கூகிள் நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது. இன்றைய இணைய உலகில் நாம் ஒரு தொழில்நுட்ப வல்லுனராக இல்லாவிட்டாலும் கூட, அவ்வப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தாற்போல நம்மை நாம் அப்டேட் செய்யாவிட்டால், நாம் outdated ஆகிவிடுவோம் என்பது நிதர்சனமான உண்மை.
சரி விஷயத்திற்கு வருவோம், ஏதோ ஒரு புதிய நகரத்திற்கு உங்கள் வாகனத்தில் செல்கிறீர்கள், அங்கு ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அல்லது சாலைக்கு செல்ல வேண்டும் எனில் விலாசம் தெரியாத ஊரில் ஒவ்வொருவரிடமும் வழி கேட்டு, விசாரித்து அங்கு செல்வதற்குள் டென்ஷனாகி விடும். பதிலாக உங்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, உங்கள் இணைய இணைப்புள்ள மடிகணினி அல்லது netbook அல்லது தற்பொழுது இணைய இணைப்புடன் வருகின்ற செல்போன் வழியாக இணையத்திற்குள் நுழைந்து, Google Maps தளத்திற்கு சென்று தற்பொழுது நீங்கள் உள்ள நகரத்தின் சாலை பெயரையும், போக வேண்டிய சாலை பெயரையும் கொடுத்தால், அந்த குறிப்பிட்ட சாலைக்கு செல்ல எந்தெந்த வழிகள் உள்ளன, எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு பயனடையலாம் என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும், இது அறியாதவர்களுக்காக.
maps.google.com தளத்திற்கு செல்லுங்கள்.
Set default location பகுதியில் நீங்கள் இருக்கும் நகரத்தின் பெயரி கொடுத்து சேமித்துக் கொள்ளுங்கள். பிறகு Get Directions லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இனி A க்கு நேராக நீங்கள் தற்பொழுதுள்ள சாலை அல்லது பகுதியின் பெயரையும், B க்கு நேராக நீங்கள் செல்ல வேண்டிய சாலையின் பெயரையும் கொடுத்து Get Directions பொத்தானை அழுத்துங்கள்.
அடுத்த நொடியில் நீங்கள் செல்லவேண்டிய சாலைகளின் வரைபடம் உங்கள் திரையில்..
அடுத்த நொடியில் நீங்கள் செல்லவேண்டிய சாலைகளின் வரைபடம் உங்கள் திரையில்..
எந்த சாலையிலிருந்து எந்த திசையில் திரும்ப வேண்டும் என்பதுவரை விரிவான விளக்கம் இடதுபுற பேனில் தோன்றுவது சிறப்பு.
அதுமட்டுமின்றி அந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல மற்று வழிகளும், அங்கு சென்றடைய ஆகும் காலம் ஆகியவற்றுடன் பட்டியலில் கிடைக்கும். தேவையான மாற்று வழியை கிளிக் செய்து அந்த வரைபடத்தையும் காணலாம்.
கூகிள் உங்கள் பயணத்தை எளிதாக்குகிறது.
எந்த வாகனத்தில் என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
.
நான் சில தினங்களுக்கு முன்பு எதேச்சையாக தேட ஆரம்பித்து பின்னர் அது கூகிள் மேப்பில் கொண்டுவிட்டது.
ReplyDeleteஉங்கள் பதிவு விளக்கமாக உள்ளது. நல்ல பகிர்வு.
இந்தியாவில் maps எல்லாம் வழிகாட்டுகின்றது என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்...பகிர்வுக்கு மிகவும் நன்றி...
ReplyDeleteஇவ்வளவு விஷயம் கூகுள் மேப்சுல இருக்குறது தெரியாம போச்சே
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி தல :)