.
நாம் வழக்கமாக நமது பென்ட்ரைவில் அத்தியாவசியமான கோப்புகளையும் அவற்றை உள்ளடக்கிய கோப்புறைகளையும் (Folders) சேமித்து வைப்பது வழக்கம். மால்வேர் மற்றும் ஸ்பைவேர்கள் உடனடியாக மற்றும் எளிதாக தாக்குவது பென் ட்ரைவை என்பதனால் சில சமயங்களில் நமது அதி முக்கியமான கோப்புறைகள் மறைக்கப் பட்டுவிடலாம். அதாவது உங்கள் பென் ட்ரைவில் கோப்புறைகள் இருக்கும் ஆனால் உங்களால் பார்க்கவோ, உபயோகிக்கவோ இயலாது. பென் ட்ரைவில் Usage space ஐ சோதித்தால் கோப்புறைகள் மறைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.
ஒரு சில மால்வேர்களின் வேலையே பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூற்றை (attribute) மாற்றி விடுவதுதான். இதனால் உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூறு Hidden ஆக மாறி விடுகிறது. இதை சரி செய்ய Explorer -ல் Attribute பகுதிக்குச் சென்றால் அங்கு Attribute வசதி செயல் இழக்கம் (Greyed out) செய்யப்பட்டிருக்கும். ஒரு சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் மூலமாக முயற்சி செய்தாலும் சில சமயங்களில் மீட்பது சிரமம்தான்.
இந்த நிலையில் என்ன செய்யலாம்?
முதலில் உங்கள் பென் ட்ரைவின் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொள்ளுங்கள். உதாரணமாக I: என வைத்துக் கொள்வோம். Command Prompt ஐ திறந்து கொண்டு i: என டைப் செய்து என்டர் கொடுங்கள்.
இனி வரும் I:> என்ற ப்ராம்ப்ட்டில் attrib -r -s -h *.* /s /d என டைப் செய்து என்டர் கொடுங்கள்.
உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் அளவைப் பொறுத்து இந்த கட்டளை செயல்படும் நேரம் மாறுபடும். மறுபடியும் I:> ப்ராம்ப்ட் வந்த பிறகு Exit என டைப் செய்து என்டர் கொடுத்து விண்டோஸ் க்கு வந்து விடலாம். இப்பொழுது My Computer சென்று பென் ட்ரைவை திறந்து பாருங்கள். உங்கள் கோப்புறைகள் மீட்டெடுக்கப் பட்டிருப்பதை காணலாம்.
இந்த பணியை செய்ய Files & Folders Reset Tool என்ற கருவி உள்ளது. ஆனால் ஒரு சில பென் ட்ரைவ்களில் இது சரியாக வேலை செய்யவில்லை. எதற்கும் முயற்சித்துப் பாருங்கள்.
.
நல்ல பதிவு.நன்றி..
ReplyDeleteநன்றி சிவகுமார்
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு.
ReplyDeleteநன்றி BONIFACE
ReplyDeleteஅருமையான தகவல் ...
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு நன்றி
ReplyDeleteநன்றி பெரோஸ்
ReplyDeleteநன்றி ஸ்ரீ கிருஷ்ணா
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு.நன்றி
ReplyDeleteகொஞ்சம் புரியாட்டியும் படித்து தெரிந்து கொள்கிறேன் சூர்யா நன்றி தகவல்களுக்கு
ReplyDeleteஎப்படி உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது.
ReplyDeleteHAI THIS IS SHUNMUGAM YOUR INFORMATIONS ARE VERY NICE..PL DOING LIKE THIS IN UR BLOG http://tvs50.blogspot.com/2010/01/blogger-posts-to-pdf-tamil.html
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல் பகிர்வு :-)
ReplyDeleteVery useful information,It helped me to recover my infected pen drive.Thank you Surya.
ReplyDelete