Monday, 2 August 2010

விண்டோஸ் 7 - பலூன் அறிவிப்பை நீக்க

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் நாம் பணி புரிந்து கொண்டிருக்கும் பொழுது, Task bar -இல் உள்ள Notification area வில், உங்கள் கணினி பாதுகாப்பு குறித்து அவ்வப்பொழுது, Windows Action Center பலூன் அறிவிப்பு வருவதை கவனித்திருக்கலாம். இது சில சமயங்களில் பயனுள்ளதாக இருந்தாலும், பலருக்கு இது ஒரு தொல்லை தரும் அறிவிப்பாகவே இருந்து வருகிறது. 




இது போன்ற அறிவிப்புகளை நீங்கள் விரும்பாத பட்சத்தில் இதை நீக்குவது எப்படி என்பதை பார்க்கலாம். 

Control panel சென்று System and Security பகுதியில் உள்ள Action Center ஐ க்ளிக் செய்யுங்கள். 


இப்பொழுது  திறக்கும் Action Center திரையில் இடது புறமுள்ள Change Action Center Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள். 

இப்பொழுது Related Settings என்ற பகுதிக்கு கீழாக Problem reporting settings லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இனி திறக்கும் When to check for solutions to problem reports என்ற திரையில் நான்கு தேர்வுகள் தரப்பட்டிருப்பதை கவனிக்கலாம். இங்கு இறுதியாக உள்ள Never check for solutions என்பதை தேர்வு செய்து OK பொத்தானை க்ளிக் செய்யுங்கள். இதற்கு மேல் இந்த அறிவிப்பு உங்களை தொல்லை செய்யாது.
இது குறித்தான எனது மற்றொரு இடுகை விண்டோஸ் ஏழில் பலூன் அறிவிப்புகளை நீக்க..,


.


5 comments:

  1. விண்டோஸ் 7ல் உள்ள குறைகள் என்னவென்று சொல்லுங்களேன்!

    நன்றி!

    ReplyDelete
  2. sir ,all ur articles are nice.but when i click some articles it says page not found.why sir?

    ReplyDelete
  3. // danielprince said...

    sir ,all ur articles are nice.but when i click some articles it says page not found.why sir?//

    நண்பரே! எனது ஜிமெயில் கணக்கு சில நாட்களுக்கு முன்னர் ஹேக் செய்யப்பட்டு எனது இந்த ப்ளாக் முழுவதுமாக டெலிட் செய்யப்பட்டிருந்தது. பேக்கப்பிலிருந்து ரீஸ்டோர் செய்யும் பொழுது சிறு சிறு பிழைகள் ஏற்பட்டது.. சிறிது சிறிதாக சரி செய்து கொண்டு வருகிறேன். சிரமத்திற்கு வருந்துகிறேன்..

    ReplyDelete
  4. Hi Surya,

    A widget to redirect your recent posts is not working. Either update the widget or remove it. Please note it.

    Thanks,

    ReplyDelete