Tuesday, 2 November 2010

Excel Tips: பயனுள்ள கேமரா கருவி!

Excel 2007 பயன்பாட்டில் நம்மில் பலரும் அறியாத ஒரு பயனுள்ள கருவி Camera Tool ஆகும். இந்த கட்டளை கருவி எக்சல் பயன்பாட்டில் உள்ள எந்த ரிப்பன் மெனுவிலும் காணப்படாததால் இதை குறித்து பலரும் அறிந்திருக்க நியாயமில்லை. 

இந்த கருவியின் பயன் என்ன என்பதை முதலில் பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஷீட்களைக் கொண்ட ஒரு எக்சல் கோப்பை உருவாக்குகிறீர்கள். முதல் ஷீட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட செல் ரேஞ்சை மட்டும் ஒரு படமாக எடுத்து மற்றொரு ஷீட்டில் ஆவணத்திற்காக தேவையான இடத்தில் படமாக இணைத்துக் கொள்ளலாம். இதிலுள்ள முக்கிய வசதி என்னவெனில், இப்படி ஒருமுறை படமாக Capture செய்யப்பட்டு, மற்றொரு ஷீட்டில் Paste செய்யப்பட்ட படத்தின் மூலமான,  cell group இல் நீங்கள் ஏதாவது மாறுதல்களை செய்யும் பொழுது, தானாகவே அந்த paste செய்யப்பட்ட படத்திலும் டைனமிக்காக மாற்றம் அப்டேட் செய்யப்படும் என்பது இதனுடைய சிறப்பம்சமாகும்.

இந்த கருவியை முதலில், உங்கள் எக்சல் பயன்பாட்டில் உள்ள Quick Access Toolbar இல் இணைக்க வேண்டும். இதற்கு எக்சலில் இடது மேற்புறமுள்ள Office Button க்கு அருகாமையில் உள்ள Quick Access Toolbar இல் உள்ள கீழ்புறம் நோக்கிய அம்புக்குறியை க்ளிக் செய்து, More Commands பொத்தானை அழுத்தவும்.
அடுத்து திறக்கும் Excel Options திரையில், Choose commands from லிஸ்ட் பாக்ஸில், Commands Not in the Ribbon  என்பதை க்ளிக் செய்யுங்கள். 



இப்பொழுது விரிவாக்கப்படும் கட்டளைகளில், Camera ஐ தேர்வு செய்து Add பொத்தானை அழுத்தவும்.


இப்பொழுது Camera கருவி Quick Access Toolbar இல் இணைக்கப்பட்டுவிடும்.





இனி தேவையான செல்களை தேர்வு செய்து Quick Access Toolbar இல் நாம் இணைத்த கேமரா பொத்தானை அழுத்தவும். பிறகு, பேஸ்ட் செய்ய வேண்டிய ஷீட்டிற்கு சென்று, க்ளிக் மற்றும் ட்ராக் செய்யும் பொழுது, நாம் தேர்வு செய்திருந்த செல்கள் அனைத்தும் ஒரு படமாக (picture) இங்கு இணைக்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம்.


இதே போன்று எக்சல் அல்லாத பயன்பாடுகளில், பேஸ்ட் கட்டளை மூலமாக, இந்த படங்களை பேஸ்ட் செய்ய முடியும்.



இவ்வளவு நாள் தெரியாம போச்சே! 


.

13 comments:

  1. உபயோகமான தகவலை, மிக எளிதில் புரிந்துகொள்ளும் விதம் விளக்கிய தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தகவல் சார்,
    தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள்
    பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. அப்படியா!!! மிக்க நன்றி சார்...

    ReplyDelete
  4. வாவ் செம:) தாங்ஸ் தாங்க்ஸ்

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள தகவல்

    நான் எப்பொழுதுமே எக்செல் தான் பயன் படுத்துகிறேன்.

    ஒரு கடிதம் எழுத கூட எக்செல்தான் பயன்படுத்தவேன்.

    Income Tax Calculation sheet,
    Provident Fund Account Slip,
    salary Bill
    மற்றம் அனைத்தக்கும் பயன்படுத்தி பள்ளி மாணவர்களின் வினா விடை வரை இந்த Excel ஐ பயன் படுத்தி நான் கடிதம் மற்றும் எத்தகைய தேவைக்கம் Excel தான் பயன் படுத்துவேன்.
    ஏற்கனவே தாங்கள் தொவித்த படி Calculator ஐ யும் இதே மாதிரி பயன் படுத்துகிறேன்.

    நன்றி தங்கள் தகவலுக்கு

    அன்புடன் வராகன்

    ReplyDelete
  6. suri,
    very nice camera and FM .It is very useful to all. with blessings
    Happy Diwali wishes
    vijaya

    ReplyDelete
  7. ரொம்ப நல்ல பதிவு .. ! வாழ்த்துக்கள்.. ! உங்களுக்கு என்னோட தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள தகவல் சார்.

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு.

    முன்பு ஒரு முறை கேள்விபட்டது உண்டு, ஆனால் ஏன் எப்படி என்று மறந்து விட்டேன்.

    நன்றி.

    ReplyDelete
  10. You keep surprising with these kind of tips.
    Great stuff Surya.
    Many Thanks.

    ReplyDelete
  11. வாவ்.. சூப்பர்..

    நன்றி..

    ReplyDelete
  12. உபயோகமான தகவல். உபயோகமான தகவலுக்கு நன்றி.

    ReplyDelete