Tuesday, 29 June 2010

கால்குலேட்டரில் கணக்கு போடலாம். இணையத்தில் உலாவ முடியுமா?

விண்டோஸ் XP -இல் தரப்பட்டுள்ள கால்குலேட்டரில் இது சாத்தியமே!


உங்கள் கணினியில் IE , FireFox போன்ற இணைய உலாவிகளில்  ஏதேனும் பிரச்சனை உருவாக்கி, வேலை செய்யாமல் போனால், உடனடி உதவிக்கு கால்குலேட்டரை இணைய உலாவியாக பயன்படுத்த இயலும்.
கால்குலேட்டரை திறந்து கொள்ளுங்கள். Help menu, அல்லது F1 அழுத்தி help விண்டோவை  திறந்துக் கொள்ளுங்கள். 


இந்த திரையில் இடது மேல் புறத்தில் உள்ள ஐகானை (கேள்விக்குறியுடன் உள்ளது) க்ளிக் செய்யுங்கள். 


இதில் Jump to URL... என்பதை க்ளிக் செய்யுங்கள். 


அடுத்து திறக்கும் வசனப் பெட்டியில் Jump to this URL என்பதற்கு கீழாக உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில் URL ஐ டைப் செய்யுங்கள். (http://www. ஆகியவற்றை சேர்க்க மறவாதீர்கள்) 


இது போன்று உங்கள் அபிமான வலைப்பக்கங்களை விண்டோஸ் கால்குலேட்டர் உதவிப் பக்கத்தை கொண்டு திறக்க இயலும். 



.

13 comments:

  1. புதிய தகவல் நன்றி சார்.

    ReplyDelete
  2. அடங்கொன்னியா. இப்புடி வேற வழியிருக்கா:))

    ReplyDelete
  3. very useful post!! thxs for sharing br!!

    ReplyDelete
  4. எளிமையான விளக்கத்துடன் புதுமையான தகவல் நண்பரே..!இப்படியும் வழியிருக்கு என வியக்கவைக்கும் வகையில் சொல்லியிருக்கீங்க..! பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

    ReplyDelete
  5. விஷயங்களை தோண்டித்துருவி எடுத்து, தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் எங்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்களே! கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவன் மனம் இந்த செயலால் நிறைவடையாமல் இருக்குமா? உங்கள் உழைப்புக்கு அவன் என்ன பரிசு எப்போது கொடுப்பான் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த மாதிரி செய்ய முடியும் என்று எனக்கு தெரியவே தெரியாது.

    ReplyDelete
  6. உங்களின் சிறப்பம்சமே எளிய தமிழில் தருவதுதான். வாழ்த்துக்கள் சுா்யா.

    ReplyDelete
  7. Mr.SooryaVery useful info.Let us try and utilize.Thanks a Lot 4 d info.

    ReplyDelete
  8. வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள்..

    ReplyDelete
  9. சூர்யா அவர்களுக்கு மிகவும் நன்றி.பண்ணி பாத்தேன்.சந்தோசமா இருந்துச்சு.எப்படிலாம் யோசிக்கிறாங்கயா.

    ReplyDelete