கணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது.
உதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகிக்காமல் இது போன்ற தளங்களை விண்டோஸ் XP யில் Block செய்வது எப்படி என பார்க்கலாம்.
My Computer ல் விண்டோஸ் XP இயங்குதளம் உள்ள ட்ரைவிற்கு சென்று அங்கு
\Windows\System32\Drivers\etc என்ற கோப்புறைக்குள் சென்று அங்குள்ள hosts என்ற கோப்பை Notepad ல் திறந்து கொள்ளுங்கள்.
அந்த கோப்பின் கடைசி வரிக்கு சென்று அங்குள்ள 127.0.0.1 localhost என்ற வரிக்கு அடுத்த வரியில் 127.0.0.2 www.youtube.com எனவும், மற்றொரு தளத்தை Block செய்ய 127.0.0.3 www.sitename.com (உங்களுக்கு வேண்டியபடி) டைப் செய்து host கோப்பை சேமித்து. மூடி விடவும்.
கணினியை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து விட்டால் போதும். இனி அந்த குறிப்பிட்ட தளங்கள் உங்கள் கணினியில் திறக்காது.
பசங்க எல்லாம் இப்ப ஜகஜால கில்லாடிகளா இருக்காங்க! இதற்கும் வேற ஐடியா வைத்து இருப்பாங்க :-)) நல்ல டிப்ஸ் சிலருக்கு பயனளிக்கலாம்.
ReplyDeleteஉங்கள் புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு...கண்ணை உறுத்தாமல்
very useful!!
ReplyDeleteதகவலுக்கு நன்றி சூர்யா
ReplyDeleteபயன்படுத்துகிறேன்
நல்வாழ்த்துகள் சூர்யா
Very nice..
ReplyDeleteமீண்டும் அவற்றை திறக்க
ReplyDeleteவேண்டுமானால் என்ன
செய்ய வேண்டும் என்பதை
நேரம் கிடைக்கும் போது எழுதுங்களேன்.
நன்றி.
ரத்தின சுருக்கமாக பெரிய விஷயத்தை கூறி விட்டீர்கள். அருமை.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
உபயோகமான பதிவு
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
//பசங்க எல்லாம் இப்ப ஜகஜால கில்லாடிகளா இருக்காங்க! இதற்கும் வேற ஐடியா வைத்து இருப்பாங்க :-)) நல்ல டிப்ஸ் சிலருக்கு பயனளிக்கலாம்.//
ReplyDeleteநீக சொன்னது சரிதான்!.. ஆனால் Administrator கணக்கில் சென்றால் மட்டுமே அந்த கோப்பை மறுபடி மாற்றியமைக்க முடியும்..
// Mrs.Menagasathia said...
ReplyDeletevery useful!!//
நன்றி மேனகா!
//cheena (சீனா) said...
ReplyDeleteதகவலுக்கு நன்றி சூர்யா
பயன்படுத்துகிறேன்
நல்வாழ்த்துகள் சூர்யா//
நன்றிங்க சீனா
// mohamed said...
ReplyDeleteVery nice..//
நன்றி முஹமது
//வரதராஜலு .பூ said...
ReplyDeleteரத்தின சுருக்கமாக பெரிய விஷயத்தை கூறி விட்டீர்கள். அருமை. //
நன்றிங்க வரதராஜலு
//kavitha said...
ReplyDeleteஉபயோகமான பதிவு
பகிர்வுக்கு நன்றி
//
நன்றிங்க கவிதா!
wow... great idea! Thanks for sharing friend.
ReplyDeleteவணக்கம் அண்ணா ரொம்ப பயனுள்ள செய்தி இத திரும்ப திறப்பது எப்படி என்றும் எழுதுங்களேன் ப்ளீஸ் நன்றி
ReplyDeleteவணக்கம் அண்ணா ரொம்ப பயனுள்ள செய்தி இத திரும்ப திறப்பது எப்படி என்றும் எழுதுங்களேன் ப்ளீஸ் நன்றி
ReplyDeleteகுறிபிட்ட முகவரிகளை மட்டும் அனுமதிக்கும் படி செய்திட ஒரு வழி சொல்லுங்கள்.அலுவலகத்தில் நான் இதை virus scaner மூலம் செய்துள்ளேன்.சில சமயம் அது நன்றாக வேலை செய்வது இல்லை.
ReplyDeleteyou can access the blocked sites if you google the required site and click the google's search result
ReplyDeleteஅண்ணே எனக்கு ஒரு சந்தேகம்!
ReplyDeleteகேட்டுத் தொலை'ன்றீங்களா! சரி, இத administrator account-ல, (அதாவது built in administrator) மட்டும் தான் பண்ண முடியுங்களா, இல்ல administrative accounts எதுல வேணாலும் பண்ணலாம்களா?
ஏனா, administrative accounts-ல கூட பண்ணலாம்னு நெனைக்றேங்க!
முன் நன்றிகள்!