Sunday, 24 October 2010

மைக்ரோசாப்ட் வேர்டு உதவி - தொடர்ச்சி..

மைக்ரோசாப்ட் வேர்டு பய்ன்பாட்டில், நமது படைப்புகள் அல்லது ப்ரோஜக்ட், தீஸிஸ் போன்றவற்றை உருவாக்கும் பொழுது, அதன் வடிவமைப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வோம். பிரஸண்டேஷன் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பதும், கஷ்டப்பட்டு உருவாக்கியதை மேலும் அழகுபடுத்தி சப்மிட் செய்வதும் அவசியமானதாகும். 

நமது டாக்குமெண்டின் முதல் பாராவின் முதல் எழுத்து புத்தகங்களில் வருவது போல பெரியதாக அமைப்பது உங்கள் டாக்குமெண்டிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த வசதியை வேர்டு 2007 தொகுப்பில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

உங்கள் டாக்குமெண்டை திறந்து கொள்ளுங்கள்.


அடுத்து, முதல் பாராவின் முதல் எழுத்தின் முன்பாக கர்சரை க்ளிக் செய்து கொண்டு, Insert ரிப்பன் மெனுவிற்கு சென்று, Drop Cap பொத்தானை அழுத்தி Dropped என்பதை தேர்வு செய்யுங்கள். 


அவ்வளவுதான். முதல் எழுத்து மட்டும் பெரிய வடிவில் வந்திருப்பதை கவனிக்கலாம். இதை பெரிதாக்கவோ, சிறிதாக்கவோ செய்ய முடியும்.


மேலும் இதனை அழகு படுத்த, Drop Cap பொத்தானை அழுத்தி இறுதியாக உள்ள Drop Cap Options க்ளிக் செய்து,திறக்கும் வசனப் பெட்டியில், எழுத்துருவை Old English Text MT என மாற்றி, தேவைக்கேற்ப Lines to Drop ஆகியவற்றை தேர்வு செய்து, OK கொடுங்கள்.

இனி அழகாக உங்கள் ப்ராஜெக்டை சப்மிட் செய்யலாம்.






.

5 comments:

  1. உங்கள் எளிமையான எழுத்து நடை அருமை..

    ReplyDelete
  2. மிக அழகு! நன்றி!

    ReplyDelete
  3. தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

    http://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html

    ReplyDelete
  4. தொடர்ந்து எழுதுங்கள், எங்களை போன்ற புதிய வலைப்பதிவர்களுக்கு பயன்படக்கூடிய தகவல்களையும் எழுதுங்கள் என்னுடைய வலைப்பூ www.tnuniversal.blogspot.com .நம்முடைய கட்டுரைகளை யாரும் காப்பி செய்ய முடியாதபடி வாட்டர் மார்க் கொடுப்பது எப்படி என்பதையும் கூறவும்

    ReplyDelete