Wednesday, 6 October 2010

Microsoft OneNote: மாணவர்களுக்கான பயனுள்ள கருவி!

Microsoft OneNote பயன்பாட்டை குறித்து இடுகை எழுதும் போதெல்லாம் தைரியமாக "தொடரும்.." போட்டு விடலாம் என தோன்றுகிறது. அந்த அளவிற்க்கு பல வசதிகளை உள்ளடக்கியது இந்த OneNote. ஏதாவது கணினி பயன்பாட்டில் ஒரு தேவை வரும்பொழுது, எதற்கும் OneNote -இல் முயற்சி செய்து பார்க்கலாமே, என தைரியமாக யோசிக்கலாம் என நினைக்கிறேன்!. 

இந்த இடுகை மாணவர்களுக்கானது. இனி பள்ளி கல்லூரிகளில் நோட்டு புத்தகம் அன்றி, நெட்டு புத்தகம் பயன்படுத்தும் மிக அருகாமையில் நாம் இருக்கிறோம்.  சரி விஷயத்திற்கு வருவோம். இந்த OneNote பயன்பாட்டை ஒரு நோட்டு புத்தகம் போல பயன்படுத்தி அதன் பலன்களை பெறுவது எப்படி? என்பதை பார்க்கலாம். 

முதலாவதாக OneNote பயன்பாட்டை திறந்து கொண்டு, பாடத்திற்கான பெயரை தலைப்பாக கொடுத்து விடுங்கள். 

 
அதற்கு கீழாக க்ளிக் செய்து subtitle அல்லது பாடம் எண் கொடுக்கலாம்.


அடுத்து சிறிது கீழாக குறிப்பிட்ட கேள்வி அல்லது Topic ஐ டைப் செய்து, என்டர் கொடுத்து அடுத்த வரியில் அதற்கான பதில் அல்லது விளக்கங்களை டைப் செய்யவும்.

அடுத்து இந்த வரிகளை மட்டிலும் italic செய்து கொள்வது, கேள்வியையும் பதிலையும் தனித்து பிரித்தறிய உதவும். இந்த வரிகளை மட்டும் தேர்வு செய்து Toolbar இல் Increase Indent க்ளிக் செய்து கொள்ளவும். 

இப்பொழுது கீழே உள்ளது போன்று தோற்றமளிக்கும்.

இனி இதன் மீது மௌஸ் கர்சரை எடுத்துச் செல்லும் பொழுது ஒரு சிறு பெட்டி தோன்றுவதை கவனிக்கலாம். 

இதை இரட்டை க்ளிக் செய்யும் பொழுது, விளக்கம் அல்லது பதிலை மறைத்து விடும்.


மறுமுறை இரட்டை க்ளிக் செய்யும் பொழுது, பழையபடி விரிவாக காண்பிக்கும். 


இந்த வசதியை Flash கார்டு போல பயன்படுத்தி வகுப்பறையில் எடுத்த பாடங்களை, மனனம் செய்ய, மற்றும் சரிபார்க்க, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது கருத்து. 

OneNote பற்றிய இடுகை இன்னும் தொடரும் என்று நினைக்கிறேன்..    

OneNote குறித்த எனது பிற இடுகைகள்:

Microsoft OneNote - உபயோகமான பயன்பாடு

பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை!

இது என்னுடையை 300 வது இடுகை!. ஆதரவளித்து வரும் திரட்டிகள்! சக பதிவுலக நண்பர்கள்!, வாசகர்கள் அனைவருக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள்! 

.

14 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு.. அருமை

    ReplyDelete
  2. இந்த இடுகையும் one note பற்றிய முந்திய இடுகைகளும் நன்றாக உள்ளது. உண்மையிலேயே மாணவர்களுக்கு பயனுள்ள கருவிதான்.

    http://senthilathiban.blogspot.com

    ReplyDelete
  3. முச்சதத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  4. நன்றி சூர்யா.

    ReplyDelete
  5. தல கலக்குறீங்க போங்க.வாழ்த்துக்கள்.தொடர்ந்து உங்களது பதிவை எதிர் நோக்குகிறோம்.

    ReplyDelete
  6. வணக்கம் சூர்யா சார்,
    300 -வது பதிவிற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
    அன்புடன்
    கோவை சக்தி

    ReplyDelete
  7. 300-ற்கு வாழ்த்துகள் சூர்யா...

    ReplyDelete
  8. அருமை.. தம்பி அருமை....

    ReplyDelete
  9. உங்கள் அனைத்து பதிவுகளும் சூப்பர். விரைவில் 1000 பதிவுகள் கடக்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. தல உண்மையில இந்த புது போட்டோ கலக்கல்.பாருங்க அப்பறம் உங்கள சினிமா கினிமவுல கூப்பிட போறாங்க.புது விசயம் அபோ நாங்க எங்க கத்துக்குறது

    ReplyDelete
  11. முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். பல பயனுள்ள இடுகைகள் மேலும் மேலும் பெருகட்டும்.

    ReplyDelete
  12. முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நாங்க படிச்ச காலத்துல இப்படி ஒரு சூரியன் இல்லாம போயிடுச்சே

    ReplyDelete