உள்ள சில ரிஜிஸ்டரி பதிவுகளே தீர்மானிக்கின்றன.

இந்த ரிஜிஸ்டரி பதிவுகளை மாற்றுவதன் மூலம் Windows XP யை விரைவாக ஷட் டவுன் செய்திட முடியும்.

Start->Run-> Regedit சென்று
‘HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\’ என்ற கீயில் கிளிக் செய்துவலதுபுறம் உள்ள லிஸ்டில் 'WaitToKillAppTimeout' என்ற கீயில் இரட்டை கிளிக் செய்து அதன் value- ஐ 1000 என மாற்றவும். (1000 என்பது ப்ரொஸஸ்களையும், சர்விஸ்களையும் மூடுவதற்கு Windows XP எடுத்துக்கொள்ளும் மில்லி செகண்டுகளை குறிக்கிறது)

பிறகு,
‘HKEY_CURRENT_USER\Control Panel\Desktop’ என்ற கீயில் கிளிக் செய்து வலதுபுறம்உள்ள லிஸ்டில் ‘AutoEndTasks.’ என்ற கீயில் இரட்டை கிளிக் செய்து அதன் value-
1 என மாற்றவும்.

அவ்வளவுதான்.

இனி நீங்கள் வித்தியாசத்தை காணமுடியும்.

ஷட் டவுனுக்கு ஒரு ஷார்ட்கட்:-

டெஸ்க்டாபில் ரைட் கிளிக் செய்து New-> Shortcut சென்று

கீழ்கண்ட Command-ஐ காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்து அதற்கு Fast Shutdown என பெயரிட்டு வைத்துக்கொள்ளலாம்.

%windir%\System32\shutdown.exe -s -f -t 00


குறிப்பு:-
மேற்கண்ட டிப்ஸை உபயோகித்து ஷட் டவுன் செய்வதற்கு முன், அனைத்து வேலைகளையும் சேமித்துக் கொள்ளவும்.




Wednesday, 25 March 2009

ஃபோல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (List of Contents) எப்படி எடுப்பது?



ஒரு ஃபோல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (List of Contents) எப்படி எடுப்பது?

வழி இருக்கிறது (DOS Prompt ல் எளிதாக செய்யலாம்) விண்டோஸில் இதனை எளிதாக்குவது எப்படி என்பதை பார்ப்போம்.

சிறு தவறுகள் வரலாம் முக்கியமாக எக்ஸ்போளரரில், அதற்கும் ஒரு ரெஜிஸ்டரி எடிட் வழியையும் தந்திருக்கிறேன். தவறுகள் இருந்தால் பொறுத்துக்கொண்டும், ஐடியா இருந்தால் தயவுசெய்தும் பின்னூட்டம் இடவும்.

சிறிய ஃபோல்டராக இருந்தால், போல்டரை திறந்து ஒவ்வொன்றாக பார்த்து எழுதிக் கொள்ளலாம். ஒருவேளை நூற்றுக்கணக்கில் கோப்புகளை வைத்திருந்தால் (எம்பி3 பாடல்கள்) என்ன செய்வது?

நோட்பேடை திறந்து கீழ்கண்ட வரிகளை அதில் டைப் செய்யவும்,

@echo off
dir %1 /o /b :g>c:\filelist.txt
start/w notepad c:\filelist.txt
exit


பின் அதனை C டிரைவில் 'C:\Dir_List.bat
என்ற பெயரிலோ அல்லது உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் வேறு பெயரையோ வைத்துக்கொள்ளவும்.

இப்பொழுது இந்த பேட்ச் 'Batch' பைல் நமக்கு தேவையான வேலையை செய்யும். இதை நாம் மவுஸை ரைட் கிளிக் செய்தால் வரும் 'Context Menu' மெனுவில் கொண்டுவருவது எப்படி என்பதை பார்ப்போம்.

Windows Explorer/My computer - திறந்து அதில் Tools > Folder Options > File Types. க்கு சென்று 'File Folder' என்ற file type - செலக்ட் செய்து, பிறகு Advanced button -ல் கிளிக் செய்து அதில் வலப்புறமாக உள்ள New பட்டன் - கிளிக் செய்து அதில் , Action Field = 'Folder Contents' எனவும் 'Application to be used to perform this action' field -ல் C:\Dir_List.bat கொடுத்து OK மூன்று முறை கிளிக் செய்து க்ளோஸ் செய்யவும்.

இப்பொழுது நீங்கள் வேறு எதையும் செய்வதற்கு முன்பாக ஏதாவது ஒரு ஃபோல்டரை ஓபன் செய்து பார்க்கவும். சில சமயங்களில் 'Open With' என்று வந்தாலும் வரலாம்.

இதை சரி செய்ய Registry Editor - திறந்து அதில்
HKEY_CLASSES_ROOT\Directory\shell\. இன் default value Explorer என மாற்றிக்கொண்டு கணினியை Restart செய்யவும்.

இனி எந்த ஃபோல்டரில் உள்ள Contents வேண்டுமோ, அந்த ஃபோல்டரில் ரைட் கிளிக் செய்து அதில் 'Folder Contents' கிளிக் செய்து பாருங்கள்.




Tuesday, 24 March 2009

Invisible Drive ஐ உருவாக்க ...,



ஒரு குறிப்பிட்ட டிரைவை My Computer லி
ருந்து மறைய வைக்க ஒரு டிரிக்..,


Start சென்று Run -ல் 'Regedit ' என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

இதில் கீழ்கண்ட லொகேஷனுக்கு செல்லவும்.

HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

அதில் 'Explorer' ல் ரைட் பட்டன் கிளிக் செய்து New மற்றும் "DWORD Value" ஐ தேர்வு செய்து அதற்கு 'NoDrives' என பெயரிடவும்.



பிறகு NoDrive ஐ இரண்டு முறை கிளிக் செய்து, அதனுடைய Properties ல் 'Base Unit ல் Decimal ஐ தேர்வு செய்யவும்.


பிறகு எந்த டிரைவை மறைக்க வேண்டுமோ அதனுடைய வேல்யூவை கொடுக்கவும்.

A: 1
B: 2
C: 4
D: 8
E: 16
F: 32
G: 64
H: 128
I: 256
J: 512
K: 1024
L: 2048
M: 4096
N: 8192
O: 16384
P: 32768
Q: 65536
R: 131072

S: 262144
T: 524288
U: 1048576
V: 2097152
W: 4194304
X: 8388608
Y: 16777216
Z: 33554432
All: 67108863


நீங்கள் உங்களுடைய 'E' டிரைவை மறைக்க விரும்பினால் வேல்யூ - 16 என்று கொடுக்கலாம். இதில் சிறப்பான ஒரு செய்தி என்னவென்றால், ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவ் களை மறைக்க வேண்டுமெனில் அதனுடைய மதிப்பை மட்டும் கூட்டினால் போதுமானது. உதாரணமாக 'E' ஐயும் 'G' டிரைவையும் மறைக்க மதிப்பு -80, அதாவது 64+16.


இப்பொழுது உங்கள் கணினியை Restart செய்ய வேண்டும். அவ்ளோதான்!

உங்கள் டிரைவ் மறைந்து விடும்.

மறுபடியும் தோன்ற வைக்க Registry -ல் அந்த குறிப்பிட்ட Key Value ஐ 0 ஆக மாற்றினாலோ அல்லது அந்த Key ஐ Delete செய்தாலோ போதுமானது.

குறிப்பு:

உங்கள் 'C' (System Drive) டிரைவை மறைக்க முடியாது





Sunday, 22 March 2009

அறிவிப்பு பகுதியில் உங்கள் பெயரை வரவைக்க வேண்டுமா?


விண்டோசில் டாஸ்க் பாரில் உள்ள அறிவிப்பு பகுதியில் (Notification Area) எப்பொழுதும் நீங்கள் விரும்பும் பெயரை வரவைக்க..,

Control Panel -> Regional and Language Options -> Customize -> Time சென்று AM Symbol, PM Symbol என்ற கட்டங்களில் தேவையான டெக்ஸ்டை டைப் செய்து Time Format= hh:mm:ss tt என மாற்றி Apply & OK கொடுத்தால் போதும்

Friday, 20 March 2009

"Open with" என்று வருகிறதா?



My Computer -ல் ஏதாவது டிரைவை திறக்க முயற்சிக்கும் பொழுது " Open with" என்று வருகிறதா?


நோட்பேடிற்கு (Note Pad) சென்று அதில் ஒன்றும் டைப் செய்யாமல் "autorun.inf" எனப் பெயரிட்டு சேமித்துக்கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் கணிணியில் எந்த டிரைவை திறக்கும்பொழுது "Open with" செய்தி வருகிறதோ அந்த டிரைவில் இந்த கோப்பை காப்பி செய்துவிட்டால் போதுமானது.

இனி அந்த பிழை வராது.


இந்த முறையிலும் சரியாகவில்லையெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Thursday, 19 March 2009

உங்கள் கோப்புகளை நொடியில் தேட..



கணினியில் ஒரு குறிப்பிட்ட ' text ' உள்ளடக்கியுள்ள கோப்பை தேடவேண்டுமென்றால், நாம் வழக்கமாக 'Search' க்கு போய் ' File type' ஐயும் 'Containing text' ஐயும் கொடுத்து தேட சொல்வோம்.


ஆனால் மேற் குறிப்பிட்ட முறையில் கோப்புகளை தேட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

மற்றொரு வழியும் உள்ளது.

'Control panel ' க்கு சென்று ' Administrative Tools' ஓபன் செய்து கொள்ளவும். இதில் 'Computer Management - > Services and Applications -> Indexing Service -> System -> Query the Catalog' சென்று
Enter your free text query below:

என்ற இடத்தில் தேடப்போகும் கோப்பில் உள்ள ஏதாவது ' text' ஐ டைப் செய்து 'Search' கொடுக்கவும்.

என்ன விரல் சொடுக்கும் நேரத்தில் உங்கள் தேடுதல் முடிந்துவிட்டதா?

சில சமயங்க்களில் 'Service is not running ' என்று பிழை செய்தி வந்தால், 'Control panel -> Administrative Tools -> Services ' -ல் 'Indexing Service ' சென்று அதில் 'Start ' அல்லது 'Startup type -ல் Automatic ' என்று கொடுக்கவும்.

Tuesday, 17 March 2009

Invisible Folder - லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு..



I
nvisible Folder - எப்படி உருவாக்குவது என்பதைபற்றி என்னுடைய முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.

லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு.. லேப்டாபில் 'Numeric Key pad' இல்லாத காரணத்தினால் இது சாத்தியமில்லையோ என்ற ஐயத்தை களையவே இந்தபதிவு.

Invisible Folder - எப்படி உருவாக்குவது என்பதைபற்றி கிழ்கண்ட லிங்கில்படித்துவிட்டு பிறகு இதை தொடரவும்.



http://suryakannan.blogspot.com/2009/03/invisble-folder.html


Start->Run-ல் osk.exe என டைப் செய்து என்டர் அடிக்கவும். இப்பொழுது On-Screen Keyboard உங்கள் திரையில் வரும்.

தேவையான Folder-ல் ரைட் கிளிக் செய்து 'Rename' தேர்வு செய்யவும். இப்பொழுது On-Screen Keyboard -ல் nlk (Number Lock) கீயை Off செய்யவும். பிறகு Alt கீயில் கிளிக் செய்து Numberic Pad-ல் '0160' கிளிக்செய்து மறுபடியும் Alt கீயை Off செய்து என்டர் கிளிக் செய்யவும்.

Monday, 16 March 2009

My Documents - Folder Location -ஐ வேறு Drive க்கு மாற்றுவது எப்படி?




வழக்கமாக My Documents
C:\Documents and Settings\உங்கள் User Name\My Documents என்று இருக்கும்.
ஒருவேளை உங்கள் System Drive -ல் இடபற்றாகுறை, மற்றும் இதர காரணங்களுக்காக நீங்கள் My Documents ஐ வேறு டிரைவிற்கு மாற்ற வேண்டுமென்றால்,

1. தேவையான டிரைவில் "My Documents" Folder -ஐ Create செய்து கொள்ளவும்.

2. My Computer -ஐ திறந்து கொண்டு, அதில் இடது புறமுள்ள Common Task pane-ல் உள்ள "My Documents" - ரைட் கிளிக் செய்து Properties -க்கு செல்லவும். (வலதுபுறமுள்ள "My Documents Folder"-ல் அல்ல.)

3. இதில் Target எனும் இடத்தில் நீங்கள் புதியதாக உருவாக்கிய "My Documents"- Folder-ன் சரியான பாதையை டைப் செய்து Apply -ல் கிளிக் செய்யவும்.



Saturday, 14 March 2009

கண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை உருவாக்குவது எப்படி?




கண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?


1. எந்த ஃபோல்டரை கண்ணுக்கு புலப்படாமல் (Invisible Folder) செய்ய வேண்டுமோ, அந்த ஃபோல்டரை ரைட் கிளிக் (Right Click) செய்து 'Rename' கிளிக் செய்யவும்.

2. புதுப்பெயரை இடும் பொழுது Alt கீயை அழுத்திக் கொண்டு '0160' ( Numeric Pad-ல்) டைப் செய்து என்டர் அடிக்கவும்.
(இப்பொழுது ஃபோல்டரின் பெயர் மறைந்துவிடும்.)

3. ஃபோல்டரில் ரைட் கிளிக் செய்து Properties -ல் Customize tab கிளிக் செய்து Change Icon கிளிக் செய்யவும். இதில் நிறைய ஐகான்கள் (Icons) இருக்கும் Scroll செய்து பார்த்தால் அவற்றிற்கு இடையில் வெற்று (Blank) ஐகான்களும் இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். Apply மற்றும் Ok.

கண்ணுக்கு தெரியாத போல்டர் ரெடி!

ப்பூ இவ்வளவுதானா!!!


Friday, 13 March 2009

எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!...



Hide any file inside any other file.

உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருந்தால் இது சாத்தியமாகும். FAT32 வில் இந்த வித்தை பலிக்காது.

உதாரணமாக Solitaire பைலை (Sol.exe) ஒரு டெக்ஸ்ட் (Text) பைலுக்குள் மறைத்து வைக்க என்ன செய்ய வேண்டும்...

நீங்கள் 'C' ட்ரைவை உபயோகிப்பதாக வைத்துக்கொள்வோம்.

1. 'TEST' என்ற போல்டரை உருவாக்கவும்.(C:\TEST) எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

2. அந்த போல்டருக்குள் ஒரு டெக்ஸ்ட் பைலை (Text Document) உருவாக்கி, அதனுள் ஏதாவது டைப் செய்து விட்டு அந்த பைலுக்கு container.txt என பெயரிட்டு சேமித்து கொள்ளவும். (இந்த டெக்ஸ்ட் பைலுக்குள் தான் Sol.exe பைலை மறைத்து வைக்க போகிறோம்)

3. \windows\system32 என்ற போல்டரிலிருந்து sol.exe பைலை C:\TEST க்கு காப்பி செய்யவும்.

4. இப்பொழுது Command Window ஐ திறந்து கொண்டு, C:\TEST போல்டருக்கு சென்று “Type Sol.exe > container.txt:sol.exe” இதை டைப் செய்து என்டர் அடிக்கவும்.

5. திரையில் எந்த மாற்றமும் தெரியாது. அந்த டெக்ஸ்ட் பைலின் அளவு + .Sol.exe பைலின் அளவு 50 கேபி ஆகியிருக்கும். அந்த டெக்ஸ்ட் பைலை திறந்து பார்த்தால், நீங்கள் முன்பு டைப் செய்திருந்த அனைத்தும் அப்படியே இருக்கும்.

6. நீங்கள் C:\TEST. போல்டரில் காப்பி செய்த Sol.exe பைலை அழித்துவிடவும்.

7. இப்பொழுது மறைத்து வைத்த ஃபைலை எப்படி திறப்பது? கீழ்கண்ட கட்டளையை கொடுக்கவும்.

“start c:\test\container.txt:sol.exe”

அவ்ளோதான்.

இப்படி எந்த வகை பைலையும், இன்னொரு எந்த வகை பைலுக்குள்ளும் மறைத்து வைக்கலாம். (உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருக்கும் பட்சத்தில்..)

குறிப்பு:- நீங்கள் மறைத்து வைக்கும்
பைலின் பெயரை மறந்துவிட்டால் சிரமம்.

Tuesday, 10 March 2009

ஃபயர் ஃபாக்ஸில் மௌஸ் வீலின் 5 பயன்பாடுகள்

இதோ உங்களுக்காக! ஃபயர் ஃபாக்ஸில் நேரத்தை மிச்சப்படுத்த...,



. 1. டேபை க்ளோஸ் செய்ய (Close Tab):-
டேபின் மீது கர்சரை (cursor) வைத்து மௌஸ் வீல் பட்டனை க்ளிக் செய்யவும்.

2. ஹைபர் லிங்கை (Hyper link) புதிய டேபில் திறக்க:-
வழக்கமாக நாம் ஹைபர் லிங்க்கில் மௌஸின் வலது பட்டனை க்ளிக் செய்து அதில் (Open Link in new tab) என்ற மெனுவில் கிளிக் செய்வோம்.
அதற்கு பதிலாக ஹைபர் லிங்க்கில் கர்சரை வைத்து மௌஸின் வீல் பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.

3. நீங்கள் நிறைய டேபை ஓபன் செய்திருந்தால், இடப்புறமும், வலப்புறமும் உள்ள அம்புக்குறியை க்ளிக் செய்வதன் மூலம் ஹிடன் டேப்களை (Hidden Tab) பார்க்கமுடியும். அதற்கு பதிலாக எதாவது ஒரு டேபின் மீது கர்சரை வைத்து, மௌஸ் வீலை ஸ்குரோல்(Scroll) செய்தால் போதுமானது.

4. பார்வர்டு மற்றும் பேக்வர்டு (Farward/Backward):-
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வலைப்பக்கத்திற்கு முன்னும், பின்னும் (Farward/Back) பட்டனை கிளிக் செய்வதற்கு பதிலாக ஷிப்ட் (shift) கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் வீலை முன்னும், பின்னும் உருட்டினால் போதுமானது.

5. காட்சி பெரிதாக்க/சிறிதாக்க(Zoom)
வலைப்பக்கத்தில் கர்சரை வைத்து கண்ட் ரோல் கீ (Ctrl) + ஸ்குரோல்(Scroll).

Thursday, 5 March 2009

இரகசியம், பரம இரகசியம்...



இரகசியம், பரம இரகசியம்...

கார் பிரேக் டவுன்.

அது ஒரு இரவு நேரம்.

காட்டு பிரதேசம்.

துணைக்கு யாருமில்லை.

நகரமோ வெகு தொலைவில்.


அருகில் ஒரு மடாலயம்.

'அன்று இரவு எங்காவது தங்கி, பின் காலையில் ஆகவேண்டியதை பார்த்துக்கொள்ளலாம்' என்ற எண்ணம் உதிக்க, மடத்தின் கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்த துறவியிடம், ' என்னுடைய கார் பிரேக் டவுன் ஆகிவிட்டது, இன்றிரவு இங்கு தங்குவதற்கு அனுமதி கிடைக்குமா?' என்றான்.

துறவியும் பெருந்தன்மையுடன் அனுமதித்து அறுசுவை உணவளித்ததோடு, அவனுடைய காரையும் சீடர்களைக் கொண்டு சரிசெய்தார்.

அவனும் மிகுந்த களைப்போடு உறங்கப் போகும் பொழுது, ஒரு விசித்திரமான ஒலியை கேட்டான். இதற்கு முன் கேட்டிறாத அந்த ஒலி அவனை மிகவும் பரவசப்படுத்தியது.

மறுநாள் காலை துறவிகளிடம் 'அந்த ஒலி'யைப் பற்றி விசாரித்தான்.
அதற்கு ஒரு துறவி, ' அந்த ஒலியைப் பற்றி உனக்கு எதுவும் சொல்ல முடியாது. . .

ஏனென்றால்

நீ ஒரு துறவி அல்ல'.


அவன் மிகுந்த ஏமாற்றமடைந்தாலும், துறவிகளுக்கு நன்றி சொல்லிவிட்டு அவனுடைய வழியில் கிளம்பினான்.

ஒரு சில வருடங்களுக்கு பின். . .

மறுபடியும் அதே மடத்தின் அருகில் அவனுடைய கார் பழுதடைந்தது.
அன்று அவனை உபசரித்தது போலவே, இம்முறையும் அவனுக்கு உணவளித்து, காரையும் சரிசெய்தார்கள்.

அன்றிரவும், அந்த வினோத ஒலி!

மறுநாள் காலை துறவிகளிடம் 'அந்த ஒலி'யைப் பற்றி விசாரித்தான்.
அதற்கு ஒரு துறவி, ' அந்த ரகசிய ஒலியைப் பற்றி உனக்கு எதுவும் சொல்ல முடியாது. . .

ஏனென்றால்


நீ ஒரு துறவி அல்ல'.

அவன், 'சரி! நான் துறவியானால்தான் அந்த ரகசிய ஒலியைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்றால்... நான் எவ்வாறு துறவி ஆக முடியும்?..'

துறவி பதிலலித்தார்.
' நீ இந்த உலகம் முழுவதும் சுற்றி வந்து, இவ்வுலகில் உள்ள புற்களின் தளைகளின் எண்ணிக்கையையும், மணல் துகள்களின் எண்ணிக்கையையும் மிகச் சரியாக அறிந்து கொண்டால்.. நீயும் துறவி ஆகி விடலாம்'.

அவன் தனது பாதையை நிர்ணயித்துக் கொண்டான்.

40 வருடங்களுக்கு பின்,

அவன் மறுபடியும் அந்த மடத்தின் கதவை தட்டினான்.

அனைத்து துறவிகளின் முன்னிலையில் வெற்றிக்களிப்போடு சொன்னான்.

' நான் உலகம் முழுவதும் சுற்றி வந்தேன்.
மொத்த புற்களின் எண்ணிக்கை 549,483,145,236,284,232.
மொத்த மணல் துகள்களின் எண்ணிக்கை 766,899,231,281,219,999,129,382

மூத்த துறவி,' நல்லது, நீ இப்பொழுது துறவி ஆகிவிட்டாய்.
இப்பொழுது அந்த வினோத ஒலியின் இரகசியத்தை காணலாம்'

மூத்த துறவி, அழகிய மரவேலைப்பாடுகளுடனிருந்த கதவை காட்டி,
'அந்த இரகசியம் இதற்கு பின்னால் இருக்கிறது' என்று, அதன் திறவுகோலை அவனிடம் தந்தார்.

கதவை திறந்தவுடன்.
அதனுள், கல்லினால் ஆன மற்றொரு கதவு.

அதையும் திறக்க,

மாணிக்க கற்களினால் அலங்கரிக்கப்பட்ட கதவு.

உள்ளே,

நீலநிற கற்களினாலான கதவு.

மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொன்றாக திறந்து உள்ளே போய் கொண்டிருந்தான்.

'மரகதம்'

'வெள்ளி'

'புட்பராகம்'

'செவ்வந்திக்கல்'

இறுதியாக துறவி சொன்னார்,' இதுதான் இறுதி கதவிற்கான திறவுகோல்.'

அவனும் முடிவில்லாப் பயணம் முற்றுப்பெறப்போவதை எண்ணி மிகுந்த ஆர்வத்துடன் அந்த கதவைத் திறந்தான்.

உள்ளே,

அவன் கண்ட காட்சி.

அற்புதம்!

ஆனந்தம்!

பேரின்பம்!

அந்த வினோத ஒலியின் இரகசியத்தை கண்டான்.

இதற்குமுன் அவன் அனுபவித்து அறியாத ஓர் உன்னத உணர்வு.
மெய் மறந்து நின்றான்.


ஆனால், நான் சொல்ல முடியாது..


அது என்னவென்று..


ஏனென்றால்..


நீ ஒரு துறவி அல்ல!. . .