Wednesday, 30 June 2010

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பை பயன் படுத்துபவர்கள், குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், கணித சமன்பாடுகளை வேர்டு போன்ற பயன்பாடுகளில்  உபயோகிக்க சற்றே சிரமப் பட்டிருக்கிறார்கள். 

இவர்களது இந்த சிரமத்தை மனதில் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சியை, தனியாக வழங்கி வருகிறது. 


இதனை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, புதியதாக ஒரு ரிப்பன் தோன்றியிருப்பதை கவனிக்கலாம். இதிலுள்ள வசதிகளை பயன்படுத்தி எளிதாக கணித சமன்பாடுகளை அமைக்க முடியும்.

 
மேலும் இதன் பயன் பாடுகளை மைக்ரோசாப்ட் தளத்தில் பார்த்த பொழுது, 


சமன்பாடுகளுக்கு தீர்வு காண்பது போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம். 
இதிலுள்ள Equation Wizard மிகவும் தரமுள்ளதாக அறியவருகிறது. 


மொத்தத்தில் இது கணிதப் புலிகளுக்கு ஒரு நல்லத் தீனியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 


இது ஒரு நீட்சி மட்டுமே!, இது தவிர மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Unveils Microsoft Math என்ற மென்பொருள் இதை விட சிறப்பாக உள்ளது. ஆனால் இதன் விலை $20.

இந்த மென்பொருள் கணித மாணவர்கள் தங்கள் அசைன்மென்ட் ஐ சிறப்பாக உருவாக்க பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

.

Tuesday, 29 June 2010

கால்குலேட்டரில் கணக்கு போடலாம். இணையத்தில் உலாவ முடியுமா?

விண்டோஸ் XP -இல் தரப்பட்டுள்ள கால்குலேட்டரில் இது சாத்தியமே!


உங்கள் கணினியில் IE , FireFox போன்ற இணைய உலாவிகளில்  ஏதேனும் பிரச்சனை உருவாக்கி, வேலை செய்யாமல் போனால், உடனடி உதவிக்கு கால்குலேட்டரை இணைய உலாவியாக பயன்படுத்த இயலும்.
கால்குலேட்டரை திறந்து கொள்ளுங்கள். Help menu, அல்லது F1 அழுத்தி help விண்டோவை  திறந்துக் கொள்ளுங்கள். 


இந்த திரையில் இடது மேல் புறத்தில் உள்ள ஐகானை (கேள்விக்குறியுடன் உள்ளது) க்ளிக் செய்யுங்கள். 


இதில் Jump to URL... என்பதை க்ளிக் செய்யுங்கள். 


அடுத்து திறக்கும் வசனப் பெட்டியில் Jump to this URL என்பதற்கு கீழாக உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில் URL ஐ டைப் செய்யுங்கள். (http://www. ஆகியவற்றை சேர்க்க மறவாதீர்கள்) 


இது போன்று உங்கள் அபிமான வலைப்பக்கங்களை விண்டோஸ் கால்குலேட்டர் உதவிப் பக்கத்தை கொண்டு திறக்க இயலும். 



.

Monday, 28 June 2010

விண்டோஸ் செக்யூரிட்டி - 2

முக்கியமான வேலையாக கணினியை ஆன் செய்து விட்டு, விண்டோஸ் XP பூட் ஆவதற்குள்ளாக, மற்றொரு சிறு வேலையை முடித்துவிட்டு வரலாமே என்ற எண்ணத்தில் செல்கிறீர்கள். அந்த வேலையை முடித்துவிட்டு கணினியின் முன் வந்து பார்த்தால் ஒரு சில கணினிகளில் விண்டோஸ் Log on திரையில் கடவு சொல்லை கேட்டு காத்திருப்பதை கவனித்திருக்கலாம். 


இனி கடவு சொல் கொடுத்து, விண்டோஸ் திறக்கும் வரையில் காத்திருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு முறையும், ஒரு குறிப்பிட்ட பயனர் கணக்கிற்கு கடவு சொல் கொடுக்காமல், கணினி ஆன் செய்தவுடனேயே, Auto Log in ஆக என்ன செய் வேண்டும் என்பதை பார்க்கலாம். 

Start menu வில் Run சென்று control userpasswords2   என டைப் செய்து என்டர் கொடுங்கள். 

   
இப்பொழுது திறக்கும் User Accounts திரையில் Users டேபில் உள்ள பயனர்கள் பட்டியலில், எந்த பயனர் கணக்கு Auto Login ஆக வேண்டுமோ, அந்த பயனர் கணக்கை க்ளிக் செய்து கொள்ளுங்கள். 


இனி மேலே உள்ள Users must enter a user name and password to use this computer  என்ற செக் பாக்சை uncheck செய்து OK கொடுத்து விடுங்கள். மறுபடியும் கடவு சொல்லை கேட்கும் Automatically Log on   வசனப் பெட்டியில் சரியான கடவு சொல்லை கொடுத்து OK கொடுங்கள். 
  
அவ்வளவுதான்! இனிமேல் விண்டோஸ் துவக்கத்தில் கடவு சொல் கேட்க்காது. 


. 

Saturday, 26 June 2010

ஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி?

 
அலுவலகத்தில் எவ்வளவு நேரம்தான் கணினியின் முன்னால், சீரியஸாக வேலை செய்வது போல பாவ்லா காண்பித்துக் கொண்டிருக்க முடியும், என்று யோசிப்பவர்களுக்கு.. (இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.. )

Double Vision - Online media browser எனும் எளிய மென்பொருள். தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 

இதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் கணினி அப்ளிகேஷனில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது, யூ டியுப் போன்ற தளங்களில் படம் பார்க்கவும், இணையத்தில் உலாவவும் முடியும், இது உங்கள் அப்ளிகேஷன் மீது transparent ஆக செயல் படுவதால் உங்கள் பணியும் நடந்தது போல இருக்கும், படம் பார்த்தது போலவும் இருக்கும். 


நீங்கள் பணி புரிந்துக் கொண்டிருக்கும் பொழுது (யூ டுயுபில் படம் பார்ப்பது) உங்கள் பாஸ் வந்து விட்டால் Ctrl+Esc அழுத்தி இதனை hide செய்து விடலாம். 

 
Background -இல் உங்கள் பணியும் நடந்துக் கொண்டிருக்கும். 


மேலும் இதன் settings பகுதிக்குச் சென்று  transparent அளவு மற்றும் mute போன்ற மாற்றங்களை செய்து கொள்ளலாம். 
ஆணி பிடுங்குறமாதிரி, பிடுங்காமல் இருக்க நினைக்கும் நண்பர்களுக்கு இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும். 




குறிப்பு:-
நிஜமாகவே ஆணி பிடுங்குபவர்களும் ஓட்டுப் போடலாம். 


.

Friday, 25 June 2010

ஹாண்ட் ப்ரேக்

DVD வீடியோக்களை MP4 அல்லது MKV வீடியோ வகைகளுக்கு கன்வெர்ட் செய்ய ஒரு சில மென்பொருட்கள் சந்தையில் இருந்தாலும் HandBrake எனும் கருவி ஓர் கட்டற்ற சுதந்திர இலவச மென்பொருள் ஆகும். 

 
இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் OS இயங்குதளங்களில் இயங்கும் படியாக தனித்தனியாக பொதிகளில் தரவிறக்க கிடைக்கிறது. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 

இதன் File மெனுவில் உள்ள Source பொத்தானை அழுத்தி, மாற்ற வேண்டிய DVD வீடியோ  கோப்பு அல்லது Video_TS Folder ஐ தேர்வு செய்து கொள்ளலாம். 


Tools menu வில் Options க்ளிக் செய்து General டேபில் output folder - location ஐ கொடுக்கலாம்.  பிறகு  மூலத்திரையில் Output settings இற்கு கீழாக உள்ள container drop down list -இல் MP4 அல்லது MKV கோப்பு வகையை தேர்வு செய்து கொள்ளலாம்.  


மேலும் இதில் Video filters, Sub Titles, Chapters, Audio, video codec மாற்றுவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது. 

 
தேவையான அனைத்து settings களையும் செய்த பிறகு மேலே உள்ள Start பொத்தானை அழுத்தி காத்திருக்க வேண்டியதுதான். 

மொத்தத்தில் வீடியோ பிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு இலவச மென்பொருள் கருவியாகும்.



.

PDF கோப்புகளை எடிட் செய்ய இலவச மென்பொருள்

PDF என்றவுடன் உடனே நம் மனம் உச்சரிப்பது Adobe Acrobat. PDF கோப்புகளை படிப்பதற்கு Adobe Reader உட்பட பல  மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் ஒரு PDF கோப்பை உருவாக்க, ஸ்ப்ளிட் அல்லது மெர்ஜ் செய்ய, எடிட் செய்ய Adobe Acrobat Professional போன்ற மென்பொருட்களை பணம் செலவழித்து வாங்க வேண்டியுள்ளது. 

 
இந்த பணியினை எளிதாக செய்ய ஒரு கட்டற்ற சுதந்திர இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் PDFsam (sam= Split and Merge). தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 

இந்த மென்பொருளை உருவாக்கியவர்  Andrea Vacondio. இவர் பல வருடங்களுக்கு முன்பாக தனது இளநிலை பட்டப்படிப்பின் போது சமர்ப்பிக்க வேண்டிய தீசிஸ் உருவாக்கத்தின் போது, PDF கோப்பில் சில பகுதிகளை நீக்கவும், இணைக்கவும் அவசிமிருந்ததால், இதற்கான இலவச மென்பொருளை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இந்த எளிய மென்பொருள் கருவியை உருவாக்கும் எண்ணம் இவருக்கு தோன்றி  தனது வார இறுதி விடுமுறை நாட்களில் இதனை உருவாக்கும் பணியில் இறங்கி விட்டார். 
 

ஆரம்ப காலங்களில் Split and Merge இற்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட மென்பொருள் உருவாக்கம், பின்னர் விரிவடைந்து, split, merge, decrypt, encrypt, rotate, mix, set metadata, visually compose மேலும் பல வசதிகளை கொண்ட மென்பொருள் கருவியாக உருவெடுத்தற்கு காரணமாக இவர் சொல்லுவது, தினமும் காலையில் இவருடைய இணைய Forum த்தில் ‘Hey man, you saved my job yesterday with your software, thanks!’ போன்ற போஸ்டுகள் தான்.

  
இதனை உருவாக்க இவர் பயன்படுத்தியவை  Ubuntu, Eclipse, Ant போன்ற இலவச மென்பொருட்களையே. 


மிகவும் பயனுள்ள மென்பொருள் தரவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள். 


.

Wednesday, 23 June 2010

புகைப்படங்களில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தெளிவாக பெரிதாக்க

நம்மிடம் உள்ள புகைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வழக்கமாக நாம் பெரிதாக்க முயற்சி செய்கையில், அதனுடைய resolution பாதிக்கப்படுவது இயல்பு. சில சமயங்களில் நமது மொபைல் போன்களில் எடுக்கும் படங்களை பெரிதாக்கி பிரிண்ட் செய்யும் பொழுது படங்கள் தெளிவில்லாமல் இருப்பதை கவனிக்கலாம். 

நமக்கு தேவையான அளவில் படங்களை பெரிதாக்க ஒரு இலவச மென்பொருள் SmillaEnlarger (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த மென் பொருள் கருவிக்கு installation தேவையில்லை. தரவிறக்கி unzip செய்தபிறகு SmillaEnlarger ஃபோல்டருக்குள் உள்ள SmillaEnlarger.exe என்ற கோப்பை இயக்கினால் போதுமானது. 

கீழே உள்ள படத்தில் உள்ள ஒரு சிறிய பகுதியை இந்த கருவியை பயன் படுத்தி எப்படி பெரிதாக்குவது என்று பார்ப்போம்.


 
 SmillaEnlarger -இல் இந்த கோப்பை திறந்த பிறகு, இடது புறமுள்ள Output Dimensions பகுதிக்கு சென்று தேவையான அளவு - மாற்றங்களை தேர்வு செய்து கொள்ளலாம். 


இப்பொழுது cropping பேனில் படத்தில் ஒரு சிறிய பகுதியை தேர்வு செய்தவுடன்,

 
Thumbnail preview -இல் அந்த சிறிய பகுதி பெரிதாக, நாம் கொடுத்துள்ள அளவிற்கு தெளிவாக தெரிவதை கவனிக்கலாம். 
Enlarger Parameters பகுதியில் sharp, paint போன்ற வசதிகளை தேர்வு செய்து கொள்ளலாம். 


இதில் பல புகைப்படங்களை ஒரே  சமயத்தில் கையாளும் வசதியும் உள்ளது. 

 


.

கழுகுப் பார்வை

GUI (Graphical User Interface) என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ZUI என்பது என்ன?

ZUI (Zooming User Interface) அல்லது Zoo-ee என்றழைக்கப் படும் முறை மிகவும் சுவாரசியமானது. க்ளிக் செய்யாமலேயே உங்கள் டெஸ்க்டாப்பில் தேடுவதும், தேடிய கோப்புகளை பார்வையிடவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு சிறந்த முறையாகும். உதாரணமாக உங்கள் கணினியில் உள்ள ஒரு டெக்ஸ்ட் கோப்பு முதலில் மற்ற கோப்புகளோடு சேர்ந்து, ஒரு சிறிய புள்ளி போல தோன்றும், Zoom செய்ய செய்ய, Thumbnail வடிவிற்கு மாறி ஜூம் வேகத்திற்கு ஏற்ற வகையில் மெதுவாக பெரிதாகி முழு கோப்பு படிக்கும் வகையில் திறப்பது அற்புதம்.

இந்த ஜூ-ஈ முறையில் வடிவமைக்கப்பட்ட Eagle Mode என்ற ஒரு சிறிய (6.12 MB) மென்பொருள், அதுவும் கட்டற்ற சுதந்திர இலவச மென்பொருள், விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களில் சிறப்பாக செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இது windows Explorer க்கு மாற்றான ஒரு சுவாரசியமான கருவியாகும்.


இதில் தேவையான ஃபோல்டரில் கர்சரை வைத்து Zoom செய்ய செய்ய அதன் உள்ளடக்கம் தெரியவரும்.


க்ளிக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


JPG கோப்புகள், வீடியோ கோப்புகள், டெக்ஸ்ட் கோப்புகள் thumbnail வடிவில் மாறி முழுவதுமாக திறக்கும்.


இதில் க்ளிக் செய்து PAN செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது. புதிய ஃபோல்டர்களை உருவாக்க, காப்பி, மூவ், preview என பல வசதிகளும் உண்டு,

   
இதன் செயல்படும் வேகம் சிறப்பாகவே உள்ளது. அது தவிர இதனுள்ளே இணைக்கப் பட்டுள்ள, பல வசதிகளை கொண்ட கடிகாரம், Stop Watch, 3D Mines Game, Chess விளையாட்டு மிகவும் கவருவதாக உள்ளது.


அலாரம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.


இந்த சுவாரசியமான மென்பொருள் பயனாளர்களுக்கும், கணினிக்கும் இடையே ஒரு சிறந்த தொடர்பு சாதனமாகவும், வன்தட்டு, பிற தகவல் சேமிப்பு சாதனங்களில் மௌஸில் ஸ்க்ரோல் செய்து zoom செய்வதன் மூலமாகவே அனைத்து ஃபோல்டர்கள், கோப்புகளை கையாள முடிவது இதனுடைய சிறப்பம்சம்.


மெனுபாரும் ஜூம் செய்யும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

 

உபயோகித்துப் பாருங்கள் உண்மையாகவே கழுகுப் பார்வைதான்!



.


   

Tuesday, 22 June 2010

விண்டோஸ் ஏழு / விஸ்டா - Run as Administrator

விண்டோஸ் ஏழு மற்றும் விஸ்டா இயங்குதளங்களை உபயோகிப்பவர்கள் தாங்கள் நிறுவியுள்ள பல அப்ளிகேஷன்கள், யுடிலிடிக்கள் ஆகியவற்றை முழுமையான வசதிகளுடன் பயன் படுத்த Administrator mode -இல் இவற்றை இயக்க வேண்டியுள்ளது. 

இப்படியான ப்ரோகிராம்களை ஒவ்வொரு முறையும், Run as Administrator என கொடுத்து திறப்பதற்கு பதிலாக, அந்த ப்ரோகிராம்களின் Shortcut -இல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள். Shortcut பக்கத்தில் உள்ள Advanced பொத்தானை அழுத்துங்கள். 

இனி திறக்கும் Advanced Properties வசனப் பெட்டியில் “Run as administrator” என்ற செக் பாக்ஸை டிக் செய்து OK  கொடுங்கள். 
இதற்கு மேல் அந்த குறிப்பிட்ட ப்ரோகிராமை திறக்கையில் Administrator mode லேயே திறக்கும்.


.

Monday, 21 June 2010

விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும்

விண்டோஸ் XP இயங்குதளத்தில் பல தலைவலிகள் உள்ளன. இவற்றில் ஒரு சில வகைகளுக்கு மட்டுமான இலவச மருந்துகள் கிடைக்கும்  மருந்துக் கடையின் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக வெவ்வேறு விதமான  தலைவலிகள் என்னென்ன என்று பார்க்கலாம். 

1. File Folder Association:- 
உங்கள் வன்தட்டில் உள்ள எந்த ஃபோல்டரையும் திறக்க இயலாது. Open with என்று கேட்கும். 

2. Gif file Association:-
Gif - Extension கொண்டுள்ள கோப்புகளை திறக்க இயலாது. 

3. Drive Association:- 
உங்கள் வன்தட்டில் உள்ள C,D,E போன்ற ட்ரைவ்களை திறக்க இயலாது. 
4. EXE file Association:-
பெரும்பாலான EXE கோப்புகளை திறக்க முடியாமல் போவது. 


5. LNK file Association:-
Application shortcut கள் .lnk Extension கொண்டுள்ளதால், அப்ளிகேஷன் ஷார்ட்கட் களை திறக்க முடியாமல் போவது.


6. Jpeg file Association:-
நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எடுத்து வைத்திருந்த புகைப்படங்கள், மற்றும் கணினியில் உள்ள jpeg கோப்புகளை திறக்க இயலாது. 
7. TXT file Association :-
Text கோப்புகள் எதுவும் திறக்க இயலாது. 

8. ZIP Folder Association:-
சொல்ல வேண்டுமா? 

விண்டோஸ் இயங்குதளத்தில் வருகின்ற பல வியாதிகளில் மேலே சொல்லப்பட்டவை ஒரு பகுதி மட்டுமே. மொத்த வியாதியும் ஒன்றாக வந்தால்..

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. 
ட்ரைவை திறக்க முடியாது, 
ஃபோல்டரை  திறக்க முடியாது 
கோப்புகளை திறக்க முடியாது.. 
படங்களையும் பார்க்க முடியாது..

விவேக் காமெடி தான் நினைவிற்கு வருகிறது.. 
"சாய்ங்காலம் 6 மணிக்கு மேல கண்ணு ரெண்டும் அவிஞ்சு போச்சு,
ஒரு காது தீஞ்சு போச்சு
சீட்டு மூலத்துல தேஞ்சு போச்சு,
நெஞ்சு TB-ல காய்ஞ்சு போச்சு
கால்'ல ஆணி பாய்ஞ்சு போச்சு"

இவையனைத்திற்கும் ஒரே தீர்வு.. உபுண்டு இயங்குதளத்திற்கு  நீங்கள் மாறுவதுதான்.. 

அதெல்லாம் முடியாது.. இருப்பதையே டிங்கரிங் வேலை பார்ப்போம்.. என்ற முடிவிற்கு வந்தவர்கள், மருந்து கடைக்கு போங்க.. 




.

Saturday, 19 June 2010

விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் - ஒரு பார்வை

மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் ஆரம்ப காலங்களில் எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு பார்வை.  


செப்டம்பர் 1981 ஆண்டு Interface Manager என்ற பெயரில் துவங்கப்பட்ட ப்ராஜெக்ட் 1983 ஆண்டு Microsoft Windows என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1985 ஆண்டு Windows 1.0 பதிப்பு வெளியிடப்பட்டது. 


இது DOS இயங்குதளத்தில் இயங்கக் கூடிய ஒரு GUI அப்ளிகேஷன் ஆக வடிவமைக்கப் பட்டிருந்தது.  இதற்கு முன்னர் Ms-Dos -ல் Command டைப் செய்து பணிபுரிந்து வந்தவர்களுக்கு, இதில் மெளசை பயன்படுத்தி அப்ளிகேஷன்களை இயக்கும் முறை அனைவரை கவருவதாக இருந்தது.

மைக்ரோசாப்ட் - இன் முதல் மெளஸ் Steel Ball உடன்.. 


இந்த Windows 1.0 வின் Installation பொதிகள் அனைத்தும் Floppy Disc களிலேயே வெளியிடப்பட்டன. இடையில் ஒரு Floppy disc பிரச்சனை என்றாலும் இதனை நிறுவுவது சிரமமான காரியமாகிவிடும். 


Windows 1.0 வின் Interface Screen..


இது பிரபலமான Apple - Mac இயங்குதளத்தை ஒத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதிலுள்ள Menu bar குறிப்பாக Special menu மற்றும் 


Apple நிறுவனத்தின் MacPaint, MacWrite ஆகிய பயன்பாடுகள் மைக்ரோசாப்ட் தயாரிப்பில்  Write மற்றும் Paint ஆக காப்பியடிக்கப் பட்டிருப்பதாக புகார் எழுந்தது. 


Windows 1.0 பதிப்பு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை, இந்த பதிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரே ஒரு பயன்பாடு Aldus Pagemaker மட்டுமே.   நவம்பர் 1, 1987 -ல் Windows 2.0 பதிப்பு வெளியிடப்பட்டது. 

Windows 2.0 


இது மேலும் அதிர்ச்சியை Apple நிறுவனத்திற்கு ஏற்படுத்தியது. முன்னதாக 1985 ஆண்டு ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தில், ஆப்பிள் OS -இன் தோற்ற வடிவத்தை Windows 1.x பதிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் உரிமம் ஒப்புக் கொள்ளப் பட்டிருந்தது. 



ஆனால் Windows 2.0 பதிப்பின் தோற்றம் மற்றும் வடிவமைப்பு அச்சு அசலில் அப்படியே Apple Mac ஐ ஒத்திருப்பதை அடுத்து Visual Displays இற்கான Apple நிறுவனத்தின் காப்பி ரைட்டை  மீறிவிட்டதாக 1988 ஆண்டு Macintosh நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  மீது  வழக்கு தொடர்ந்தது.   



இது ஒரு புறம் இருந்தாலும், 1990 இல் கணினி பயனாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Windows 3.0 பதிப்பு வெளியாகியது. இதிலிருந்த Program Manager, File Manager மற்றும் Print Manager ஆகியவை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. ஐகான்களும் அனைவரையும் கவரும்படியாக வடிவமைக்கப் பட்டிருந்தது. (இதை கலர் மானிட்டரில் பார்ப்பதற்காக கோவை சென்று ரூம் போட்டு தங்கி CCIT யில் பார்த்து பிரமித்து, நாள் முழுக்க இனிய நண்பர்கள்  CAD Ramesh மற்றும் DOS Ramesh  உதவியோடு Solitaire game விளையாடி மகிழ்ந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.) 



படங்கள் மற்றும் தகவல்கள் Google மூலம் பெறப்பட்டது.. 
 .