Saturday, 3 April 2010

நெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது எப்படி?

நாம் நெருப்பு நரி உலாவியில் நமக்கு தேவையான பல நீட்சிகளை தேவைப்படும் பொழுது தரவிறக்கி, பதிந்து கொள்கிறோம். ஆனால் சில சமயங்களில்  நெருப்பு நரி உலாவியின் புதிய பதிப்பை upgrade செய்த பிறகு, ஒரு சில நீட்சிகளை புதிய பதிப்பு  அங்கீகரிக்காமல் போகும். இது போன்ற சம்பவங்கள் நிகழும் பொழுது, உங்கள் உலாவியின் வேகம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே, இப்படி FireFox ஆல் அங்கீகரிக்கப்படாத, உங்கள் கணினியில் பயனற்று இருக்கும் நீட்சிகளை எப்படி நீக்குவது என்பதை பார்க்கலாம்.
FireFox இன் Tools மெனுவிற்குச் சென்று Add-ons க்ளிக் செய்து கொண்டு, திறக்கும் Add-ons வசனப் பெட்டியில் Extension டேபிற்கு செல்லுங்கள். இங்கு நீங்கள் நிறுவியுள்ள அனைத்து நீட்சிகளும் பட்டியலிடப்பட்டிருக்கும்.


இதில் பயனில் இல்லாத நீட்சி Grey ஆக இருக்கும். இவற்றில் உள்ள Un install பொத்தானை சொடுக்கி நீக்கி விடலாம். ஆனால் ஒரு சில நீட்சிகளில் Uninstall பொத்தானும் செயலிழந்து  இருக்கும்.


இது போன்ற நிகழ்வின் போது என்ன செய்யலாம்?

Start menu சென்று Mozilla Firefox folder இல் Mozilla Firefox (Safe Mode) ஐ க்ளிக் செய்து Safe mode இல் திறந்து கொண்டு மேலே குறிப்பிட்டுள்ளது போல Uninstall செய்து விட்டு, நெருப்பு நரியை  மூடிவிட்டு மறுபடி திறந்து பாருங்கள்.

இந்த வழியும் வேலை செய்யாது போனால்..விட்டுடுவமா.. நாமெல்லாம் எவ்வளவு பெரிய மூளைகாரயிங்க. நெருப்பு நரி உலாவியில் Help மெனுவில் Troubleshooting Information ஐ க்ளிக் செய்யுங்கள்.


 இனி திறக்கும் பக்கத்தில் Application Basics எனும் பகுதிக்கு கீழாக உள்ள Open Containing Folder என்ற பொத்தானை க்ளிக் செய்து,

உங்கள் உலாவியின் Profile Folder ஐ திறந்து கொள்ளுங்கள். இதில் உள்ள Extension Folder இல் நீங்கள் நிறுவிய அனைத்து நீட்சிகளும் தனித்தனி Folder இல்  இருக்கும்.


இதன் அட்ரஸ் பாரில் இந்த Folder உங்கள் கணினியில் எங்கு உள்ளது என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.

பிறகு மறுபடியும் Troubleshooting Information பகுதிக்கு செல்லுங்கள். இங்கு extensions பகுதியில் நீங்கள் நீக்க விரும்பும் நீட்சிக்கு நேராக உள்ள ID என்ன என்பதை குறித்துக் கொள்ளுங்கள். 


பிறகு நெருப்பு நரி உலாவியை மூடி விட்டு,  நீங்கள் ஏற்கனவே குறித்து வைத்திருந்த Profile\extensions folder க்கு My Computer வழியாக சென்று, நீங்கள் நீக்க விரும்பி, குறித்து வைத்துள்ள நீட்சியின் ID யின் பெயரில் உள்ள FolderDelete செய்து விடுங்கள். (இதை செய்யும் பொழுது உங்கள் உலாவி திறந்திருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.)

இனி மறுபடி உலாவியை திறக்கையில் தேவையற்ற நீட்சிகள் நீக்கப் பட்டிருப்பதோடு, உலாவியின் வேகத்திலும் மாறுதல் இருக்கும். இந்த முறை Firefox 3.5/3.6 பதிப்பிற்க்கானது..   

உஸ் ஸ் ஸப்பா!..

 (இது குறித்த பதிவை எழுத ஊக்குவித்த பாலா சார் அவர்களுக்கு நன்றி) 

அண்ணா! ஐயா! பதிவு திருடர்களே! தயவு செய்து பதிவுகளை திருடாதீர்கள்..

. 

11 comments:

  1. ஸ்ரீராம்.3 April 2010 at 7:56 am

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. எப்படிஎல்லமோ சிந்திக்கிரிங்க சார், ஒரு வழி இல்லை என்றாலும் எத்தேனையோ வழிகள் உண்டு என்று தெளிவாகவே கூறுகிறிர்கள், தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் எவ்வளவு சந்தோசம் இருக்கிறது தெரியுமா சார், நான் அறிந்த சிலவற்றை நானும் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். தொடரட்டும் உமது சேவை, நன்றி சார்.
    மேலும் சார், DVD இல் பதிவு உள்ள எனது மேடை நிகழ்ச்சிகளை (வீடியோ) நாட்டில் இருக்கும் உறவினருக்கு chat வழி எவ்வாறு இட்டுக் காண்பிப்பது என்று சொல்லிக்கொடுங்களேன் சார்.
    ஆவலுடன் எதிர் பார்கிறேன்

    ReplyDelete
  3. எப்படிஎல்லமோ சிந்திக்கிரிங்க சார், ஒரு வழி இல்லை என்றாலும் எத்தேனையோ வழிகள் உண்டு என்று தெளிவாகவே கூறுகிறிர்கள், தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் எவ்வளவு சந்தோசம் இருக்கிறது தெரியுமா சார், நான் அறிந்த சிலவற்றை நானும் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். தொடரட்டும் உமது சேவை, நன்றி சார்.
    மேலும் சார், DVD இல் பதிவு உள்ள எனது மேடை நிகழ்ச்சிகளை (வீடியோ) நாட்டில் இருக்கும் உறவினருக்கு chat வழி எவ்வாறு இட்டுக் காண்பிப்பது என்று சொல்லிக்கொடுங்களேன் சார்.
    ஆவலுடன் எதிர் பார்கிறேன்

    ReplyDelete
  4. தங்களின் பதிவுகள் அனைத்தையும் தொடர்ந்து படிப்பவன் நான். அதில் சில சிறந்தவற்றை எடுத்து தங்களின் அனுமதி இல்லாமல் குழுமத்தில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். யாம் பெற்ற இன்பம் பெருக இவையகம என நினைப்பவன் நான். மேற்ற்கொண்டு தங்களின் பதிவுகளை எடுக்கலாமா என அனுமதி கோருகிறேன்.

    ReplyDelete
  5. இளமுருகன்3 April 2010 at 2:54 pm

    பயனுள்ள தகவல் முயன்று பார்க்கிறேன்

    ReplyDelete
  6. அன்புக்குரிய சூர்யக் கண்ண‍ன் அவர்களுக்கு,
    நான் உங்களது வலைப்பூவின் புதிய வாசகன். உங்களது வலைப்பூ மிகவும் பயனுள்ள‍தாக இருக்கிறது. புதிய பல விடயங்களை அறிந்து கொள்ள‍ வாய்ப்ப‍ளித்துள்ள‍து.
    சூர்யா! தமிழ் 99 கீபோர்ட் சிஸ்டத்தில் யுனிகோட் தமிழாக டைப் பண்ணுவதற்கு வசதிகள் உள்ள‍னவா? விண்டோஸ் எக்ஸ்பியில் இது சாத்தியமாகுமா? ஏனெனில், விண்டோஸ் எக்ஸ்பியில் டாஸ்க் பாரில் தமிழ் மொழிக்கு மாற்றி டைப் பண்ணும் போது, அதன் கீபோர்ட் சிஸ்டம் வித்தியாசமாக இருக்கிறது. எனக்கு தமிழ் 99 கீபோர்ட் சிஸ்டத்தில் வேலை செய்வது மிகவும் இலகு. அதனால் இப்பிரச்சினைக்கு ஒரு வழி சொல்வீர்களா? அல்ல‍து இது தொடர்பான ஏதாவது இணையத்த‍ளங்கள் உள்ள‍னவா?

    ReplyDelete
  7. மணி (ஆயிரத்தில் ஒருவன்)3 April 2010 at 6:53 pm

    மிக்க நன்றி சூர்யா கண்ணன்...

    ReplyDelete
  8. சைவகொத்துப்பரோட்டா3 April 2010 at 7:37 pm

    அருமை!!!
    நன்றி.

    ReplyDelete
  9. வானம்பாடிகள்4 April 2010 at 5:01 am

    பெர்ஃபெக்ட் சூர்யா. நன்றி

    ReplyDelete
  10. கலகலப்ரியா4 April 2010 at 9:37 am

    சூப்பரு... ஏதோ இதுவாச்சும் நமக்கு உதவிச்சே... வாழ்க நீர் வளர்க உம் தொண்டு...

    ReplyDelete
  11. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫5 April 2010 at 3:05 am

    நல்ல தகவல் . பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete