OpenOffice என்பது Microsoft Offiice க்கு சரியானதொரு மாற்று கட்டற்ற இலவச மென்பொருள் ஆகும். இது Linux, Windows மற்றும் Mac இயங்குதளங்களில் இயங்கும்படியாக வெவ்வேறு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு உபுண்டு அல்லது வேறு லினக்ஸ் தளங்களுக்கு மாறும் உத்தேசம் இருந்தால், இதை பயன்படுத்தி பழகிக்கொள்ளுங்கள். பயன்படுத்துவதில் பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதனால் எளிதாக பழகிக்கொள்ளலாம்.
மைக்ரோசாப்ட் ஆபீசின் முக்கிய வசதிகளான Word, Excel,Access, Publisher மற்றும் PowerPoint ஆகியவற்றிற்கு ஈடான வசதிகள் இதில் உள்ளன. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.
இதை கணினியில் பதிந்து கொள்வதும் எம்.எஸ் ஆபீஸ் போலத்தான்..,
இதிலுள்ள OpenOffice.Org Writer என்பது மைரோசாப்ட் வேர்டுக்கு ஈடானது.,
OpenOffice.Org Calc என்பது மைரோசாப்ட் Excel க்கு மாற்று மென்பொருள்..
OpenOffice.Org Impress என்பது மைரோசாப்ட் PowerPoint இற்கு மாற்று,
OpenOffice.Org Draw என்பது MS Publisher க்கு மாற்றான, மற்ற DTP மென்பொருட்களில் உள்ள சில வசதிகளும் உள்ளடக்கிய ஒரு வெக்டார் கிராபிக்ஸ் எடிட்டராகும்.
இதில் ஆபீஸ் 2007 இல் உள்ள ரிப்பன் மெனு மட்டும்தான் மிஸ்ஸிங்..,
இதைப் போன்ற வசதிகளுடன் IBM Lotus Symphony என்ற மென்பொருளும் இலவசமாக கிடைக்கிறது.
.
நன்றி தலைவா!
ReplyDeleteநன்றி தலைவா
ReplyDeleteநேத்துதான் இதை டவுன் லோடு பண்ணி, வீட்டுக் கணினியில் போட்டேன்.ரொம்ப நல்லா இருக்குங்க..
ReplyDeletepl send address
ReplyDeleteநன்றி திரு. இராகவன்
ReplyDeleteநன்றி தலைவா!
ReplyDeleteஇதைக்கொண்டு உருவாக்கப்படும் கோப்புக்களை, வேர்ட்டில் ஓப்பன் செய்ய முடியுமா ??---ரொம்ப நாளாக சந்தேகம். கீரை விற்பதாக உங்கள் ப்ரபைலில் எழுதியிருக்கிறீர்கள். அது எனக்கு புரியவில்லை. கீரை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் ?
ReplyDelete