Tuesday, 31 August 2010

Internet Explorer பிரச்சனைக்கான தீர்வு

Internet Explorer 8 பயன்படுத்துபவர்கள் பல சமயங்களில் ஹேங் ஆவது, மற்றும் மிகவும் மெதுவாக இயங்குவது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். மிக எளிய முறையில் இந்த பிரச்சனையை தீர்க்க என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம். (பல வழிகளில் இதுவும் ஒன்று. உடனடியாக ரீ இன்ஸ்டால் செய்வதை தவிர்த்து இதை முயற்சித்துப் பாருங்கள்) 

நாம் பெரிதாக ஒன்றும் செய்யப்போவதில்லை. IE யில் செட்டிங்க்ஸ் அனைத்தையும் reset செய்யப்போகிறோம் அவ்வளவுதான். முதலில் IE ஐ திறந்து கொள்ளுங்கள். (Normal mode இல் திறக்க இயலவில்லையெனில் safe mode -இல் திறந்துக் கொள்ளுங்கள்) Tools மெனுவில் Internet Options செல்லுங்கள்.

   
இப்பொழுது திறக்கும் விண்டோவில் Advanced tab இற்கு சென்று Reset Internet Explorer settings என்பதற்கு கீழாக உள்ள Reset பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 





இப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில் Delete personal settings என்பதை தேர்வு செய்ய வேண்டியதில்லை.


Reset பொத்தானை மட்டும் க்ளிக் செய்தால் போதுமானது. அனைத்தும் reset ஆன பிறகு Close பட்டனை க்ளிக் செய்து IE ஐ Restart செய்து கொள்ளுங்கள். இத வழியில் IE 8 இல் உள்ள பெரும்பாலான பிரச்சனை தீர்ந்து விடும். 

.   

5 comments:

  1. தகவல்க்கு நன்றி சூர்யா சார்...

    ReplyDelete
  2. இது ஒரு அடிப்படை முறை என்பது சரியே.

    ஆனால், கணியில் ஏதாவது மால்வேர் மென் பொருள் இருக்கும் பட்சத்தில், அதன் செயல்பாட்டை இந்த முறை தடுத்து விடும் என்று நினைக்கிறேன்.

    பகிர்வுக்கு நன்றி கண்ணன்.

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி நண்பா. ரொம்ப யூஸ்புல்
    இன்ஃபர்மேஷன். நன்றி.....

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல்!நன்றி சூர்யா

    ReplyDelete