GUI (Graphical User Interface) என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ZUI என்பது என்ன?
ZUI (Zooming User Interface) அல்லது Zoo-ee என்றழைக்கப் படும் முறை மிகவும் சுவாரசியமானது. க்ளிக் செய்யாமலேயே உங்கள் டெஸ்க்டாப்பில் தேடுவதும், தேடிய கோப்புகளை பார்வையிடவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு சிறந்த முறையாகும். உதாரணமாக உங்கள் கணினியில் உள்ள ஒரு டெக்ஸ்ட் கோப்பு முதலில் மற்ற கோப்புகளோடு சேர்ந்து, ஒரு சிறிய புள்ளி போல தோன்றும், Zoom செய்ய செய்ய, Thumbnail வடிவிற்கு மாறி ஜூம் வேகத்திற்கு ஏற்ற வகையில் மெதுவாக பெரிதாகி முழு கோப்பு படிக்கும் வகையில் திறப்பது அற்புதம்.
இந்த ஜூ-ஈ முறையில் வடிவமைக்கப்பட்ட Eagle Mode என்ற ஒரு சிறிய (6.12 MB) மென்பொருள், அதுவும் கட்டற்ற சுதந்திர இலவச மென்பொருள், விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களில் சிறப்பாக செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இது windows Explorer க்கு மாற்றான ஒரு சுவாரசியமான கருவியாகும்.
இதில் தேவையான ஃபோல்டரில் கர்சரை வைத்து Zoom செய்ய செய்ய அதன் உள்ளடக்கம் தெரியவரும்.
க்ளிக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
JPG கோப்புகள், வீடியோ கோப்புகள், டெக்ஸ்ட் கோப்புகள் thumbnail வடிவில் மாறி முழுவதுமாக திறக்கும்.
இதில் க்ளிக் செய்து PAN செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது. புதிய ஃபோல்டர்களை உருவாக்க, காப்பி, மூவ், preview என பல வசதிகளும் உண்டு,
இதன் செயல்படும் வேகம் சிறப்பாகவே உள்ளது. அது தவிர இதனுள்ளே இணைக்கப் பட்டுள்ள, பல வசதிகளை கொண்ட கடிகாரம், Stop Watch, 3D Mines Game, Chess விளையாட்டு மிகவும் கவருவதாக உள்ளது.
அலாரம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
இந்த சுவாரசியமான மென்பொருள் பயனாளர்களுக்கும், கணினிக்கும் இடையே ஒரு சிறந்த தொடர்பு சாதனமாகவும், வன்தட்டு, பிற தகவல் சேமிப்பு சாதனங்களில் மௌஸில் ஸ்க்ரோல் செய்து zoom செய்வதன் மூலமாகவே அனைத்து ஃபோல்டர்கள், கோப்புகளை கையாள முடிவது இதனுடைய சிறப்பம்சம்.
மெனுபாரும் ஜூம் செய்யும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.
உபயோகித்துப் பாருங்கள் உண்மையாகவே கழுகுப் பார்வைதான்!

.
மிகவும் பயனுள்ள அருமையான தகவல்,பகிர்வுக்கு நன்றி சார்.
ReplyDeleteஅருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்ல தகவல் நன்றி
ReplyDeleteZooming User Interface பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. தகவலுக்கு நன்றி!
ReplyDeleteZUI மனம் மயக்கும் தகவலாகத்தான் இருக்கிறது. சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி.
ReplyDelete