கணினி உபயோகிப்பவர்களில் சிலர் தாங்கள் உருவாக்கும் கோப்புகள், வலைப்பக்கங்களிலிருந்து சேமித்து வைக்கும் கோப்புகள், படங்கள் ஆகியவற்றை அவர்களது டெஸ்க் டாப்பிலேயே சேமித்து வைத்து விடுகிறார்கள். சில சமயங்களில் திரை முழுக்க ஐகான்கள் நிரம்பி வழியும்.
இது போன்ற கோப்புகளை சில தினங்கள் கழித்து பார்க்கும் பொழுது 'இதை எதற்காக சேமித்து வைத்தோம்' என்பதுகூட மறந்து போகும். இப்படி கேட்பாரற்று கிடக்கும் கோப்புகளை அவதானித்துக் கொண்டிருக்கும் விண்டோஸ் இயங்குதளம் சும்மா இருக்குமா?
விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை உபயோகிப்பவர்கள் சில சமயங்களில் "There are unused icons on your desktop" என்கிற பலூன் அறிவிப்பை கவனித்திருக்கலாம்.
இந்த பலூன் அறிவிப்பை எப்படி நீக்கலாம்?
Desktop -இல் ஐகான்கள் ஏதுமற்ற பகுதியில் வலது கிளிக் செய்து, Properties க்ளிக் செய்து Display Properties திரைக்கு வாருங்கள். இதில் Desktop டேபிற்குச் சென்று Customise Desktop பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்! இனி மேலே குறிப்பிட்டது போன்ற பலூன் அறிவிப்பு வராது.
.
புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html
ReplyDeleteவிருதுக்கு மிக்க நன்றி சிங்கக்குட்டி!
ReplyDelete