Google Buzz சேவை கூகுள் நிறுவனத்தால் பெப்ரவரி 9ஆம் தேதி 2010 -இல் துவங்கப்பட்டு குறுகிய காலத்திலேயே உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு சேவையாகும். அதுவும் நமது தமிழ் பதிவர்கள் 400 க்கும் மேற்பட்ட கமெண்டுகளை எல்லாம் கடந்து பெரும் சாதனை படைத்து வருகிறார்கள் என்பதை நாமறிவோம்.
சரி இப்படி நம்மில் பலரால் மிகவும் விரும்பப்படும் Google Buzz ஐ உங்கள் நெருப்புநரி (FireFox) உலாவியின் சைடுபாரில் இணைத்து, இணையத்தில் பிற வலைப்பக்கங்களில் உலாவும் பொழுதே, Buzz இலும் பணி புகுந்து விளையாட என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
உங்கள் நெருப்புநரி உலாவியில், ஏதாவது Bookmark இன் மீது வலது க்ளிக் செய்து, New Bookmark என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் வசனப்பெட்டியில், Name க்கு நேராக சம்பந்தமுள்ள பெயரை கொடுங்கள். (My Buzz). அடுத்து, Location க்கு நேராக கீழே உள்ள URL ஐ காப்பி செய்து, பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
https://m.google.com/app/buzz?source=mog&gl=us&force=1#~buzz:view=following
Add பொத்தானை அழுத்தி இணைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது Bookmarks பகுதியில் நீங்கள் உருவாக்கிய (My Buzz) புக்மார்க் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.
இதனை க்ளிக் செய்யுங்கள். முதல் முறை உங்கள் கடவு சொல் கேட்கப்படும். கொடுங்கள்.
அவ்வளவுதான்.. இதோ உங்கள் அபிமான Google Buzz உங்கள் உலாவியின் இடதுபுற சைடுபாரில்..
.
hi hi. நல்லாத்தானிருக்கி:))) டாங்ஸு
ReplyDeleteமிகவும் அருமையான தகவல் அண்ணா ... பகிர்வுக்கு நன்றி..
ReplyDeletechromela intha option irukka
ReplyDelete.inraya paadham padithuvittaen !
ReplyDelete.indru poi naalai varraen !
:)) நன்றி.. இப்படிக்கு பஸ் உரிமையாளர்கள் சங்கம்
ReplyDeleteதங்களின் பணி சிறக்கட்டும்..!
ReplyDeleteநல்லதொரு பகிர்வு!
நன்றி!
வாழ்த்துக்கள்..!
தகவலுக்க நன்றி சகோதரம்...
ReplyDelete