.
கூகிள் க்ரோம் உலாவியை பயன்படுத்துபவர்கள் தாங்கள் விரும்பும் வலைப் பக்கங்களை Screenshot எடுத்து வைக்க தனியான மென்பொருள் அல்லாமல் கூகிள் க்ரோமில் பயன்படுத்தக் கூடிய Webpage Screenshot நீட்சி மிகவும் பயனுள்ளதாக அமைக்கப் பட்டுள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
கூகிள் க்ரோம் உலாவியை பயன்படுத்துபவர்கள் தாங்கள் விரும்பும் வலைப் பக்கங்களை Screenshot எடுத்து வைக்க தனியான மென்பொருள் அல்லாமல் கூகிள் க்ரோமில் பயன்படுத்தக் கூடிய Webpage Screenshot நீட்சி மிகவும் பயனுள்ளதாக அமைக்கப் பட்டுள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த நீட்சியை கூகிள் க்ரோமில் பதிந்து கொள்வது எளிதான காரியமாகும்.
.
இதனை பதிந்து கொண்ட பிறகு, கூகிள் க்ரோமில் உள்ள டூல் பாரில் ஒரு கேமரா படவுருவில் இந்த கருவி அமைந்திருக்கும்.
தேவையான வலைப்பக்கத்தை Screenshot எடுக்க, அந்த குறிப்பிட்ட வலைப்பக்கத்தை திறந்து கொண்டு இந்த படவுருவை சொடுக்கவும். இப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில்,
Visible screenshot பொத்தானை சொடுக்கினால் க்ரோம் உலாவியில் தற்பொழுது திரையில் தெரியும் வலைப்பக்க பகுதி ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டு திரையில் சிறிய அளவில் காண்பிக்கும்.
திரையில் உள்ளது மட்டுமின்றி வலைப்பக்கம் முழுவதுமாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்க வேண்டுமெனில், All page screenshot என்ற பொத்தானை சொடுக்கவும்.
இங்கு Click here to open the image எனும் லிங்கை சொடுக்கினால், புதிய டேபில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்ட படம் திறக்கும். இந்த பக்கத்தில் மெளசின் வலது க்ளிக் செய்து Save Image as என்பதை context மெனுவில் சொடுக்கி உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.
மேலும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் முன்னர் திரையின் அளவை நமது தேவைக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க Resize the window before the capture எனும் வசதியை பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த நீட்சி Offline லும் வேலை செய்யும் என்பது இதனுடைய சிறப்பம்சமாகும்.
(இந்த நீட்சி கூகிள் க்ரோம் உலாவிக்கானது மட்டுமே என்பதால் கூகிள் க்ரோம் உலாவில் இருந்துதான் இதனை பதிந்து கொள்ள முடியும்.)
.
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஉபயோகமான குறிப்பு. இதுவரை வேறு ஒரு ஸ்க்ரீன்ஷாட் உபயோகித்துள்ளேன். க்ரோம் உபயோகித்தும், எக்ஸ்டென்ஷன் பட்டன் பார்த்தும் இது பார்த்ததில்லை. நன்றிகள்
ReplyDeleteGood effort u took to share with us SURYA
ReplyDeleteசூப்பராக இருக்கு நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.
ReplyDeleteநன்றி சூர்யாகண்ணன்
ReplyDelete