நாம் பணி நிமித்தமாக இருக்கும் பொழுது, இணையத்தில் ஏதாவது பயனுள்ள வலைப்பூக்களை பார்த்து, ’அட நல்ல விஷயமாக இருக்கிறதே! அவசியம் பிறகு சமயம் கிட்டும் பொழுது படிக்க வேண்டும்’ என பல சமயங்களில் யோசித்ததுண்டு, ஆனால் சமயம் கிட்டும் பொழுது அந்த வலைப்பூ முகவரியை மறந்து போய் விடுவதும் நிகழ்கிறது.
இந்த பணியை எளிதாக்க கூகுள் க்ரோம் (Google Chrome) உலாவியில் பயன்படுத்தும்படியான ஒரு உபயோகமான நீட்சி Local Read Later ஆகும். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
Install பொத்தானை அழுத்தி க்ரோம் உலாவியில் பதிந்து கொள்ளுங்கள்.
இந்த நீட்சியை பதிந்து கொண்ட பிறகு, Toolbar button ஒன்று உருவாகியிருப்பதை கவனிக்கலாம்.
இந்த ஐகானை வலது க்ளிக் செய்து Options பகுதிக்கு செல்லுங்கள்.
இங்கு, ஷார்ட் கட் கீயை உங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
மேலும், Check if you want to delete the page after you click it for read. எனும் வசதியை தேர்வு செய்வதன் மூலமாக, நீங்கள் பிறகு படிக்கலாம் என்று குறித்து வைத்திருந்த வலைப்பக்கத்தை சமயம் கிட்டும் பொழுது படித்த பிறகு, அது தானாகவே பட்டியலிலிருந்து நீக்கப்படும்.
தேவையான வலைப்பக்கத்தை காணும் பொழுது Ctrl+Alt+R கீகளை ஒரு சேர அழுத்தும் பொழுது, அந்த பக்கங்கள் Local Read Later இல் இணைக்கப்படுவதை, அதன் ஐகானில் தெரியும் எண்ணிக்கைகளை வைத்து உறுதி படுத்திக் கொள்ளலாம். (உதாரணமாக 2)
இப்படியாக Read Later இல் தொகுத்து வைத்துள்ள வலைப்பக்கங்களை பார்வையிட, அந்த ஐகானை க்ளிக் செய்து அதில் தேவையான வலைபக்கத்தை க்ளிக் செய்து பார்வையிடலாம்.
குறித்து வைத்த வலைப்பக்கங்களை படித்த பின்னர், அந்த பக்கங்கள், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, எண்ணிக்கை குறைவதை கவனிக்கலாம்.
.
இது எனக்கு உபயோகம் ஆகும் நன்றி
ReplyDeleteசூப்பரான நீட்சி தலைவா...பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான செய்தி சொன்னீர்கள் தலைவா!
ReplyDeleteமிகவும் பயனுள்ளது
ReplyDeleteபகிர்விற்கு நன்றி சார்
பயனுள்ள செய்தி, மற்றும் ஓட்டு போட்டுட்டு தான் இந்த பதிவை படிச்சேன்.
ReplyDeleteஇது டேமேஜர ஏமாத்தி படிக்க முடியுதான்னு நாளைக்கு டெஸ் பண்ணி சொல்றேன்:)
ReplyDeleteஅவசியமான பதிவு.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபயனுள்ள பதிவு!!
ReplyDeleteஎனக்கு ஒரு உதவி தேவை..முகப்புத்தகத்தில் சில பேர் நம் விருப்பமில்லாமல் போட்டோவை டாக் செய்து விடுறாங்க..அவர்களிடன் அப்படி செய்யாதீங்கன்னு நேரடியா சொல்லமுடியவில்லை...அவர்கள் டாக் செய்த போட்டோக்களை எப்படி டெலிட் செய்வதுன்னு சொல்லுங்களேன்,அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு வரும் பின்னூட்டங்கள் மெயிலில் வந்து எரிச்சல் படுத்துகிறது..
வலைப் பதிவுகளை சுற்றிவருபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.. இப்படி firefox க்கு ஏதாவது உள்ளதா??
ReplyDeleteUseful
ReplyDeleteஅன்புடைய பதிவருக்கு வணக்கம்,
ReplyDeleteதங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...
அன்புடன்,
வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com
chrome ன் ஆரம்ப வேகம் பிடித்திருந்தும் முழுமையாக chromeக்கு மாறாமல் firefox ல் இன்னும் தங்கியிருக்க வேண்டியிருப்பதே இந்த நீட்சிகளின் பற்றாக்குறையால் தான்..விரைவில் இப் பிரச்சினையைத் தீர்த்துவிடுவார்கள் போல..
ReplyDelete||ஏதாவது பயனுள்ள வலைப்பூக்களை பார்த்து, ’அட நல்ல விஷயமாக இருக்கிறதே! அவசியம் பிறகு சமயம் கிட்டும் பொழுது படிக்க வேண்டும்’ என பல சமயங்களில் யோசித்ததுண்டு, ஆனால் சமயம் கிட்டும் பொழுது அந்த வலைப்பூ முகவரியை மறந்து போய்||
ReplyDeleteசரி சரி... இனியாவது என்னோட போஸ்ட் எல்லாம் ஒழுங்கா படிங்க... :p
எனக்கு வேண்டிய நீட்சி நன்றி நண்பரே
ReplyDeleteஓட்டு போட்டாச்சி
ReplyDeletesuper thala...
ReplyDeleteநன்றி பாஸ்.
ReplyDeleteமிகவும் உபயோகமானது. நன்றி!
ReplyDeletevery useful Soorya.
ReplyDelete