Tuesday, 10 March 2009

ஃபயர் ஃபாக்ஸில் மௌஸ் வீலின் 5 பயன்பாடுகள்

இதோ உங்களுக்காக! ஃபயர் ஃபாக்ஸில் நேரத்தை மிச்சப்படுத்த...,



. 1. டேபை க்ளோஸ் செய்ய (Close Tab):-
டேபின் மீது கர்சரை (cursor) வைத்து மௌஸ் வீல் பட்டனை க்ளிக் செய்யவும்.

2. ஹைபர் லிங்கை (Hyper link) புதிய டேபில் திறக்க:-
வழக்கமாக நாம் ஹைபர் லிங்க்கில் மௌஸின் வலது பட்டனை க்ளிக் செய்து அதில் (Open Link in new tab) என்ற மெனுவில் கிளிக் செய்வோம்.
அதற்கு பதிலாக ஹைபர் லிங்க்கில் கர்சரை வைத்து மௌஸின் வீல் பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.

3. நீங்கள் நிறைய டேபை ஓபன் செய்திருந்தால், இடப்புறமும், வலப்புறமும் உள்ள அம்புக்குறியை க்ளிக் செய்வதன் மூலம் ஹிடன் டேப்களை (Hidden Tab) பார்க்கமுடியும். அதற்கு பதிலாக எதாவது ஒரு டேபின் மீது கர்சரை வைத்து, மௌஸ் வீலை ஸ்குரோல்(Scroll) செய்தால் போதுமானது.

4. பார்வர்டு மற்றும் பேக்வர்டு (Farward/Backward):-
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வலைப்பக்கத்திற்கு முன்னும், பின்னும் (Farward/Back) பட்டனை கிளிக் செய்வதற்கு பதிலாக ஷிப்ட் (shift) கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் வீலை முன்னும், பின்னும் உருட்டினால் போதுமானது.

5. காட்சி பெரிதாக்க/சிறிதாக்க(Zoom)
வலைப்பக்கத்தில் கர்சரை வைத்து கண்ட் ரோல் கீ (Ctrl) + ஸ்குரோல்(Scroll).

2 comments:

  1. நண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிபாக பிடிக்கும்,படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-) அதிலும் கலைஞர் பத்தின பதிவை கண்டிப்பாக பாருங்கள் http://sureshstories.blogspot.com/

    ReplyDelete
  2. @ சூர்யா ௧ண்ணன்நன்றி ஊப்பர்! கண்ணன் ஹி ஹி :-)நன்றி நண்பரே எனக்கும் உங்க ச வியாதி தொத்திக்கிச்சு

    ReplyDelete