Thursday, 24 December 2009

இப்படி இருந்த டெக்ஸ்ட் எப்புடி ஆயிடுச்சு

நம்மில் பலர் இன்னமும் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.  இதில் நாம் பணிபுரியும் பொழுது வேர்டு, எக்சல் போன்றவற்றில் வேலை செய்யும் பொழுது அல்லது இணைய உலவிகளில் பணி புரியும் பொழுது,  அவற்றில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக அதாவது விஸ்டா, விண்டோஸ் 7  போன்ற இயங்குதளங்களில் உள்ளது போன்று இல்லாமல் கீழே உள்ள படத்தில் உள்ளது போல இருப்பதை கவனித்திருக்கலாம்.


இப்படி உள்ள தோற்றத்தில் பணிபுரியும் பொழுது கண்கள் விரைவில் சோர்வடைந்து விடுகின்றன. இப்படி உள்ள தோற்றத்தை கீழே படத்தில் காண்பிக்கப் பட்டிருப்பது போல தெளிவாக மாற்ற என்ன செய்யலாம்.



மைக்ரோசாப்டின்  ClearType Tuner PowerToy என்ற கருவி இந்த வசதியை தருகிறது. இது ஒரு Control panel applet ஆகும். இதை தரவிறக்கம் செய்து நிறுவிய பிறகு உங்கள் விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் Clear Type Tuner என்ற அப்லெட் உருவாகியிருப்பதை கவனிக்கலாம். இதை ரன் செய்து தொடரும் விசார்டில் நமக்கு தேவையான வசதிகளை தேர்வு செய்து முடித்தப்பின், இது போன்ற கண்களை உறுத்தாத தோற்றத்தை பெறலாம்.




.

12 comments:

  1. பின்னோக்கி25 December 2009 at 12:26 am

    நன்றிங்க. இப்ப டியூன் பண்ணுனோன்ன, இன்னமும் நல்லா படிக்க முடியுது.

    ReplyDelete
  2. மிகவும் உபயோகமான தகவல். இப்பொழுது எனது Monitor தெளிவாக இருக்கிறது. வாழ்த்துக்களும் நன்றிகளும்.Sukumar R

    ReplyDelete
  3. சிங்கக்குட்டி25 December 2009 at 10:31 pm

    ரொம்ப அருமையான பகிர்வு.பயனுள்ள தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்26 December 2009 at 5:48 am

    நன்றி சிங்கக்குட்டி!..,

    ReplyDelete
  5. சூர்யா ௧ண்ணன்26 December 2009 at 5:48 am

    நன்றி EGreens!..,

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்26 December 2009 at 5:48 am

    நன்றி பின்னோக்கி!..,

    ReplyDelete
  7. யாஹுவில் தேவையான பதிவுகளை போல்டர் ஆப்ஷன் கொடுத்து நேம் கொடுத்து சேமித்து போல் ஜீமெயில் எப்படி போல்டர் போடுவது.

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்28 December 2009 at 5:21 am

    வாங்க ஜலீலா! Gmail லில் வலது மேற்புறமுள்ள செட்டிங்க்ஸ் லிங்கை கிளிக் செய்து Labels சென்று புதிதாக ஒரு லேபிளை உருவாக்குங்கள். பிறகு உங்கள் ஜிமெயில் -லில் இடது புற பேனில் நீங்கள் உருவாக்கிய லேபில் வந்து விடும், இனி தேவையானவற்றை தேர்வு செய்து Move to சென்று தேவையான லேபிளில் மாற்றிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  9. நன்றி. உங்கள் டிப்ஸ் மிகவும் உபயோகமாக உள்ளது.

    ReplyDelete
  10. சூர்யா ௧ண்ணன்30 December 2009 at 5:33 am

    நன்றி வெற்றி மகள்!

    ReplyDelete
  11. சூப்பர் சூர்யா கண்ணன் இப்போது தான் நிறுவினேன். அசத்தலாக இருக்கிறது.எழுத்துக்கள் அழுத்தமாக தெரிகின்றன. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.


    அ.பிரகாஷ்

    ReplyDelete
  12. ந.ர.செ. ராஜ்குமார்23 April 2010 at 3:17 am

    xpயில் தமிழை பயன்படுத்துவர்களுக்கு தேவையானத் தகவல்.
    properties-->effects சென்றும் cleartypeஐ enable செய்து கொள்ளலாம்.

    ReplyDelete