நெருப்புநரி உலவியில் நாம் வலைப்பக்கங்களை மேய்வது கொண்டிருக்கும் வேளையில், நமக்கு தேவையான விபரங்கள் அடங்கிய வலைப்பக்கத்தில், தேவையற்ற விளம்பரங்கள், விஜிட்கள், டைட்டில்கள், பின்னூட்டங்கள் இவற்றை எல்லாம் தவிர்த்து, நாம் விரும்பும் விவரத்தை மட்டும் பிரிண்ட் செய்ய வேண்டுமெனில், அவற்றை காப்பி செய்து, பின் எடிட் செய்து, பிறகு பிரின்ட் செய்ய வேண்டும்.
இந்த பணியை சுலபமாக்க இதோ உங்களுக்காக ஒரு எளிய புக்மார்க்லேட் PrintWhatYouLike. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.
இந்த நீட்சியை நிறுவியபிறகு, இதற்கான டூல் பார் பட்டனை, உங்கள் உலவியில், உள்ள டூல் பாரில் உங்களுக்கு வசதியான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு View மெனுவில் Toolbar சென்று Customise கிளிக் செய்தால் மேலே உள்ளதுபோல் டயலாக் பாக்ஸ் வரும், இதில் PrintWhatYouLike என்ற பட்டனை ட்ராக் செய்து உங்கள் டூல்பாரில் தேவையான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
இனி எந்த வலைப்பக்கத்தில் பிரிண்ட் செய்ய வேண்டுமோ அந்த பக்கத்தில் இந்த பட்டனை அழுத்தினால் போதும்.
உங்கள் உலவியின் சைட் பாரில், அனைத்து கட்டளைகளுடன், நீட்சி திறந்து விடும், இனி உங்கள் வலைப்பக்கத்தில் எந்த பகுதியெல்லாம் தேவையில்லையோ அவற்றை தேர்வு செய்து (மஞ்சள் நிறத்தில் காணப்படும்) டெலிட் செய்து விட்டு, பிரிண்ட் செய்யலாம். இதில் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. அவற்றையும் முயற்சித்துப்ப் பாருங்கள்.
இதில் Auto Format -ல் உள்ள Do it For me என்ற பொத்தானை அழுத்தினால் அதுவாகவே ஓரளவிற்கு, நமக்கு தேவையற்ற விளம்பரங்கள், படங்கள் ஆகியவற்றை நீக்கிவிடும்.
.
ஆஹா. நன்றி சூர்யா.
ReplyDeleteஉபயோகமான விஷயம் சூர்யா சார்...நான் இது போன்ற உபயோகமான பதிவுகளை நான் பங்கு கொள்ளும் குழுமத்தில் இடுகிறேன் சூர்யா சார், உங்கள் வலைப்பக்க முகவரியோடு...ஆட்சேபனை ஏதுமில்லையல்லவா?
ReplyDelete