நேற்றைய எனது இடுகையில் (கூகிள் க்ரோம் - மிகப் பயனுள்ள நீட்சி!) கூகிள் க்ரோம் உலாவியில், வலைப்பக்கங்களில் பொருள் புரியாத சொற்களுக்கு, Google Dictionary நீட்சியின் மூலமாக எப்படி அதே திரையில் விளக்கம் காண்பது என்பதை பார்த்தோம். இன்று, இது போன்ற ஒரு உபயோகமான வசதியை அளிக்கும் Inline Google Definitions எனும் நெருப்புநரி உலாவிக்கான நீட்சியை குறித்து பார்க்கலாம். (தரவிறக்கச் சுட்டி இடுகையின் கீழ் தரப்பட்டுள்ளது)
இந்த நீட்சியை தரவிறக்கி நெருப்புநரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, ஒரு முறை உலாவியை ரீஸ்டார்ட் செய்யவேண்டியிருக்கும்.
இனி வலைப்பக்கங்களில் பொருள் அல்லது விளக்கம் தேவைப்படும் வார்த்தையை தேர்வு செய்து, மௌசின் வலது பொத்தானை அழுத்தி, Inline Definitions கருவியை சொடுக்குங்கள்.
நீங்கள் உலாவிக்கொண்டிருக்கும் அதே வலைப்பக்கத்திலேயே அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கான பொருள் மற்றும் விளக்கங்கள், பல்வேறு தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டு வழங்கப்படும் என்பது இதனுடைய சிறப்பம்சம்.
.
வாவ் அருமையான பதிவு மிக்க நன்றி
ReplyDeleteநன்றி தலைவரே
ReplyDeleteநன்றி இராஜ சூரியன்!
ReplyDeleteவாங்க தலைவா!
ReplyDeleteநான் புதிய வரவு ....நல்ல விஷயங்களை எளிதாக சொல்லும் போது ..அதில் ஒரு பிடிப்பு இருக்கும் ....எனக்கு இந்த MAC OS பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ...நண்பரே
ReplyDeleteவணக்கம் ஆசிரியரே.,
ReplyDeleteமிக அருமையான பதிவு,
உங்கள் blog களவாடப்பட்டு விட்டது என்று வந்தது. நீங்கள் அனைத்தும் திரும்ப பெற்றுக்கொண்டு உங்கள் பயணம் தொடர ( கவனமாக உங்கள் பதிவு எங்களுக்கு ஆசான் போல் சொல்லிக்கொண்டே இருக்கனும் )
என் மனதார வாழ்த்துக்கள்
உங்கள்
பாலகிருஷ்ணன்
(மதுரை )
ஆஸ்திரேலியா