Facebook சமீபகாலமாக அனைவராலும் விருப்பத்துடன் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமாகும் (Social Network Website).
இந்த தளத்தில் உறுப்பினராக உள்ள நீங்கள் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியாக, அதிகாரியாக, பணியாளராக, முதலாளியாக அல்லது ஆசிரியராக, சமூக சேவகராக, குடும்ப பெண்ணாக, மாணவனாக, மாணவியாக இப்படி ஏதோ ஒருவராக இருக்கலாம்.
இந்த தளம் மூலமாக பலரும் தங்களுக்கு பிடித்த புகைப்படங்களை உங்களுக்கு Tag செய்து விடுவது வாடிக்கை. இப்படி Tag செய்யப்பட்ட புகைப்படங்களை, உங்கள் பக்கத்திற்கு வரும் நண்பர்கள் பார்வையிட முடியும். பிரச்சனையே இங்குதான் ஆரம்பம்.
ஏதோ ஒரு பார்ட்டியில் நீங்கள் மப்பும் மந்தாரமுமாக மிதந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை அல்லது மற்ற நண்பர்கள் / உறவினர்கள் விரும்பாத குழுமத்தில் நீங்கள் கலந்திருக்கும் புகைப்படத்தை உங்கள் நண்பர் ஆர்வக் கோளாறில் Facebook இல் இணைத்து, உங்களுக்கு Tag செய்து விட்டார் என வைத்துக் கொள்வோம்.
முகபுத்தகத்தில் உங்கள் மேலதிகாரி அல்லது உங்கள் மனைவி அல்லது உங்கள் மாணவன் உங்களுக்கு கீழே பணிபுரியும் நபர் உங்கள் பக்கத்தை பார்வையிடும் பொழுது, Tag செய்யப்பட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டால் உங்கள் கதி என்ன? இந்த ஆபத்திலிருந்து தப்ப வழியென்ன?
அது மட்டுமின்றி இப்படி Tag செய்யப்பட்ட புகைப்படத்திற்கு கமெண்ட் வேறு பலரும் இடுவார்கள், இது வேறு உங்கள் மெயில் பாக்ஸில் அடிக்கடி தோன்றி எரிச்சலை கிளப்பும்.
இது போன்று, உங்கள் முகபுத்தகத்தில் Tag செய்யப்பட்ட புகைப்படங்களை நீக்க என்ன செய்ய முடியும் என்பதை பார்க்கலாம்.
Facebook இல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது புறமுள்ள Profile லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்கள் ஃப்ரொபைல் பக்கத்தில் Photos லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது திறக்கும் பக்கத்தில் நீங்கள் இணைத்த புகைப்படங்கள் மட்டுமின்றி Tag செய்யப்பட்ட புகைப்படங்களும் இருக்கும்.
அந்த புகைப்படங்கள் எந்த ஆல்பத்தில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதில் Tag செய்யப்பட்டுள்ள புகைப்படத்தை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் திரையில் Tag செய்யப்பட்ட புகைப்படத்திற்கு கீழாக உள்ள Remove tag என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவுதான்!..
இது போன்று, நீங்கள் விரும்பாத, உங்களுக்கு Tag செய்யப்பட்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக Tag remove செய்ய வேண்டும்.
.