கணினி பயனாளர்கள் தங்களது கணினியின் வன்தட்டை ஃபார்மேட் செய்து மறுபடியும் புதிதாக இயங்குதளத்தை நிறுவி விடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, சிஸ்டம் ஃபைல்களில் கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள்.
ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது 'டிவைஸ் ட்ரைவர் சிடி கையில் இல்லையே?' என்பதாக இருக்கலாம். காரணம் மிக சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை நிறுவிய பிறகு, உங்கள் கிராபிக்ஸ் கார்டு, சவுண்ட் கார்டு, வெப் கேமரா, பிரிண்டர், ஸ்கேனர் போன்ற சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்யேகமான டிவைஸ் ட்ரைவர்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அந்த டிவைஸ் ட்ரைவர் சீடிக்கள் உங்கள் வசம் இல்லாத பொழுது, உங்கள் கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ அல்லது ஒரே கான்பிகரேஷனை கொண்ட உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள் கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள டிவைஸ் ட்ரைவர்களை படி எடுத்து கொடுக்க என மிகவும் பயனுள்ள ட்ரைவர் பேக்கப் மற்றும் ரீஸ்டோர் மென்பொருள் Double Driver (தரவிறக்கச் சுட்டி இறுதியில்..)
இதிலுள்ள Scan பொத்தானை சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும் பட்டியலிடப்படும்.
இந்த பட்டியலிலிருந்து நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு செய்து Backup பொத்தானை அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப் பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை கொடுத்து விட்டால் போதும்.
நீங்கள் தேர்வு செய்திருந்த அனைத்து ட்ரைவர்களும் அதற்கான குறிப்பிட்ட ஃபோல்டர்களில் பேக்கப் ஆகியிருப்பது தனிச் சிறப்பு.
இயங்குதளத்தை மறுபடியும் நிறுவிய பிறகு இந்த பேக்கப் ஃபோல்டருக்குச் சென்று இங்குள்ள Double Driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.
.
உபயோகமான பதிவு,நன்றி நன்றி
ReplyDeleteஇளமுருகன்
நைஜீரியா
நன்றி இளமுருகன்!
ReplyDeleteமிக்க நன்றி.
ReplyDeleteபயனுள்ள இடுகை - நன்றி
ReplyDeleteநல்வாழ்த்துகள் சூர்யா
நட்புடன் சீனா
நல்லா இருக்கு சார்
ReplyDeleteசில நேரங்களில் os இன்ஸ்டால் செய்த பின் டிவைஸ் ட்ரைவர் இன்ஸ்டால் செய்யும் போது
driver installation failed ஆகிறது,திரும்ப ஃபார்மட் செய்ய வேண்டி இருக்கு,என்னா பன்னலாம் சார்
பயனுள்ள பதிவு திரு.சூர்யா சார்.....
ReplyDeleteஆஹா! நன்றி தலைவா
ReplyDeletereally very nice mr.Surya Kannan.......
ReplyDeleteஉழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅவசியமான பதிவு
பகிர்வுன்னு நன்றி
சூர்யா கண்ணன்....../
regularly without tired you are giving very useful in formations.. all they are very useful for regular users..really best work..thank you surya <<congratulations
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு.
ReplyDeleteபதிவுக்கு நன்றி சார்.
rknanbann
ReplyDeleteSuper Mr. Surya.. very very usefull info... Ethana naala kaathu irunthen itharkaka....
mikka nandri..
.விண்டோஸில் மட்டும்தான் இந்த பிரச்னை. ஆனால் இதற்கு தீர்வாக உங்கள் பதிவு இருக்கிறது.
ReplyDeleteஅருமையான பதிவு. நன்றி சூர்யா... இத்தனை நாள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் பெரும்பாடு பட்டுவிட்டேன்.
ReplyDeleteசூர்யா கண்ணன்,
ReplyDeleteஎப்போதும் போல் மிகவும் பயனுள்ள பதிவு.
//சைவகொத்துப்பரோட்டா said...
ReplyDeleteமிக்க நன்றி. //
வாங்க.. சைவகொத்துப்பரோட்டா!
//cheena (சீனா) said...
ReplyDeleteபயனுள்ள இடுகை - நன்றி
நல்வாழ்த்துகள் சூர்யா
நட்புடன் சீனா //
நன்றிங்க திரு. சீனா!
//ஜில்தண்ணி said...
ReplyDeleteநல்லா இருக்கு சார்
சில நேரங்களில் os இன்ஸ்டால் செய்த பின் டிவைஸ் ட்ரைவர் இன்ஸ்டால் செய்யும் போது
driver installation failed ஆகிறது,திரும்ப ஃபார்மட் செய்ய வேண்டி இருக்கு,என்னா பன்னலாம் சார் //
driver installation failed வந்தால் ஃபார்மெட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. அதிக பட்சமாக நீங்கள் அந்த ட்ரைவரை பதிந்ததற்கு முன்புள்ள நேரத்திற்கு சிஸ்டம் ரீஸ்டோர் செய்தால் போதுமானது..
//நித்தியானந்தம் said...
ReplyDeleteபயனுள்ள பதிவு திரு.சூர்யா சார்..... //
மிக்க நன்றிங்க திரு. நித்தியானந்தம்!
//வானம்பாடிகள் said...
ReplyDeleteஆஹா! நன்றி தலைவா //
தலைவா வாங்க!
//bala said...
ReplyDeletereally very nice mr.Surya Kannan....... //
நன்றி திரு. பாலா
//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
ReplyDeleteஉழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..
அவசியமான பதிவு
பகிர்வுன்னு நன்றி
சூர்யா கண்ணன்....../ //
மிக்க நன்றி திரு. மணி! உங்களுக்கும் எனது உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..
//vimalavidya said...
ReplyDeleteregularly without tired you are giving very useful in formations.. all they are very useful for regular users..really best work..thank you surya <
மிக்க நன்றி விமலவித்யா!
//Thomas Ruban said...
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு.//
மிக்க நன்றி தாமஸ் ரூபன்!
//RK நண்பன் said...
ReplyDeleterknanbann
Super Mr. Surya.. very very usefull info... Ethana naala kaathu irunthen itharkaka....
//
நன்றி RK நண்பன்!
//arulmozhi r said...
ReplyDelete.விண்டோஸில் மட்டும்தான் இந்த பிரச்னை. ஆனால் இதற்கு தீர்வாக உங்கள் பதிவு இருக்கிறது. //
உண்மைதாங்க.. உபுண்டுவில் இந்த பிரச்சனை வருவதில்லை..
மிக்க நன்றி அருள்மொழி!
//Thamizhan said...
ReplyDeleteஅருமையான பதிவு. நன்றி சூர்யா... இத்தனை நாள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் பெரும்பாடு பட்டுவிட்டேன். //
மிக்க நன்றி தமிழன்
//’மனவிழி’சத்ரியன் said...
ReplyDeleteசூர்யா கண்ணன்,
எப்போதும் போல் மிகவும் பயனுள்ள பதிவு. //
மிக்க நன்றி சத்ரியன்!
மிகவும் நன்றி நண்பரே.. பல தடவை இது போன்ற காரணங்களால் நான் தடுமாறி இருக்கிறேன்...
ReplyDeleteஉங்கள் உதவிக்கு மிகவும் நன்றி ...
தொடரட்டும் உங்கள் பணி ....
கணணி உபயோகப்படுதுகின்ற எல்லோரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று இது. பதிவுக்கு மிகவும் நன்றி சார்.
ReplyDeleteமிகத்தேவையான இடுக்கை
ReplyDeleteமிக்க நன்றி சூர்யா.
superb tips to backup driver files. Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
ReplyDeleteமிக உபயோகமான, தேவையான இடுகை. நன்றி.
ReplyDeleteஉங்களின் இந்த பதிவு அப்படியே வேறு ஒரு blogspot ல் வந்துஇருக்கிறது.எழுத்து படம் எதுவும் மாறவில்லை
ReplyDeletehttp://aakayam.blogspot.com/2010/05/blog-post_1695.html
ReplyDeleteஇந்த திருட்டையும் பாருங்க நண்பரே..
பதிவுக்கு நன்றி.ஒரு சந்தேகம்.நோக்கியா மொபைலில் இணைய சேவையை பயன்படுத்தி கம்பியூட்டர் TO மொபைல் அல்லது மொபைல் TO மொபைலில் YAHOO,GTALK போன்றவற்றின் மூலமாக இணைய அரட்டை(voice chat)செய்ய முடியுமா?முடியும் எனில்.
ReplyDeleteஎந்த போன்?என்ன மாடல்?என்ன விலை?
கேள்விக்கு உதவமுடியுமா?எனது மெயில் tvetsi@gmail.com
நின்னுட்டேன்..
ReplyDeleteஉபயோகமான பதிவு
ReplyDeleteமிகவும் உபயோகமானதொரு பதிவு சூர்யா. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவழக்கம் போல கலக்கீடீங்க நண்பரே உபயோகமான பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன் ப்ளாக் கை எதனை பேர் பார்த்தார்கள் என்ன்று எப்படி பார்ப்பது
ReplyDeletehttp://rasikan-soundarapandian.blogspot.com/
// soundarapandian said...
ReplyDeleteஎன் ப்ளாக் கை எதனை பேர் பார்த்தார்கள் என்ன்று எப்படி பார்ப்பது //
http://www.google.com/analytics/
சென்று உங்கள் ஜிமெயில் கணக்கை உபயோகித்து, ஒரு அக்கௌன்ட் ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள்..
பிறகு பார்வையாளர்கள் மட்டுமின்றி மேலும் பல உபயோகமான தகவல்களை பெறலாம்.
மிகவும் நன்றி சூர்யா ௧ண்ணன் அவர்களே
ReplyDeleteமிகவும் நன்றி சூர்யா ௧ண்ணன் அவர்களே
ReplyDeleteஉபயோகமான பதிவு
ReplyDelete:)
நன்றி அருமையான பதிவு,தொர்ந்து எழுதவும்.
ReplyDeleteநண்பர்களுக்கு வணக்கம்....
ReplyDeleteநான் பிளாக்கர்கு புது ஆள்..சூர்யா கண்ணன் அண்ணா உங்களின் பிளாக்கர் ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு.. பல தெரியாத தகவல்கள் சொல்லி இருக்கீங்க எனக்கு உங்களின் உதவி ரொம்ப தேவை ஹெல்ப் பண்ணுவிங்களா?
உங்க மெயில் ஐடி இல்லை என்றால் உங்களோட face book ஐடி தர முடியுமா ? கணணி சம்பந்தமாக தனிப்பட்ட கேள்விகளை கேட்டால் பதில் சொல்விங்களா அண்ணா ?
நான் இலங்கையில் இருந்து நண்பன்
Nazmeer