நாம் இணையத்தில் யூ டியூப் போன்ற தளங்களில் காணொளிகளை காணும் பொழுது, பின்புலத்திலுள்ள வெள்ளை நிறம் மற்றும் அந்த காணொளியை தவிர அத்தளத்தில் இருக்கும் பிற சமாச்சாரங்கள், நாம் படம் பார்க்கின்ற ஒரு நிறைவைக் கொடுப்பதில்லை.
ஒரு சிலருக்கு விளக்கை அணைத்தால்தான் ஒரு படம் பார்த்த திருப்தியே வரும். இவர்களுக்காகவே கூகிள் க்ரோம் உலாவிக்கான நீட்சி!
இந்த நீட்சியை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொள்வது மிகவும் எளிது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
Install பொத்தானை அழுத்தி நீட்சியை நிறுவிக் கொண்டபிறகு, Options பகுதிக்கு சென்று, Opacity மற்றும் Hotkey ஆகிய வற்றை உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி, சேமித்துக் கொள்ளலாம்.
பிறகு உங்கள் விருப்பமான காணொளியை இணையத்தில் காணும் பொழுது அட்ரஸ் பாருக்கு அருகில் உள்ள, Omni பாரில் உள்ள விளக்கு ஐகானை (Turn of the Lights) க்ளிக் செய்தால் போதுமானது.
திரையில் காணொளியை தவிர பிறப் பகுதிகள் இருட்டாக்கப்படும்.
.
அய் இது நல்லாருக்கே:)
ReplyDeleteஉபயோகித்து கொண்டு உள்ளேன் நன்றாக உள்ளது சார் நல்ல பகிர்வு.
ReplyDeleteபுதுசா இருக்கு பயன்படுத்தி பார்க்கிறேன்!
ReplyDeleteநல்ல பகிர்வு நன்றி சார்...
ReplyDeleteஉண்மையில் பயனுள்ள நீட்சி.யூடூப் பார்க்கும் போது இடைஞ்சலாக இருந்து வந்தது.நன்றி சூர்யா அவர்களே..
ReplyDelete