நாம் டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் புகைப்படங்கள் கேமராவில் நாம் அமைத்துள்ள மாற்றங்களுக்கு ஏற்றவாறு கோப்புகளின் அளவுகள் மாறுபடும். சில சமயங்களில் 2 எம் பி க்கும் மேலாக இருக்கலாம்.
இப்படிப்பட்ட கோப்புகளை மின்னஞ்சல் செய்யும் பொழுது குறைந்த வேகமுள்ள இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த படங்களை சிறிதாக்க மைக்ரோசாப்டின் பவர் டாய்ஸ் இமேஜ் ரீசைசர் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.
இதை உங்கள் கணினியில் நிறுவியவுடன், உங்களுக்கு தேவையான படத்தை வலது கிளிக் செய்தால் Context menu வில் Resize Pictures என்ற வசதி தோன்றியிருப்பதை காணலாம்.
இந்த வசதியை கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் தரப்பட்டிருப்பது போல திறக்கும் விண்டோவில், உங்களுக்கு தேவையான அளவுகள் மற்றும் வசதிகளை தேர்வு செய்து பயனடையலாம்.
.
தகவலுக்கு நன்றி நண்பர் சூரியா அவர்களே.
ReplyDelete"இப்படிப்பட்ட கோப்புகளை மின்னஞ்சல் செய்யும் பொழுது குறைந்த வேகமுள்ள இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்."மின்னஞ்சலில் மட்டும் பட ஆளவைக் குறைத்தால் போதும் என்றால், அதற்கு மிக அருமையான இலவச மேன்பொருள் "shrinkpic" அசல் படத்தில் எந்தவித மாற்றமும் செய்யாது. ஸிஸ்டம் ட்ரேயில் இருந்து கொண்டு மின்னஞ்சலில் படங்களை இணைக்கும்போது மட்டுமே செயல்படும். மூன்று விதமாக நாம் சுருக்கும் ஆளவினைத் தேர்வு செய்யலாம். நொடிகளில் 2 mbக்கும் அதிகமான படங்களை 100kbக்குள் சுருக்கி இணைத்துவிடும். பார்ப்பவர்களுக்கு வித்தியாசமே தெரியாது. பயன்படுத்திப் பாருங்கள்.
ReplyDeleteஅருமையான ப்ளாக் தலைவரே உங்களுடையது பல அருமையான விஷயங்களை எளிமையாக விளக்குகிறீர்கள்.first of all அதற்க்கு ஒரு பெரிய நன்றி .வெகு நாட்களை உங்களை வாசிக்கிறேன் இப்பொழுது தான் முதல் பின்னூட்டம் இடுகிறேன்.தொடருங்கள்.....தொடர்கிறோம் .....
ReplyDeleteஅப்புறம் தலைவரே..ஒரு சந்தேகம்...(அதானே பார்த்தேன் புதுசா கமெண்ட் வருதேன்னு......??? என்று திட்டுவது கேட்கிறது !)என் கணினியில் தமிழ் ப்ளாக் எல்லாம் படிக்க முடிகிறது....அனால் கீழே task bar , favourites மற்றும் tab களில் கட்டம் கட்டமாக தான் தெரிகிறது.அங்கும் தமிழ் தெரியா என்ன செய்ய வேண்டும் தலைவரே.......தையை கூர்ந்து உதவுங்கள்.......("ungoiala overa pammuraane இவன்....!!!!!!!!!!")
ReplyDelete