Thursday, 5 March 2009

இரகசியம், பரம இரகசியம்...



இரகசியம், பரம இரகசியம்...

கார் பிரேக் டவுன்.

அது ஒரு இரவு நேரம்.

காட்டு பிரதேசம்.

துணைக்கு யாருமில்லை.

நகரமோ வெகு தொலைவில்.


அருகில் ஒரு மடாலயம்.

'அன்று இரவு எங்காவது தங்கி, பின் காலையில் ஆகவேண்டியதை பார்த்துக்கொள்ளலாம்' என்ற எண்ணம் உதிக்க, மடத்தின் கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்த துறவியிடம், ' என்னுடைய கார் பிரேக் டவுன் ஆகிவிட்டது, இன்றிரவு இங்கு தங்குவதற்கு அனுமதி கிடைக்குமா?' என்றான்.

துறவியும் பெருந்தன்மையுடன் அனுமதித்து அறுசுவை உணவளித்ததோடு, அவனுடைய காரையும் சீடர்களைக் கொண்டு சரிசெய்தார்.

அவனும் மிகுந்த களைப்போடு உறங்கப் போகும் பொழுது, ஒரு விசித்திரமான ஒலியை கேட்டான். இதற்கு முன் கேட்டிறாத அந்த ஒலி அவனை மிகவும் பரவசப்படுத்தியது.

மறுநாள் காலை துறவிகளிடம் 'அந்த ஒலி'யைப் பற்றி விசாரித்தான்.
அதற்கு ஒரு துறவி, ' அந்த ஒலியைப் பற்றி உனக்கு எதுவும் சொல்ல முடியாது. . .

ஏனென்றால்

நீ ஒரு துறவி அல்ல'.


அவன் மிகுந்த ஏமாற்றமடைந்தாலும், துறவிகளுக்கு நன்றி சொல்லிவிட்டு அவனுடைய வழியில் கிளம்பினான்.

ஒரு சில வருடங்களுக்கு பின். . .

மறுபடியும் அதே மடத்தின் அருகில் அவனுடைய கார் பழுதடைந்தது.
அன்று அவனை உபசரித்தது போலவே, இம்முறையும் அவனுக்கு உணவளித்து, காரையும் சரிசெய்தார்கள்.

அன்றிரவும், அந்த வினோத ஒலி!

மறுநாள் காலை துறவிகளிடம் 'அந்த ஒலி'யைப் பற்றி விசாரித்தான்.
அதற்கு ஒரு துறவி, ' அந்த ரகசிய ஒலியைப் பற்றி உனக்கு எதுவும் சொல்ல முடியாது. . .

ஏனென்றால்


நீ ஒரு துறவி அல்ல'.

அவன், 'சரி! நான் துறவியானால்தான் அந்த ரகசிய ஒலியைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்றால்... நான் எவ்வாறு துறவி ஆக முடியும்?..'

துறவி பதிலலித்தார்.
' நீ இந்த உலகம் முழுவதும் சுற்றி வந்து, இவ்வுலகில் உள்ள புற்களின் தளைகளின் எண்ணிக்கையையும், மணல் துகள்களின் எண்ணிக்கையையும் மிகச் சரியாக அறிந்து கொண்டால்.. நீயும் துறவி ஆகி விடலாம்'.

அவன் தனது பாதையை நிர்ணயித்துக் கொண்டான்.

40 வருடங்களுக்கு பின்,

அவன் மறுபடியும் அந்த மடத்தின் கதவை தட்டினான்.

அனைத்து துறவிகளின் முன்னிலையில் வெற்றிக்களிப்போடு சொன்னான்.

' நான் உலகம் முழுவதும் சுற்றி வந்தேன்.
மொத்த புற்களின் எண்ணிக்கை 549,483,145,236,284,232.
மொத்த மணல் துகள்களின் எண்ணிக்கை 766,899,231,281,219,999,129,382

மூத்த துறவி,' நல்லது, நீ இப்பொழுது துறவி ஆகிவிட்டாய்.
இப்பொழுது அந்த வினோத ஒலியின் இரகசியத்தை காணலாம்'

மூத்த துறவி, அழகிய மரவேலைப்பாடுகளுடனிருந்த கதவை காட்டி,
'அந்த இரகசியம் இதற்கு பின்னால் இருக்கிறது' என்று, அதன் திறவுகோலை அவனிடம் தந்தார்.

கதவை திறந்தவுடன்.
அதனுள், கல்லினால் ஆன மற்றொரு கதவு.

அதையும் திறக்க,

மாணிக்க கற்களினால் அலங்கரிக்கப்பட்ட கதவு.

உள்ளே,

நீலநிற கற்களினாலான கதவு.

மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொன்றாக திறந்து உள்ளே போய் கொண்டிருந்தான்.

'மரகதம்'

'வெள்ளி'

'புட்பராகம்'

'செவ்வந்திக்கல்'

இறுதியாக துறவி சொன்னார்,' இதுதான் இறுதி கதவிற்கான திறவுகோல்.'

அவனும் முடிவில்லாப் பயணம் முற்றுப்பெறப்போவதை எண்ணி மிகுந்த ஆர்வத்துடன் அந்த கதவைத் திறந்தான்.

உள்ளே,

அவன் கண்ட காட்சி.

அற்புதம்!

ஆனந்தம்!

பேரின்பம்!

அந்த வினோத ஒலியின் இரகசியத்தை கண்டான்.

இதற்குமுன் அவன் அனுபவித்து அறியாத ஓர் உன்னத உணர்வு.
மெய் மறந்து நின்றான்.


ஆனால், நான் சொல்ல முடியாது..


அது என்னவென்று..


ஏனென்றால்..


நீ ஒரு துறவி அல்ல!. . .

9 comments:

  1. செமத்தியா எங்களை ஏமாத்திட்டீங்க..

    ReplyDelete
  2. ஆகாயமனிதன்..6 March 2009 at 6:01 am

    RAGASIYA(M)

    ReplyDelete
  3. Hisham Mohamed - هشام6 March 2009 at 7:55 am

    புற்களின் தளைகளின் எண்ணிக்கையையும், மணல் துகள்களின் எண்ணிக்கையையும் அறிந்து கொண்டேன் 12322932732, 74523412349.இப்ப எனக்கு சொல்றீங்களா!!!!!!!!

    ReplyDelete
  4. பட்டாம்பூச்சி7 March 2009 at 3:58 am

    இது ஆவறதில்ல ஆவறதில்ல.போங்க இது போங்கு ஆட்டம் :))

    ReplyDelete
  5. கோவி.கண்ணன்15 April 2009 at 9:20 pm

    //ஏனென்றால்..நீ ஒரு துறவி அல்ல!. . .//ஆஹா.......

    ReplyDelete
  6. தமிழ்நெஞ்சம்4 December 2009 at 7:51 am

    s u p e r

    ReplyDelete
  7. cheating.... but unexpected ending....

    ReplyDelete
  8. //'செவ்வந்திக்கல்'//

    அப்படின்னா என்னங்க புதுசா இருக்கு?

    ReplyDelete