பலரும் தங்களது வன்தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பார்ட்டிஷன்களை வைத்திருப்பது வழக்கம். தங்களுக்கு தேவையான, இரகசியமான கோப்புகளை ஒரு குறிப்பிட்ட ட்ரைவில் வைத்திருப்போம். ஒருவேளை உங்கள் கணினி, குடும்ப உறுப்பினர்கள் அல்லது அலுவலக சகாக்கள் என பலரும் உபயோகிப்பதாக இருந்தால், இது போன்ற கோப்புகளை மற்றவர்கள் பார்வையிடாமலோ அல்லது டெலிட் செய்யாமலோ தடுக்க விண்டோஸில் ஒரு சின்ன ட்ரிக் என்னவென்று பார்க்கலாம்.
நாம் எப்படி இதை சாத்தியப்படுத்தப் போகிறோம் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். அதாவது, நமது இரகசிய, முக்கிய கோப்புகள் மற்றும் கோப்புறைகள் அனைத்தையும் தனியாக ஒரு ட்ரைவில் வைத்துவிட்டு, அந்த குறிப்பிட்ட ட்ரைவை எவரும் கையாள முடியாதவாறு முடக்கப் போகிறோம்.
Start menu வில் Run அல்லது search box (Windows vista/7) சென்று gpedit.msc என தட்டச்சு செய்து என்டர் கொடுங்கள்.
இப்பொழுது திறக்கும் Local Group Policy Editor விண்டோவில் இடதுபுற பேனில் User Configuration -> Administrative Templates -> Windows Components -> Windows Explorer என்ற பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Windows Explorer ஐ க்ளிக் செய்தபிறகு, வலது புற Settings டேபில் Prevent access to drives from My Computer என்பதை இரட்டை க்ளிக் செய்திடுங்கள்.
இனி திறக்கும் வசனப்பெட்டியில் enabled ரேடியோ பட்டனை கிளி செய்து கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள options பெட்டியில் எந்தெந்த ட்ரைவ்களை Restrict செய்ய வேண்டுமோ அவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்! நம்ம ட்ரிக் முடிஞ்சது. இனி My Computer திறந்து பார்க்கும் பொழுது, நாம் restrict செய்த ட்ரைவ் தெரியும், ஆனால் அதை திறக்க முயலும் பொழுது, கீழே தரப்பட்டுள்ளது போன்ற பிழைச் செய்தி வரும்.
மறுபடியும் பழையபடி மாற்ற, மேலே சொன்ன அதே வழியை பின்பற்றி Disable க்ளிக் செய்தால் போதுமானது. இந்த ட்ரிக்கை விண்டோஸ் ஹோம் பதிப்புகள் தவிர்த்து மற்ற பதிப்புகளில் செய்ய இயலும். (Administrative Rights உங்களுக்கு இருக்க வேண்டும்)
.
என்னுடைய டவுசர்தான் கிழிந்தது,
ReplyDeleteஒன்னுமெ நடக்கவில்லை.எனது கம்யூட்டருக்கு சூர்யா கண்ணனைப் பிடிக்கவில்லை.நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லை.
வருகைக்கு நன்றி ராவணன் சார்! உங்கள் விண்டோஸ் XP ஹோம் பதிப்பாக இல்லாத வரையில் நான் சொல்வதை கேட்கும்.. My Computer -ல் ட்ரைவை காண்பிக்கும் ஆனால் திறக்க இயலாது.
ReplyDeleteநன்றி தலைவா.
ReplyDeleteநல்ல தகவல் சார்..
ReplyDeleteD drive வரை மட்டும்தான் lock செய்ய முடியுமா. இதில் E,F drives லாக் செய்ய இயலுமா?
ReplyDeleteமுடிந்த வரை group policy இல் கை வைக்காமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து.
ReplyDeleteநல்ல பதிவு :)
சூர்யா கண்ணன் அவர்களே,
ReplyDeleteரொம்ப நல்ல பதிவு. ஆனால் A,B,C,D drive மட்டும் தான் வருகின்றது. எனக்கு F வன் தட்டை மறைக்க என்ன செய்ய முடியும்?
நல்லது .... மிக்க நன்றி நண்பா
ReplyDeleteலினக்சில் தமிழ் தெரியவில்லை.
ReplyDeleteThanks for sharing dear buddy
ReplyDeleteby
Tech Shankar
நல்ல பகிர்வு சூர்யா.. நன்றீ
ReplyDeleteஇது சூப்பர்.. ஆனா ஒர்க் ஆகுதான்னு பார்த்துட்டு வந்து சொல்றேன்.. நன்றி..
ReplyDeleteஅன்புள்ள சுர்யகண்ணன் அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்களையும் ,நன்றிகளையும் தெரிவித்துகொள்கிறேன். காரணம் இன்று தான் நான் நீண்ட நேரம் உங்கள் தளத்தை படித்தேன். இதுவரை நேரம் இல்லாததால் படிக்கமுடியவில்லை. உங்களுடைய ஒவ்வொரு இடுகையும் மிகவும் பயனுள்ளதாக எனக்கு அமைந்தது. படிக்க படிக்க பல புதிய தகவல்கள் எனக்கு தெரிய ஆரம்பித்தது. பல இடுகைகளில் இருந்து நான் எனது டைரியில் இருந்து குறிப்பு எடுத்து கொண்டேன். இன்று முதல் என் மனமார்ந்த குருக்களில் நீங்களும் ஒருவர். இனி நேரம் இல்லை என்றாலும் உங்களுக்கு என தனி நேரம் ஒதுக்க போகிறேன். உங்கள் பழைய தளம் திருடப்பட்டு அதை மீண்டும் நீங்கள் மீட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி. அப்போது நான் உங்களிடம் தளத்தை எப்படி backup எடுப்பது என கேட்டேன் . இன்று உங்கள் தலத்தில் அதற்கு ஒரு தனி இடுகை இருந்தது . அதை நான் குறிப்பு எடுத்துக்கொண்டேன்.
ReplyDeleteமேலும் backup செய்ய தேவையான மென்பொருளையும் தரவிறக்கம் செய்துகொண்டேன். நான் உங்களை குருவாக நினைப்பதால் மீண்டும் ஓன்று கேட்கிறேன் . எனது ms word documunt இல் தமிழில் டைப் செய்ய முடியவில்லை. பெரும்பாலும் நான் எனது மெயிலில் தான் தமிழில் டைப் செய்கிறேன். எனது கணினியில் உள்ள ms word il தமிழ் இல் டைப் செய்வது எப்படி என்று தயவு செய்து கூறுங்கள்.
மேலும் வேலன் அவர்கள் தளமானது pdf கோப்பாக தரவிறக்கம் செய்யமுடிகிறது. அது போல உங்கள் தளத்தையும் pdf கோப்பாக தரவிறக்கம் செய்ய வழி செய்ய வேண்டும் .
பணிவுடன் கார்த்திகேயன்
@கர்திகேயன்
ReplyDeleteஇந்த சின்ன விசயத்துக்கெல்லாம் தல வார மாட்டாரு. அவரோடாய் சிஷ்யர்கள் நாங்க இருக்குறோம்.
மைக்ரோசாப்ட் -இன் ஒரு சின்ன மென்பொரும் இருக்குது. அதை நீங்க தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் நீங்க எளிதாக தமிழில் தட்டச்சலாம்.இதோ அந்த சுட்டி...
http://specials.msn.co.in/ilit/updates.aspx?TamilVersion=1.0.8.2000
அன்பு நண்பர் சூர்யா கண்ணன் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் ஏற்கனவே எனக்கு உதவி செய்து இருக்கிறீர்கள் ,இம்முறை தயவு செய்து E Book கிரியேட் எப்படி செய்வது ? இதபற்றி விளக்கமாகவும் அதன் சம்பந்த பட்ட சாப்ட்வேர் எங்கு கிடைக்கும்? உங்களால் அனுப்ப முடியுமா? தயவு செய்து எழுதவும் முடிந்தால் என் மெயிலில் அனுப்பவும் .நன்றி வணக்கம், S G ஸ்வாமிநாதன் . madrasipanditji@gmail.com
ReplyDeleteAnna enaku tamizhil eppadi type seivathu entru sollungal please yarum enaku sollamatranga please
ReplyDelete//nagarajan said...
ReplyDeleteAnna enaku tamizhil eppadi type seivathu entru sollungal please yarum enaku sollamatranga please//
இது என்னங்க சிதம்பர இரகசியமா?.. எனக்கு மின்னஞ்சல் செய்யுங்க.. suryakannan@gmail.com